
இந்த மதிப்பீட்டை தயாரித்த மனோதத்துவ நிபுணர் தான்யா பைரன் அவர்களின் கருத்துப்படி, குழந்தைகளைத் தனியாக கம்பியூட்டரில் விளையாடவிடுவது என்பது கண்காணிப்பு மேற்பார்வை இல்லாமல் அவர்களை தனியே வீட்டுக்கு வெளியில் விளையாட விடுவதைப் போன்றதே என்று குறிப்பிட்டுள்ளது.
கணினி விளையாட்டுகள் தரப்படுத்தப்பட வேண்டும், சீரமைக்கப்பட வேண்டும், அவை விளம்பரம் படுத்தப்படுவது குறித்து விதிமுறைகள் இருக்க வேண்டும் என்றும் கணினி இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி அறிவூட்ட பிரச்சார இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.