
2013 ம் கல்வியாண்டு இலங்கைச் சட்டக் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.இம்மாதம் 30 ம் திகதி வரைக்கும் கொழும்பில் உள்ள சட்டக் கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் கொழும்பில் நடைபெறவுள்ள நுழைவுப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்.
இதற்கு 17 வயதுக்கு மேற்பட்ட க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விவரங்களை www. sllc.lk னும் இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும்.