தகவல் – எம்.எம்.ஏ.ஷாகிர்
மேற்படி எமது ஸ்மைல் சென்றர், இவ்வருடம் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றும் வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்கான பரீட்சை முன்னோடி கருத்தரங்கினை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.மிகவும் அனுபவம்வாய்ந்த வெளியூர் ஆசிரியர்குழுவினால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு கருத்தரங்கின் போது மாணவர்களுக்கு வழங்கப்படும்.
கணக்கியல், பொருளியல், வர்த்தக கற்கைநெறி ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜூன் 16, 17, 23, 24, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய திகதிகளில் நடைபெறும்.
எனவே, உயர்தர வர்த்தகப்பிரிவில் கற்கின்ற ஆர்வமுள்ள மாணவர்கள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜூன் 10ம் திகதிக்கு முன்னர் ஓட்டமாவடி-1 புகையிரத வீதியில் அமைந்துள்ள எமது அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
தொடர்புகளுக்கு: 071 4410644, 077 2992224
Email: smilecentres@gmail.com