
இதில் ஐப்பான் அவுஸ்ரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா, அரசுகள்,நியூசிலாந்து போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளும் சேர்ந்திருப்பது சிறப்பான அம்சமாகும். ஆசிய வலயத்துக்கு வெளியே உள்ள நாடான மெக்சிக்கோவும் இதற்கு உரித்தானதாகும்.
இந்த அமைப்பும் வலய அமைப்பு என்ற வகையில் பலநோக்கங்களை கொண்டுள்ளது. ஆசிய வலய நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்வதற்கு கீழே காட்டப்பட்டுள்ள நடவடிக்கைகள் நேடியாக பங்களிப்பு செய்வனவாகும்.
வர்த்தகம் தொடர்பான சவால்களை இழிவாக்குவதற்கு வலயத்தில் முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னேற்றுதல்
ஆசிய பசுபிக்வலய இணைப்பினால் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் (2010 ஆம் ஆண்டில் வலயத்தில் பாரிய சுகந்திர வர்த்தக வலயம் தாபித்தல்)
வறுமை ஒழிப்புக்கு உரிய மனிதவள அபிவிருத்திக்காக தொழிலின்மைக்கு உதவி, வேலையற்றோருக்கு நிவாரணம் வழங்குதல், காப்புறுதி முறை ஆரம்பித்தல்
கோளமயமாதலின் பாதகமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு வலயநாடுகள் ஒன்று சேர்ந்து தீர்மானங்களை மேற்கொள்ளுதல்
இந்த அமைப்பின் மூலம் சுதந்திர வர்த்தகத்தை ஏற்படுத்துவதற்கு உதவும் முகமாக வலய நாடுகளிடையே அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்குதல்,உலக வங்கி நிதியிலிருந்த பொருளாதார உதவிகளைப் பெறுதல் இந்த அமைப்பு அரசியல் செயன் முறையை விட பொருளாதாரத்தினை மேம்படுத்தும் செயன்முறைக்கு அதிக உதவியளித்துள்ளது.