அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Wednesday, March 7, 2012

நீங்களும் பாராட்டலாமே .....

பாராட்டுதல் என்பது....
ஒருவரது உண்மையான, நேர்த்தியான, திறமையான நடத்தைகள், செயல்கள், ஆற்றல்கள், திறமைகளிற்காக எமது வாழ்த்துக்கள், நல்லுரைகள், ஆசிகள், நன்றிகளை தெரிவித்தல் ஆகும்.

வர்த்தகத்துறையில் இது ஒரு சொத்தின் பெறுமதியை அதிகரித்தல் எனப் பொருள் கொள்ளப்பட்டாலும், உளவியல் நோக்கில் “பாராட்டு” என்பது ஒருவரின் உள்ளார்ந்த சக்தியை அதிகரித்து (Internal Energy) உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்க உதவுகின்றது. பாராட்டு ஒருவனது ஆற்றுகையை (Performance), மேலும் மேலும் சிறப்பாகச் செய்ய வழிவகுக்கும் ஊக்கியாக அமைகின்றது.

உ+ம் : i. அலுவலகம், நூலகம் போன்ற பல இடங்களிற்கும் செல்லும் ஒருவர் அங்குள்ள ஊழியர்களது அழகிய ஆடைகள், சிறந்த சேவைகளை மனம் திறந்து நேர்மையுடன் பாராட்டி வந்தார். இதனால் ஊழியர்களிற்கும் இவரிற்கும் நல்ல உறவுநிலை ஏற்பட்டதுடன் இங்குள்ள தனது தேவைகளையும் இலகுவாக பூர்த்தி செய்ய முடிந்தது.

ii. மணிக்கூடு திருத்துபவர் ஒருவர் மணிக்கூடு திருத்தியமைக்காக கவனயீனமாக அதிக பணத்தை மணிக்கூட்டு உரிமையாளரிடம் அறவிட்டுவிட்டார். பின் தன் கவனயீனத்தை அறிந்து தானாகவே உரிமையாளரைக் கண்டு மேலதிக பணத்தை திருப்பிக் கொடுத்தமைக்காக உரிமையாளர் அவரைப் பாராட்டியதுடன், மேலும் பலரையும் அறிமுகப்படுத்திக் கொடுத்தார்.

iii. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கு பெற்றோரும், பாடசாலைச் சமூகமும் கொடுத்த பரிசும், பாராட்டுக்களும் ஏனைய மாணவர்களையும் அதிக ஆர்வத்துடன் கற்கத்தூண்டியது.

iv. அதிக மாணவர்களின் சிறப்பான பெறுபேற்றிற்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியரிற்கு கிடைத்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் அவரது சேவையை மேலும் சிறப்பாக்கின.

இவ்வாறு தினமும் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால்…… நாம் உரியவர்களை, உரிய முறையில் பாராட்டுகின்றோமோ? என்பது கேள்விக்குரியது. ஒருவரை பாராட்டுவதற்கு இன, மத, சாதி, பால், வயது போன்ற எந்த ஒற்றுமையும் தேவையற்றது. யாரும், யாரையும் பாராட்டலாம்.

பாராட்டுதல் பற்றி அறிஞர்கள், உளவியலாளர்கள் கூறும்போது……

பாராட்டுதல் பற்றி Dos Childre and Sara Paddision குறிப்பிடும்போது, பாராட்டுதல் என்பது விரிந்த பார்வைக் கோணமுள்ள கண்ணாடியைப் போன்றது. இதன் மூலம் நீங்கள் முழு உலகையும் பார்க்க முடியும் என்கின்றனர்.

Howard Martin குறிப்பிடும்போது, பாராட்டுதல் ஒரு சக்தி வாய்ந்த உபகரணம். நீங்கள் ஏனையோரிற்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வரும்போது உங்கள் வாழ்வின் பெறுமதி அதிகரிக்கின்றது. பாராட்டுதல் இலகுவானது. நீங்கள் மற்றவர்களைப் பாராட்டத் தொடங்கும்போது அது உங்கள் மனதிற்கும் மகிழ்ச்சியாகின்றது. ஒரு நல்ல பாராட்டு உங்களை 180oஊடாக திருப்பிக் காட்டக்கூடியது என்கிறார்.

Sara Paddision தனது “மறந்து போயுள்ள இதயத்தின் சக்தி” பற்றிய நூலில் நீங்கள் வாழ்க்கையில் பாராட்டப்படும்போதும், பாராட்டும்போதும் உங்களது பெறுமதி மட்டுமல்ல, மற்றவர்களது பெறுமதியும் அதிகரிக்கின்றது என்கிறார்.

