
இவ்விசேட திட்டத்தின் கீழ் மட்-காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை’ மட்-காத்தான்குடி அல் அமீனா வித்தியாலயம், மட்-காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளில் இந்த 1000 இடைநிலைப் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 இடைநிலைப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாகவும்’ இதில் முழு வசதிகள் கொண்ட கணனிப் பிரிவு மற்றும் விஞ்ஞான களப் பயிற்சிப் பிரிவுகள் அடங்கலான ஆய்வுகூடங்கள் நிறுவப்படவிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக தகவல் அதிகாரி பி.ரி.அப்துல் லத்தீப் தெரிவித்தார் .
இதற்கமைய மட்-காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை, மட்-காத்தான்குடி அல் அமீனா ,வித்தியாலயம்;’மட்-காத்தான்குடி அந்நாஸர; வித்தியாலயம் என்பவற்றில் நடைபெற்ற விசேட வைபவங்களில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சகிதம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ,காத்தான்குடி நகர சபைத்தலைவர் எஸ்எச்.எம்.அஸ்பர் ,மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர், எஸ்.சிறிதரன் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் , பாடசாலைகளின் அதிபர்கள் ,உலமாக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

