வேலைக்காக பதிந்து காத்திருக்கும் பட்டதாரி மாணவர்களே , தொழிலதிபர்களே உஷார்.
வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரி மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் தங்களுக்கென்று இமெயில் கணக்கு வைத்திருக்கின்றனர், இந்த இமெயில் கணக்கு பெரும்பாலும் கூகிள் கொடுக்கும் ஜீமெயில் சேவையாகத்தான் இருக்கிறது.
யாரிடம் கேட்டாலும் ஜீமெயில் கணக்கு தான் கொடுப்பார்கள் அந்த அளவிற்கு மக்களிடம் கூகிள் தன் வளர்ச்சியை காட்டி வளர்ந்துள்ளது தெரிந்த செய்திதான், ஆனால் ஜீமெயில் தற்போது செய்யும் ஒரு ஏடாகூடம் என்னவென்றால் ஆர்வக்கோளாறு அதிகமாகி அதாவது நாங்கள் (ஜீமெயில்) மட்டும் தான் அதிகமான குப்பை இமெயில்களை இனம் கண்டறிந்து நேரடியாக Spam ஸ்பாம் -க்கு அனுப்புகிறோம் என்ற பெரிய வார்த்தையை சொல்லி விளம்பரம் தேடினர் இதில் என்ன ஸ்பெசல் என்றால் அரசு மற்றும் பல பெரிய நிறுவனங்களில் வேலைக்கு வர சொல்லி அனுப்பும் அத்தனை இமெயில்களையும் ஜீமெயில் நேரடியாக ஸ்பாம்-க்கு அனுப்புகிறது.
ஜீமெயில் எச்சரிக்கை ஆபத்து நமக்கு
வேலைக்காக பதிந்து வைத்து பதில் இமெயிலை எதிர்பார்த்து காத்திருக்கும் நம்மவர்களுக்கு ஜீமெயில் சொல்லும் செய்தி என்னவென்றால் உங்களுக்கு இமெயில் வரவில்லை என்பதுதான் ஆனால் வந்த இமெயிலை கூப்பைக்கு அனுப்பி வேடிக்கை பார்க்கும்,
இதே போல் தான் இண்டர்வியூக்கு வரச்சொல்லி மற்றும் தொழிலதிபர்களுக்கு வாடிக்கையாளர் அனுப்பும் செய்தி என அனைத்துமே குப்பைக்கு சென்று விடுகிறது. என்ன காரணம் என்று கூகிளிடம் தேடிப்பார்ததில் கிடைத்த தகவல் தான் ஆச்சர்யம், “ ஒரே மாதிரி தகவல்களை அதிகபட்ச மக்களுக்கு அனுப்பினால் நாங்கள் அதை குப்பையாக தான் கருதுவோம் “ இப்படி சொல்கின்றனர், சரி நிறுவனத்தின் இமெயில் கணக்கில் இருந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத்தான் அனுப்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்பவும் கூகிள் சொல்லும் செய்தி “ ஏற்கனவே இந்த செய்தி குப்பை என்று எங்கள் ஸ்பெசலிஸ்ட் தூங்காமல் கண்டுபிடித்துவிட்டனர் ”என்கிறது.
ஆர்வக்கோளாறில் நாமும் ஜீமெயிலை சோதித்து பார்க்கலாம் என்று சரியாக 490 பேருக்கு ஒரு செய்தியை அனுப்பினோம் அதில் 200 பேரின் இமெயில் சரியில்லை என்று திரும்பி வந்தது, சரி அதே செய்தியை காப்பி செய்து நம் மற்றொரு ஜிமெயில் முகவரிக்கு அனுப்பினோம், தூங்காமல் கண்டுப்பிடிக்கும் கூகிள் அதிகாரிகள் கண்ணில் விளக்கெண்னெய் விட்டு கண்டுபிடித்து நேரடியாக அந்த செய்தியை ஸ்பாம் -க்கு அனுப்பிவிட்டனர். இதனால் பலரும் ஜீமெயிலுக்கு பை பை சொல்லிவிட்டு யாகூ பக்கம் சென்றுவிட்டனர்,
வேலை வேண்டிய பட்டதாரிகள், தொழிலதிபர்கள் ,மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு யாகூ இமெயில் கணக்கு உருவாக்கி அதை முக்கியமாக பயன்படுத்துங்கள். நம் வீட்டு தபால் பெட்டிக்கு வரும் கடிதங்கள் கூப்பை தொட்டியில் விழுகிறது என்றால் தபால் பெட்டியை மாற்றுவதில் எந்த தவறும் இல்லை. கண்டிப்பாக நம் அனைத்து நண்பர்களுக்கும் இந்த தகவலை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.