
(ஏ.எம். தாஹா நழீம்)
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 9 ல் கல்வி கற்கும் மாணவி செல்வி MR. ஹன்ஸா மாகாண மட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார். இந்த வெற்றிக்காக இப்பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியையாக கடமையாற்றும் ஆசிரியை Mrs. KA. நஸீர், இப் பாடசாலையின் அதிபர் TM. தௌபீக் இம் மாணவியை வழிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், இம் மாணவி இதற்கு முன்னரும் பல பரிசில்களை மாகாண, மாவட்ட, வலய மட்டத்தில் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
மேலும், இம்மாணவி இப்பாடசாலையின் மாணவத்தலைவி என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். இவரை எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றார், பாடசாலை சமூகமும் இவரை வாழ்த்துக்கின்றனர்.
