நார்வே நாட்டின் ஸ்தவஞ்சர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆன்னி மான்ஜென் மற்றும் பிரான்சின் மார்செல்லி பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் ஜீன் லக் வேலே இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். இதற்காக இரு குழுக்களாக குழந்தைகள் பயன்படுத்தப்பட்டனர்.
புதிய வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. ஒரு குழு கையால் எழுதி படிக்கவும், மற்றொரு குழு கம்ப்யூட்டரில் டைப் செய்து படிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
ஒரு வார கால ஆய்வுக்கு பின், கையால் எழுதி படித்த மாணவர்கள் சிறந்த ஞாபக சக்தியுடன் வார்த்தைகளை நினைவு கூர்ந்தனர். ஆனால், கம்ப்யூட்டரில் டைப் செய்தவர்களால் வார்த்தைகளை ஞாபகத்திற்கு கொண்டு வர முடியவில்லை.
“எழுதும் போது மூளையின் உணரும் பகுதியில் எழுத்துக்களின் உருவம் படிந்து விடுகிறது. ஆனால், டைப் செய்யும் போது அவ்வாறு படிவதில்லை. டைப் செய்வது படிப்பதற்கு வலு சேர்ப்பதில்லை.”
இதேபோல், உடல் அசைவுகளுடன் கூடிய பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிந்து விடுகின்றன. உடல் அசைவுகள் இல்லாத பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிவதில்லை.
மற்றொருவர் உடல் அசைவுகளுடன் பேசும் போது எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். அதையே நாம் நம் உடல் அசைவுகளுடன் செய்யும் போது பதிவதில்லை போன்றவை ஆய்வில் தெரிய வந்துள்ளன.