அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப கல்லூரி பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படவுள்ளது. இம்முறை தேசத்திற்கு மகுடம் கண்காட்சியுடன் மேற்படி பல்கலைக்கழக தரமுயர்விற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.சுமார் 1.075 பில்லியன் மேற்படி நிர்மாணிப்பணிகளுக்கு இலங்கை அரசு ஒதுக்கியுள்ள நிலையில் இம்முறை இடம்பெறவிருக்கும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் பிரதான பகுதியாக இது அமைந்து காணப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

