அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Saturday, March 30, 2013

கல்வியே எமது செல்வம்; எமது வளம்:

பிள்ளைகளின் கல்வியை புத்தகங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி விடாதீர்கள்

பல்துறைகளிலும் ஊக்கப்படுத்துங்கள் -ஜனாதிபதி
மர்லின் மரிக்கார்
பிள்ளைகள் தொடர்பாக இன்று மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் தான் நாட்டின் எதிர்காலம் கட்டியெழுப்பப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சகல பிள்ளைகளுக்கும் சமமான கல்வி கிடைக்கப் பெற வேண்டும். அதனால் சலுகைகளை விடவும் தம் பிள்ளைகளின் கல்வி விடயத்திற்கே பெற்றோர் முன்னுரிமை அளிப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

அதேநேரம் பிள்ளைகளைப் புத்த கங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தாதீர்கள். அவர்களை நடனம், விளையாட்டு மற்றும் பயிர் வளர்ப்பு போன்ற துறைகளிலும் ஊக்கப்படுத்துங்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2012 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய பிள்ளைகளுக்குப் புலமை பரிசில் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊழியர் நம்பிக்கை நிதியம் அலரி மாளிகையில் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில் ஐநூறு பிள்ளைகளுக்குப் புலமைப் பரிசில் வழங்கப்பட்டன.

ஊழியர் நம்பிக்கை நிதியம் இவ்வருடம் 7000 பேருக்கு 15 ஆயிரம் ரூபாப்படி புலமைப் பரிசில் வழங்கத் தீர்மானித்துள்ளது. இத்திட்டத்திற்கென 105 மில்லியன் ரூபாவை நிதியம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் அர்ப்பணிப்புடன் கற்று சித்தி அடைந்திருப்பதன் மகிழ்ச்சியை இப்பிள்ளைகளின் முகம்கள் வெளிப்படுத்துகின்றன. இப்பிள்ளைகளுக்கு என் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

பெற்றோர் தம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள். அவர்களது உழைப்பின் ஒரு பகுதியை அவர்கள் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்குச் செலுத்துகின்றார்கள். அதிலிருந்து தான் இப்புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது.

ஊழியர் நம்பிக்கை நிதியம் இவ்வருடம் 7 ஆயிரம் பிள்ளைகளுக்குப் புலமைப் பரிசில் வழங்கவிருக்கின்றது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் வருடா வருடம் புலமைப் பரிசில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டே வந்திருக்கின்றது.

ஊழியர் நம்பிக்கை நிதியத்தினால் 86 இலட்சம் பேர் உறுப்புரிமை பெற்று இருக்கின்றார்கள்.

நான் தொழிலமைச்சராக இருந்த சமயம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் தொழிலமைச்சின் கீழேயே இருந்தது. அப்போது ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய நூறு பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்க தீர்மானித்து நடவடிக்கைகளை மேற்கொண்டேன். ஆனால் அன்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 25 பிள்ளைகளைக் கூட தேடப் பெரிதும் கஷ்டப்பட்டோம். அதனால் கிராம மட்டத்தில் சென்று இது தொடர்பாகப் பிள்ளைகளை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். கல்வியின் முக்கியத்துவத்தைப் பெற்றோருக்கு எடுத்து கூறினோம். இதன் விளைவாக புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்தும் பிள்ளைகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்து வருகின்றது.

கல்வியே எமது செல்வம். அதுவே எம் வளம். அதனடிப்படையில் தான் நகரங்களுக்குள் மாத்திரம் மட்டுப் படுத்தப்பட்டிருந்த வசதிகளைக் கிராம மட்டத்திற்கும் கொண்டு சென்று இருக்கின்றோம்.

கிராம மட்டத்திலுள்ள பாடசாலைகள் சகல வசதிகளையும் கொண்டிருக்குமாயின் பிள்ளைகள் கல்விக்காக நகருக்கு வர வேண்டிய தேவை இல்லை. இந்த வகையில் கிராம மட்டத்திலுள்ள பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்தி வருகின்றோம்.

ஒரு சமயத்தில் யாழ். குடா நாட்டில் 37 பாடசாலைகள் விஞ்ஞான ஆய்வு கூடங்களைக் கொண்டிருந்தன. ஆனால் ஹம்பாந்தோட்டையில் ஒரு பாடசாலையில் மாத்திரமே ஆய்வு கூடமே இருந்தது. இதன் காரணத்தினால் தான் எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மஹிந்தோதய ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

எமது பிள்ளைகள் நல்ல திறமை மிக்கவர்கள். அவர்கள் சிறந்த படைப்பாளிகளாக உருவாக்கப்பட வேண்டும். அவர்களைச் சிறந்த ஆரோக்கியம் மிக்கவர்களாகவும், நற்பண்புகள் நிறைந்தவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டியது பெற்றோரது பொறுப்பு என்றார்.

இவ்வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, அமைச்சர்கள் எஸ். பி. திஸாநாயக்கா, காமினி லொக்குகே, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஊழியர் நம்பிக்கை நிதியத் தலைவர் கே. எம். ஏ. கொடவத்தை உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்