போர்த்துக்கேயராலும் ஒல்லாந்தராலும் மூன்று நூற்றாண்டுகளாகக் கைப்பற்ற முடியாது போன கண்டி இராச்சியத்தை ஆங்கிலேயரால் எவ்வாறு கைப்பற்ற முடிந்தது என்பது தொடர்பாக பார்ப்போம் .இதனுடன் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்கள் வருமாறு.
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்ஹ ((1798 - 1815)
இம் மன்னன் நாயக்க வம்சத்தவனாவான். இவன் நேரடி வாரிசாக இருக்கவில்லை.
ராஜாதிராஜசிங்ஹ மன்னனின் மனைவியின் சகோதரியின் பிள்ளையான கண்ணுசாமி, மன்னனின் விருப்பப்படி அரசனாக்கப்பட்டான்.
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்ஹ ((1798 - 1815)
இம் மன்னன் நாயக்க வம்சத்தவனாவான். இவன் நேரடி வாரிசாக இருக்கவில்லை.
ராஜாதிராஜசிங்ஹ மன்னனின் மனைவியின் சகோதரியின் பிள்ளையான கண்ணுசாமி, மன்னனின் விருப்பப்படி அரசனாக்கப்பட்டான்.
பிலிமதலாவ ராஜாதி ராஜசிங்ஹனும் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்ஹனும் முதலமைச்சர் (மஹா அதிகாரம்) ஆவான். மன்னனின் கட்டளைப்படி ஸ்ரீ விக்கிரமசிங்ஹனை சிறு பிள்ளையாக இருந்தபோதே வளர்த்து ஆளாக்கி அரசனாக்கினான். ஆனால், மன்னனைப் பெயரளவுக்கு வைத்துக் கொண்டு தானே ஆளத் திட்டமிட்டான். இது கைகூடாமற் போகவே மன்னனுக்கு எதிராக ஆங்கிலேயரைத் தூண்டிவிடும் கைங்கரியத்தில் இவன் இரகசியமாக ஈடுபடத் தொடங்கினான். பிரட்ரிக் நோத் (1802 - 1805) முதலாவது ஆங்கிலேய ஆளுநரான இவன் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு கண்டி இராச்சியத்தினூடாக பாதை ஒன்றை அமைத்துக் கொள்ள மன்னனிடம் அனுமதி கோரினார். அதனை மன்னன் நிராகரிக்கவே இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கண்டிக்குச் சென்ற கரையோர வியாபாரிகள், ஒற்றர்கள் எனக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டமை போருக்கான காரணமாய் அமைந்தது. இதனைப் பின்னாலிருந்து நடத்துவித்த சூத்திரதாரி பிலிமதலாவை ஆவான். இதனை மன்னரோ ஆளுநரோ அறிந்திருக்கவில்லை. ஆழம் அறியாமல் காலை விட்ட பிரட்ரிக் நோத் முதலில் வெற்றி பெற்றான். சிம்மாசனத்துக்கு உரியவனான தமது அடைக்கலத்தில் இருந்த முத்துசாமியை அரசனாக்கிவிட்டு கொழும்புக்கு திரும்பினான். மீண்டு வந்த மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்ஹ நாட்டைக் கைப்பற்றி ஆங்கிலேயர்களின் வீரர்களைக் கைதியாக்கி முத்துசாமிக்கு மரண தண்டனை விதித்தான். தோமஸ் மெயிட்லண்ட் (1805 - 1812) இரண்டாவது ஆளுநரான இவன் மன்னனுடன் நல்லுறவை வளர்க்கப் பெருமுயற்சி செய்தான். ஆயினும் கைதிகளை மீட்டுக் கொள்ள இவனால் இயலவில்லை. ரொபட் பிரௌன்றிக் (1812 - 1820) பிலிமத்தலாவை மன்னனைக் கொல்லச் செய்த சதி அம்பலமாகவே மரண தண்டனைக்கு உள்ளானான். இதே நேரத்தில் மூன்றாவது