
இஸட் புள்ளி குளறுபடியால் சுமார் 5000 மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு மேலதிக மாணவர்கள் அனுமதிப்பது குறித்து இப்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அரசின் அனுமதி கிடைத்தால் புதிய பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்கவும் அமைச்சு தயாராக இருப்பதாகவும் உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.