Wednesday, November 14, 2012
அட்டளைச்சேனை கல்விக் கல்லூரி பீடாதிபதியாக காத்தான்குடியின் கல்விமான் எம்.ஐ.எம்.நவாஸ் அவர்கள் நியமனம்!
Wednesday, November 14, 2012
News
அட்டளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக எம்.ஐ.எம்.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த நவம்பர் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அட்டளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்
இவர் தனது ஆரம்பக்கல்வியை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயம், அல்ஹிறா வித்தியாலயம் என்பவற்றில் கல்வி கற்ற எம்.ஐ.எம்.நவாஸ் அவர்கள், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லாரியில் கல்விப் பொதுத்தராதர உயர் தர வகுப்பு வரை கல்வி கற்றார்.
கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான நவாஸ் கனடாவில் முதுமானி;ப் பட்டத்தையும் கல்வி டிப்ளோமா, தகவல் தொழிநுட்ப டிப்ளோமா மற்றும் அனர்த்த முகாமைத்துவ டிப்ளோமா ஆகியவற்றை இந்தியாவிலும் பெற்றுள்ளார்.
காத்தான்குடியை சேர்ந்த இவர் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் உதவி விரிவுரையாளாரக, விரிவுரையாளராக, சிரேஷ்ட விரிவுரையாளாராக, உப பீடாதிபதியாக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.