Bruce Cryer பாராட்டு ஒரு சக்தி வாய்ந்த கருவி. ஒருவரிற்கு கிடைக்கும் பாராட்டு சிறிய புள்ளியிலிருந்து, பெரிய சித்திரத்தையே தொடக்கி வைக்கும் எனக் கூறியுள்ளார்.

உண்மையாக இதயத்திலிருந்து பாராட்டப்படும் போது அது ஒரு காந்த சக்திபோல் உங்கள் வாழ்க்கையை நிரப்பும். ஆளுமை, ஆற்றல், தொழில் போன்றவற்றை மேம்படுத்தி எப்படி ஒருவரை சிறப்பாக பாராட்டலாம் எனக் கற்றுக் கொள்ளுங்கள். பாராட்டுதல் ஒரு இலகுவான இதய நாதம். இது உங்களையும், ஏனையோரையும் சுறுசுறுப்பாக இயக்குவதுடன், மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

அன்னை திரேசா இந்த உலகில் பசியுடன் பாணிற்காகக் காத்திருப்பவர்களிலும் பார்க்க, அன்பு, பாராட்டிற்காகக் காத்திருப்பவர்களே அதிகம் எனக் கூறியுள்ளார்.

யாரிற்கு எப்போது பாராட்டலாம் ………

1 பெற்றோர்கள்: பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், ஒழுக்க செயற்பாடுகள், வேறு சிறந்த செயற்பாடுகளிற்கு பாராட்டலாம்.

2 அரசாங்கம் / அரசியல் ரீதியாக
தேர்தலில் வெற்றி பெறும்போது, அரசின் சிறப்பான அலுவல்கள், ஊழியர்களை பாராட்டலாம்.

3 ஊடகம்:
நல்ல செய்திகளை வெளியிட்டமை, சிறப்பான சேவையாற்றியமைக்காக ஊடகம், பதிப்பாசிரியர், எழுத்தாளர், இதழாசிரியர்களை பாராட்டலாம்.

4 தனிநபர்:
தனிநபரை புகழ்ந்து, பாராட்டி, தனிப்பட்ட செயற்பாட்டை வளர்க்கலாம்.

5 வர்த்தக ரீதியாக ஃ தொழில் ரீதியாக:
வேலை சன்மானமாக கொடுப்பவர்கள், நேர்மையாக செயற்படுவதால், ஓய்வு பெறுதல், சிறந்த சேவை செய்தமை, சிலரிற்கு நியமனம் வழங்கியமை, பிரியாவிடை வைபவம், அர்ப்பணிப்புடன் செயற்படுதல், சேவை மனப்பான்மையுடன் செயற்படல், சிறந்த ஆற்றுகை புரிந்தமை, விருதுகள், பதவியுயர்வு பெற்றமை உட்பட பலவற்றிற்கு பாராட்டலாம்.

6 வாடிக்கையாளர்களிற்கு:
சரியான முறையில் பணம் செலுத்தியமை, உரிய முறையில் சேவைகளைப் பெற்றமை, அதிக பொருட்கள், சேவைகள் கொள்வனவு செய்தமை, அதிக காலம் வாடிக்கையாளராக இருந்தமை போன்றவற்றிற்கு நன்றி, பாராட்டு தெரிவிக்கலாம்.

7 ஏனையோர்களிற்கு:
பொதுவாக குடும்பத்தவர், உறவினர்கள், ஏனைய ஊழியர்களது விருந்தோம்பல், அர்ப்பணிப்பு, பங்களிப்பு சிறந்த தலைமைத்துவம், சிறந்த பேச்சாற்றல், ஆலோசனை வழங்குதல், பரிந்துரைகள், உரிய முறையில் தகவலளித்தல், தன்னலமற்ற சேவை, சமூக தொண்டு, சேவை மனப்பான்மை, அதி சிறந்த வெற்றி உட்பட பலவற்றிற்காகவும் மட்டுமல்ல ஏனைய சின்னச் சின்ன விடயங்களிற்காகவும் பாராட்டலாம்.

இன்றிலிருந்தே மனப்பூர்வமாக மற்றவர்களை பாராட்டுங்கள். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை உணர்வீர்கள். பல்லாயிரக்கணக்கான பாராட்டுக்களால், பாராட்டுமழை பொழியட்டுமே.