
தேடல் மிக்க புதிய உலகில், மிகப் பெரும் ஆய்வகமாக பல்கலைக்கழகங்களை மாற்றவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர்
எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்ற மாணவர்களுக்காக ஆரம்பிக்கபபட்டுள்ள தலைமைத்துவப் பயிற்சி வேலைத்திட்டத்தின் மேற்பார்வையின் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் முரண்பாடுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.