
சிங்களம், ஆங்கிலம், விஞ்ஞானம், உடற்கல்வி ஆகிய நான்கு பாடங்கள் தொடர்பாக புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் வெற்றிடங்கள் நிலவும் தேசிய மற்றும் மாகாண சபைகளின் பாடசாலைகளுக்கு அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். அது சம்பந்தப்பட்ட செயற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.