அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Thursday, March 7, 2013

குர்ஆனின் ஒளியில் ...கருந்துளை...!

Black Hole!

இவ்வுலகின் வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் மூலம் மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும்' என்பதற்காகவே குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை இறைவன் விவரித்து கூறும்போது... அவற்றை மேலும் உறுதிப் படுத்துவதற்கும், கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புகள் மீதே அல்லாஹ் சத்தியமிட்டு அவ்வசனங்களை கூறுவதை குர்ஆனில் பல இடங்களில் நாம் காணலாம்..!

உதாரணமாக சில:-

வானத்தின் மீது சத்தியமாக 86:1சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக 91:1
அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக 91:2
இரவு, பகல் மீது சத்தியமாக 92:1

அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக 95:1
தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக 95:2
அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக 95:3
காலத்தின் மீது சத்தியமாக 103:1

ஆனால், அல்லாஹ் சொல்லும் சத்தியங்களில் மிக "மகத்தான சத்தியமாக" ஒரு சத்தியத்தை அல்லாஹ் சிறப்பித்து குறிப்பிடுவது எது தெரியுமா சகோ...?

குர்ஆன் 77:8 நட்சத்திரங்கள் ஒளியிழக்கும் போது...குர்ஆன் 53:1 

நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் சத்தியம்..!

என்று ஒரு இடத்தில் விண்மீன் விஷயத்தில் சாதாரணமாக சொல்லும் அல்லாஹ்... ஓரிடத்தில்....

குர்ஆன் 56:75

நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன்..!

குர்ஆன் 56:76

நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம்..! 


...என்று சொல்வதை காண்கிறோம். அதென்ன "விண்மீன்கள் விழும் இடங்கள்"..? இதை முழுதாக அறிந்து கொள்ள, இறைவன் சொன்னதுபோல, நாம் சில அறிவியல் கண்டுபிடிப்புகளைஅறிந்தோமானால் இந்த சத்தியத்தின் மகத்துவத்தை முழுதாக உணரலாம்..! எவ்வளவு உண்மைகள் இவற்றில் இருக்கின்றன..! சுபஹானல்லாஹ்..!

17-ம் நூற்றாண்டு ஃபிளாஷ்பேக்
முதல் மனிதரான ஆதம் நபி (அலை..) காலத்திலிருந்தே மரத்து ஆப்பிள் தரையில் விழுந்தாலும், அது தன்னருகில் அன்று விழுந்ததற்கு காரணம் 'புவி ஈர்ப்பு விசை' என்று நியூட்டன் சொன்னார்.

18-ம் நூற்றாண்டு ஃபிளாஷ்பேக்
அப்படி பூமியில் விழுந்த அந்த ஆப்பிளை, 'அது திரும்ப பூமிக்கே வராதபடி... புவி ஈர்ப்பு சக்தி முடிந்து விட்ட விண்வெளிக்கு சென்றுவிடும்படி வானத்தை நோக்கி வீச வேண்டுமானால், வீசும் வேகம் எவ்வளவு வேண்டும்' என்று, ஜான் மிச்சேல் சரியாக 11.2 km/s என்று கண்டுபிடித்துவிட்டு, அதற்கு 'escape velocity' (விடுபடு வேகம்) என்றும் பெயரிட்டார். அதோடு, இந்த வேகம்... கோளின்/விண்மீனின் எடைக்கு தக்கபடி கூடும் என்றும் தன் நண்பர் லாப்லாஸ் உடன் இனைந்து சமன்பாட்டில் சொல்லி விட்டார்.
.
இதன்படி, ஒளியின் வேகத்தை விட அதிக அளவு விடுபடு வேகம் கொண்ட ஒரு விண்மீன் இருந்தால், அதன் ஒளி அதனிடம் இருந்து வெளிப்படவோ, அதன் மீது விழும் வேறு எந்த ஒளியையும் பிரதிபலிக்கவோ கூட செய்யாது என்றும், இதனால் அதனை நாம் பார்க்கக்கூட முடியாது என்றும், ஒளி என்பது எடை அற்ற ஒன்றாதலால் அதுவே அதனுள்ளே இழுக்கப் படும் போது அதன் அருகில் தப்பித்தவறி சென்ற எதுவும் அதனுள் ஈர்க்கப்பட்டு காணாமல் போய்விடும் என்றும், அப்போதே BLACK STAR பற்றி அவர் கூறிவிட்டார்.
.
20-ம் நூற்றாண்டு ஃபிளாஷ்பேக்
அந்த அளவுக்கு பெரிய சைஸ் விண்மீன் அப்போது இல்லாதால், புரியாத புதிரான இதை யாரும் 19-ம் நூற்றாண்டில் கண்டுகொள்ளவில்லை என்றாலும், 20-ம் நூற்றாண்டில் ஐன்ஸ்டீன் சொன்ன சார்பியல் கோட்பாட்டுக்கு அப்புறம், மீண்டும் மிட்செல் சொல்லி விட்டு சென்றது உயிர்பெற்றது. இது விஷயத்தில் பற்பல கண்டுபிடிப்புகள் பலரால் தொடர்ந்தன. அவை அனைத்தையும் ஒன்று திரட்டி, இறுதியில், 1964-ல் அண்ணே ஈவிங் எழுதி வைத்த black hole என்ற பெயரையும் அதற்கு இட்டு... 1967-ல் உலகுக்கு விளக்கமாக சொல்லி... ஜான் வீலர் புகழ் பெற்றார்.

