உலகின் அதி வேக சுப்பர் கணனியை ( Super Computer ) கொண்ட நாடு என்ற பெருமை தற்போது அமெரிக்காவிடம் வந்து சேர்ந்துள்ளது.
அதிவேக சுப்பர் கணனியைக் கொண்ட நாடு என்ற பெருமை எப்பொழுதும் ஒரு நாட்டிடம் மட்டும் இருப்பதில்லை காரணம் சுப்பர் கணனிகள் தொடர்ச்சியாக மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையினாலாகும்.
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்பெருமை ஜப்பானின் சுப்பர் கணனியான 'K' உலகின் அதிவேகமானது என்ற பெருமையைக் கொண்டிருந்தது.
அதற்கு சில காலங்களுக்கு முன்னர் சீனாவின் டியானி (Tianhe ) - 1 A உலகின் அதிகவேகக் கணனி என்ற பெருமையைப் பெற்றிருந்தது. சீன தேசிய பாதுகாப்புத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தினாலேயே (National University of Defence Technology (NUDT) இக் கணனி உருவாக்கப்பட்டது.
இதன் அப்போதைய வேகம் 2.50 பெடாப்லொப்ஸ் (Petaflops) அதாவது ஒரு செக்கனில் 2,50 குவாட்ரில்லியன் கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியது என்பதாகும்.
சீனாவின் டியானி ( Tianhe ) - 1 A ஆனது 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டது. சுமார் 200 பொறியியலாளர்களால் 2 வருட கடும் உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இது இயங்குவதற்கு மொத்தமாக 4.04 மெகாவோட்ஸ் மின்சாரம் தேவைப்படுகின்றது.
இக்கணனி, 14,336 இண்டெல் ஸியோன் சிபியுக்கள் (CPU ) மற்றும் 7,168 Nvidia Tesla M2050 ஜி.பி.யுக்களையும்( GPU - Graphics processing unit) அக் காலப்பகுதியில் கொண்டிருந்தது.
இதற்கும் முன்னர் அமெரிக்காவின் கிரே எக்ஸ்.டி5 ஜகுவார் Cray XT5 Jaguar, உலகின் அதிவேக சுப்பர் கணனியாக இருந்து வந்தது. இது அக்காலப்பகுதியில் 224,162 ஒப்டெரொன் (Opteron CPUs) சிபியுக்களைக்கொண்டிருந்ததுடன் அப்போதைய இதன் வேகம் 1.75 பெடாப்லொப்ஸ் (Petaflops) ஆகும்.
இந்நிலையில் உலகின் சுப்பர் கணனியைக் கொண்ட நாடு என்ற பெருமை மீண்டும் அமெரிக்காவிடம் வந்து சேர்ந்துள்ளது.
அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வுகூடத்திலுள்ள டைடன் 'Titan Cray XK7' உலகின் தற்போதைய அதிவேக சுப்பர் கணனியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இது கிரே எக்ஸ்.டி5 ஜகுவார் (Cray XT5 Jaguar) சுப்பர் கணனியை மேம்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.
டைடனானது 560,640 புரசசர்களயும், 261,632 NVIDIA K20x எக்ஸலேடர் கோர்களையும் (accelerator cores) கொண்டுள்ளது.
இதன் வேகம் 17.59 பெடாப்லொப்ஸாக கணிக்கப்பட்டுள்ளது. இது செக்கனில் 17.59 குவாட்ரில்லியன் கணிப்பீடுகளை மேற்கொள்ளக்கூடியது.
இதேவேளை உலகின் 2 ஆவது அதிகவேகக் கணனி என்ற பெருமையும் அமெரிக்காவுக்கே கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் லோரண்ஸ் லிவ்மோர் தேசிய ஆய்வுகூடத்தின் சிகோய்யா ' Sequoia' கணனியே இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதேவேளை 3 ஆவது இடத்தை ஜப்பானின் 'K' பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் அதிவேக சுப்பர் கணனிகள் 10.