அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Monday, March 5, 2012

இங்கிலாந்தின் கற்தூண்கள் :


ஓர் வரலாற்று அதிசயம்!.
இன்றைய மனித சமூகம் இதுவரை விடைகாண மு
டியாமற் போன பலவிடையங்கள் புவியில் உண்டு. அதில் ஒன்று தெற்கு இக்கிலாந்தில் காணப்படும் கற்தூண்கள், இற்றைக்கு 5000 வருடங்களுக்கு பழமை வாய்ந்த ஒரு வரலாற்று சின்னம். 
எகிப்தின் பிரமிட்டுக்கள் வளர்ச்சியுற்ற காலப்பகுதியில் இது இப்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனப்படுகின்றது. வரலாற்றி
ல் பல சமூகங்களும் இப்பணியில் குறிப்பிடத்தக்களவு பங்கு கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்களால் பல...

மில்லியன் கணக்கான மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டு இச்செயற்றிட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.

அதிகபட்டசம் ஒவ்வொன்றும் 4 தொன் எடையுடைய 82 வரையான நீல பளிங்கு கற்கள் ஏறக்குறைய 240 மைல்களுக்கு அப்பால் உள்ள பிரசெலி மலைத்தொடரில் இருந்து எவ்வாறு இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டன என்ற வினாக்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை. 82 வரையான நீல பளிங்கு கற்களால் அமைந்த முதலாவது வட்டம் கி.மு 2150 வருடங்களுக்கு முன்பு முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. பின்னர் 150 வருடங்கள் கழித்து மேல் உள்ள கற்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதவாது கி.மு 2000 ம் ஆண்டளவில் இது நடைபெற்றிருகின்றது.

இத்தகைய பிரமிப்பு ஊட்டும் செயற்றிட்டம் தொழில்நுட்ப வசதிகள் எதுமற்றிருந்த அக்காலத்தில் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் அதிகளவான மனித வலு பயன்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனினும் இராட்சத விலங்குகள், அபூர்வ சக்திகள் இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கற்பனைக்கதைகளும் இதன் பின்னணியில் உள்ளன. இத்துணை சிரமங்களோடு இக்கற்தூண்களால் வடிவமைக்கப்பட்ட வட்டம் ஏன் உருவாக்கப்பட்டது என்பது இதுவரை உறுதியாக அறியப்பட்டிருக்கவில்லை. பெருமளவான வரலாற்று ஆய்வாளர்கள் கருதுவதுபோல் அது ஒரு முக்கிய சமய வழிபாட்டு ஸ்தலமாக இருக்கலாம் என்ற கருத்துக்களே மேலோங்கியிருக்கின்றன. எனினும் இது வரலாற்றில் ஓர் நிர்வாக மையம், பாதுகாப்பு அரண், ஆய்வகம் போன்று இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் உண்டு.

எப்படியிருந்த போதும் எந்த மதமும் உரிமைகோராத ஒரு வரலாற்று சின்னமான இது ஆதி சமூகங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றின் பி
ன்னணியில் உருவாக்கப்பட்டது என்பது மறுப்பதற்கில்லை.