அவர் சொன்னவை என்ன...? விண்மீன்களில் nuclear fusion reaction மூலம் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் போது வெப்பமும் ஒளியும் வெளிப் படுகின்றன. இப்படி ஆக்சிஜன் இல்லாமல் எரிந்து கொண்டு இருக்கும் விண்மீன்கள் ஒரு கட்டத்தில் தங்களிடமுள்ள எரிபொருளான ஹைட்ரஜன், ஹிலியம் வாயுவை இழந்து முற்றிலும் அணைந்து கருப்பாகி அழியும் நிலையில் அதனுடைய அடர்த்தி பன்மடங்கு அதிகரிக்கும். இதனால், அத்துடன் அதன் 'உள் ஈர்ப்பு விசை ஆற்றல்' பன்மடங்காக ஒளி வேகத்துக்கு பெருகி விடும். அதனுள் ஈர்க்கப்படும் எப்பொருளும் மீண்டு வருவதில்லை. இவ்வாறு எரிதிறனை இழந்து அடர்கருப்பாகி அழிந்து மறையும் நட்சத்திரம்... கருந்துளையாக மாறுகிறது.

இதற்கு கன அளவோ மேற்பரப்போ கிடையாது..! கண்ணாலோ, தொலை நோக்கியாலோ எவரும் பார்க்க முடியாது..! காரணம், கருந்துளையின் நிகழ்வெல்லைக்கு(Event Horizon) செல்லும் ஒளி உட்பட எப்பொருளும் மீண்டு வெளியேற முடியாது. ஒன்றின் மீது ஒளி பட்டும் அது பிரலிபலித்து நம் கண்ணுக்கு வந்தால்தானே பார்க்க இயலும்..? ஒளியைக்கூட ஈர்க்கும் இவற்றின் ஈர்ப்பு ஆற்றல்.

நியூட்டன் சொன்னபடி நமது பூமிக்கு புவியீர்ப்பு ஆற்றல் உள்ளதால் எப்பொருளையும் நாம் ஆகாயத்தை நோக்கி எறிந்தால் அது மீண்டும் பூமியில் விழுந்து விடும். மிச்சேல் சொன்னதுபோல, அந்த பொருள் இந்த புவியீர்ப்பு விசையை மீறிச்செல்ல வேண்டுமாயின், ஒரு வினாடிக்கு 11.2 கிலோ மீட்டர் விடுபடுவேகம் வேண்டும். அதாவது... மணிக்கு 40,320 கிமீ ஸ்பீடு..! பூமியில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படும் சாட்டிலைட் தூக்கிச்செல்லும் ராக்கெட்டுகள் வினாடிக்கு 11.2 கிமீக்கு மேற்பட்ட வேகத்திலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த வேகம் குறைந்தால், திரும்பி வந்து 'கடலில்' விழவைக்கப்பட்டுவிடும்..!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னபடி, இப்பிரபஞ்சத்தில் உள்ள வேகங்களில் மிக உயர்ந்தபட்ச வேகம் ஒளியின் வேகமான... வினாடிக்கு சுமார் 3,00,000km தான்..! அந்த வேகத்துக்கு சென்றால், ஒரு பொருள் தன் பொருண்மையை இழந்து அருகில் உள்ள மற்றவற்றை ஈர்க்க ஆரம்பிக்கும். அதேபோல, 'நமது(?)' கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் விசையும் நொடிக்கு 3,00,000kmக்கும் மேல்தான்..!

