அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Thursday, April 18, 2013

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கான முதலாவது பட்டமளிப்பு விழா!


கிழக்கு பல்கலைக்கழத்தின் மருத்துவ பீடத்திற்கான முதலாவது வைத்தியத்துறை பட்டமளிப்பு வைபவம் சனிக்கிழமை (20,21.4.2013) மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பலக்லைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கிழக்கு பலக்லைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2010ம் மற்றும் 2011ம் ஆகிய ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்த பல துறைகளையும் சார்ந்த 992 பட்டதாரிகள் இந்த இரண்டு தினங்களிலும் நடைபெறும் பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறவுள்ளனர்.

இதில் கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக மருத்து பீடத்தில் கல்வி கற்று வெளியேறிய 27 வைத்தியத்துறை சார்ந்தவர்களுக்கும் (எம்.பி.பி.எஸ்.) இதன் போது பட்டமளிப்பு நடைபெறவுள்ளது.

கிழக்கு பல் கலைக்கழக வராலாற்றில் முதல் தடவையாக இரண்டு நாட்கள் 5 தொகுதிகளாக இந்த பட்டமளிப்பு வைபவம் நடைபெறவுள்ளது.

இந்த பட்டமளிப்பு வைபவத்தின் போது கௌரவ கலாநிதி பட்டம் கிழக்கு பலக்லைக்கழக ஸ்த்தாபகரான முன்னாள் அமைச்சர் அமரர் கே.டபிள்யு.தேவநாயகம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

முதல் நாள் சனிக்கிழமை 580 பட்டதாரிகளுக்கும், இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை 412பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த பட்டமளிப்பு விழா வைபவத்தில் பிரதம விருந்தினராக உயர் கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க, மற்றும் சிறப்பு விருந்தினராக பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பிடத்தினை சேர்ந்த கலாநிதி காமினி சமரநாயக்க ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த பட்டமளிப்பு வைபவம் குறித்து இன்று காலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கிழக்கு பலக்லைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா மேற்கண்ட விபரங்களை தெரிவித்தார்.

கடந்த பட்டமளிப்பு வைபவங்களைவிட இந்த பட்டமளிப்பு வைபவம் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு பலக்கலைக்கழகத்தின் வெளிவாரி கற்கைகளுக்கான பணிப்பாளர் அன்ரனி அன்ரூ, கிழக்கு பலக்கலைக்கழகத்தின் பரீட்சைகளுக்கான சிரேஷ்ட உதவி பதிவாளர் ரி.பாஸ்கரன் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.