ஆளுநராக இவன் இலங்கைக்கு வந்தான். மன்னர் அணி - முதலமைச்சர் அணி என கண்டி இராச்சியம் இரண்டு படவே சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த ஆளுநன் திட்டமிட்டான். ஜோன் டொயிலி இலங்கையில் கடமையாற்றிய ஆங்கிலேய உத்தியோகத்தனாவான். சிங்கள, பாளி மொழிகளைக் கற்று பௌத்த சமயத்தைப் பற்றியும் நல்ல விளக்கத்தைப் பெற்றிருந்தான். திறமை வாய்ந்த அதிகாரியுமாவான். பிரௌன்றிக் கண்டியைக் கைப்பற்றுவதற்கு முக்கியமான காரணம் இவனேயாவான். இதனால் கண்டி கைப்பற்றப்பட்ட பின்னர் அதன் பொறுப்பாளனாக இவனே நியமிக்கப்பட்டான். எஹலபொல பிலிமதலாவையின் இடத்திற்கு நியமனம் பெற்ற எஹலபொலைக்கும் மன்னருக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறியால் அவன் கண்டி நகரிலிருந்து சப்ரகமுவ பிரதேசத்திற்கு இடமாற்றப்பட்டான். இதனால் கோபங் கொண்டு பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டான். இறுதியில் தோல்வியுற்று ஆங்கிலேயரைத் தஞ்சமடைந்தான். இதனால் கோபம் கொண்ட மன்னன் அவனைச் சார்ந்தோருக்கும் அவனது குடும்பத்தினருக்கும் கொடூரமான முறையில் மரணதண்டனை விதித்தான். இதன் காரணமாக மன்னனை வெறுத்த மக்களின் ஆதரவைப் பயன்படுத்தி எஹலபொலையின் உதவியுடன் ரொபட் பிரௌன்றிக் 1815 இல் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டான். மொல்லிகொட எஹலபொலையை அடுத்து முதலமைச்சரானவன். கடைசி வரை மன்னனுக்கு விசுவாசமாகவே செயற்பட்டான். கண்டி சுதந்திரத்தை இழந்த பின்னர் ஆங்கிலேயரின் நம்பிக்கைக்கு உரியவனானான். கண்டிய பிரதானிகளும் ஆளுநரும் ‘கண்டிய ஒப்பந்தத்தை’ எழுதிக் கொண்டனர். மன்னன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான். கண்டி இராச்சியம் சுதந்திரத்தை இழந்ததோடு முழு நாடும் 1815 ஆம் ஆண்டு ஆங்;கிலேயர் வசமானது. கலவரங்கள் ஆங்கிலேய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனி கரையோரத்தைக் கைப்பற்றிய அடுத்த வருடமே அவர்களது வரி முறையை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி புரிந்தனர். இதற்கு மன்னன் ராஜாதி ராஜசிங்ஹ ஆதரவளித்ததாக ஆங்கிலேயர் சந்தேகப்பட்டனர். கண்டியை கைப்பற்றி மூன்றாவது வருடத்தில் தம்மை விடுவித்துக் கொள்ள கண்டியப் பிரதானிகள் சுதந்திரப் போரை நடத்தினர். இது தோல்வியில் முடிவடைந்தது. மீண்டும் 30 வருடங்களின் பின்னர் இரண்டாவது சுதந்திரப்போரை விவசாயிகள் ஆரம்பித்து அதிலும் தோல்வியுற்றனர். 1915 ஆம் ஆண்டில் சிங்கள - முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஆரம்பித்தது. இதனையும் ஆங்கிலேயர் சுதந்திரப்போராகவே கருதினர். கண்டி கைப்பற்றப்பட்டு நூறாவது ஆண்டில் இது இடம்பெற்றதும் முதலாம் உலகப் போரின் போது நடைபெற்றமையாலும் இவ்வாறு கருத நேர்ந்தது. |