இதனால்தான்... நேர்க்கோட்டில் பிரயாணிக்கும் ஒளிக்கீற்று... கருந்துளை அருகே சென்றாலும் கூட... நாம் இதுவரை பள்ளியில் படித்த இயற்பியல் விதிக்கு மாறாக,ஒளிக்கதிர் வ...ளை...ய... ஆரம்பித்து கருந்துளையை நோக்கி உள்ளே சென்று விடுகிறது. அப்படி சென்ற ஒளி மீண்டு வருவதில்லை..! ஒளிமட்டுமல்ல..! கருந்துளைக்குள் செல்லும் எதுவும் மீண்டு வர முடியாது..! ஏனென்றால், அந்த ஈர்ப்பு சக்தியை தாண்டிய விடுபடுவேகம் இருந்தால் சாத்தியம்..! ஆனால், உள்ளே போனதும் அங்கு அப்புறம் என்ன நடக்கிறது என்பதும் எவர்க்கும் காணவும் முடியாத புரியாத புதிர்..!

கருந்துளைகளை நம் கண்களால் காண முடியாவிட்டாலும் இதன் நிகழ்வெல்லைக்கு (Event Horizon) அப்பால் இருக்கும் பிற நட்சத்திரங்கள், மற்ற விண் பொருட்களின் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் கருந்துளை இருக்கும் இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு தொகுதி விண்மீன்கள் கருந்துளையின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச்சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை கூர்ந்து நோக்குவதன் மூலம் கருந்துளையின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் அறிந்து கொள்ளலாம்.
.
சில வேளைகளில் கருந்துளைகள் அண்டவெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வரும் வளிமத்தூசுகளை கவர்ந்து இழுக்கின்றன. இவ்வளிமங்கள் கருந்துளையைச் சுற்றி வேகமாக உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இவற்றை புவி, அல்லது விண்வெளி தொலை நோக்கி மூலம் உணர முடியும்.

மிகப்பிரமாண்டமான நட்சத்திரங்களின் இறுதி கட்ட நிகழ்வாக கருதப்படும், 20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயம் இக்கருந்துளைகள்..!

.இப்போது மேலே போட்டுள்ள சத்திய இறைவசனங்களை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள்..! ஆக, இப்படியாக... எரிபொருள் இழந்து ஒளி இழக்கும் (குர்ஆன்-77:8) நட்சத்திரங்கள் மறையும்போது... (குர்ஆன்-53:01) அப்போது அதன் ஈர்ப்பால், மற்ற நட்சத்திரங்கள் அதன் மீதுவிழுந்து உள்ளிழுக்கும் இடம் (குர்ஆன்-56:75) ஆன, "கருந்துளைகள்" மீது அல்லாஹ் செய்யும் சத்தியம் எத்தனை மகத்தானது (குர்ஆன்-56:75) என்பதை இதன் பிரமாண்டத்தின் மூலம் அடுத்த பாராவில் புரிந்து கொள்ளலாம்.

18 Billion Suns size -A Galaxy Classic: Biggest Black Hole in Universe Discovered

'நமது பிரபஞ்சத்திலேயே பெரிய கருந்துளை' என்று "கேலக்ஸி கிளாசிக்" (Galaxy Classic) எனும் மேலே நீங்கள் பார்க்கும் கருந்துளையை கடந்த 2008 மார்ச் 18-ல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். இந்த கருந்துளையின் பரிமாணம் மிகப்பிரமாண்டமானது. நமது சூரியனின் விட்டம் 'வெறும்... 13,92,000km. தான்'..! இதைவிட 1800 கோடி மடங்கு மிகப்பெரியது அந்த கருந்துளை..!

நம்மை பிடித்து இழுத்து 'விழுங்கி' விடுமோ என பயப்படாதீர்கள் சகோ..! நாம் அதன் அருகில் இல்லை..! :-)) நமது பூமியில் இருந்து 350 கோடி 'ஒளி ஆண்டுகள்' தொலைவில் உள்ளது..!

சரி, '1 ஒளி ஆண்டு' என்றால் எவ்வளவு தூரம்..? ஒரு நொடியில் துல்லியமாக 2,99,792 km தூரம் செல்லும் ஒளியானது, இதே வேகத்திலேயே தொடர்ந்து 1 வருடம் பயணித்தால் எவ்வளவு தூரம் செல்லுமோ... அதுவே 'ஒரு ஒளி ஆண்டு' தூரம் ஆகும்..!

இதன் பிரம்மாண்டம் பற்றி இன்னொன்றும் உள்ளது. இப்பிரபஞ்சத்தின் ஆகசிறிய கருந்துளையின் பிரம்மாண்டம் என்ன தெரியுமா சகோ..? அது... சூரியனை விட ஒரு கோடி மடங்கு பெரியது..! :-))

வானில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் அல்லாஹ் நாடியவை தன் எரிபொருளை இழந்து அடர்த்தி அதிகமாகி கருந்துளையாக மாறலாம். பிரபஞ்சத்தில் இதுபோல ஏராளமான கருந்துளைகள் உருவாகி விட்டன. நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனின் இறுதி முடிவும் இவ்வாறே..! அது எப்போது கருந்துளை ஆகி, பூமி உட்பட அதன் நிகழ்வெல்லைக்குள் (Event Horizon) உள்ள அனைத்தையும் தன்னுள்ளே இழுத்துக்கொள்ளும்(!?) என்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்..!
.
குர்ஆன்77:7 உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும்.குர்ஆன்77:8 நட்சத்திரங்கள் ஒளியிழக்கும் போது,குர்ஆன்77:9 வானம் பிளக்கப்படும் போது,குர்ஆன்77:10 மலைகள் சிதறடிக்கப்படும் போது,குர்ஆன்77:11 தூதர்களுக்கு நேரம் குறிக்கப்படும் போது (அது நடந்தேறும்)குர்ஆன்77:12 (இவை) எந்த நாளுக்காகத் தாமதப்படுத்தப்பட்டுள்ளது..?குர்ஆன்77:13 (கியாமத் நாள் எனும்) தீர்ப்பு நாளுக்காகவே..! குர்ஆனின் ஒளியில் எல்லா நட்சத்திரங்களும் கருந்துளைகளாக எப்போது மாறும் என்றும் காண்கிறோம்..! சுபஹானல்லாஹ்..! 

அறிவார்ந்த வாழ்வியல் நெறிநூலான இக்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை இடையிடையே உலக மக்களுக்கு தொட்டுக்காட்டி அச்சமூட்டி எச்சரிக்கை செய்து இறுதிநாளுக்கு முன்னர் நேர்வழிக்குள் வந்துவிடுமாறு அழைத்து, 'படைக்கப்பட்ட போலி பொய் தெய்வங்களை விடுத்து, நாம், நம் உலகம், சூரியன், சந்திரன், மற்ற கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் கொண்ட இந்த மாபெரும் கேலக்ஸிகளை கொண்ட பிரபஞ்சத்தை மட்டுமலாது இன்னும் ஆறு பிரபஞ்சத்தை படைத்த ஏக இறைவனை மட்டுமே வணங்குங்கள்' என்று குர்ஆன் கூறுவதை காணலாம்.

குர்ஆன் 4:82அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அதேநேரம், இவ்வளவு அறிவியல் உண்மைகளையும் கற்று புரிந்து தெளிந்து இறைவனின் மகத்துவத்தை ஐயம் திரிபற அறிந்து இன்று இஸ்லாமை வாழ்வியல் நெறியாக பின்பற்ற ஆரம்பிக்கும் இக்காலத்தினரைவிட, அக்காலத்தில், எவ்வித அறிவியல் உண்மையும் அறியாமல் தெரியாமல் புரியாமல் "சமிஃணா; வஅத்தஃணா" (கேட்டோம்; வழிபட்டோம்) என்று இறைத்தூதர்கள் சொன்னதை அப்படியே ஏற்று இறைநம்பிக்கை கொண்டு இஸ்லாமியவாழ்வியல் நெறியை பின்பற்றும் முஸ்லிம்களாகி, மிகச்சிறந்த ஒழுக்க சீலர்களாக, உயர்ந்த பண்பாளர்களாக, பயபக்தியோடு வாழ்ந்தவர்கள் பற்பல மடங்கு ஈமானில் உயர்ந்தவர்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை..