அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மடிக்கணணிகளை வழங்கும் திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் யோசனைக்கு அமைய இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதன்பிரகாரம் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் ஆறு முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கு மடிக் கணணிகளை பயன்படுத்தி கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இது தொடர்பான முதற்சுற்று பேச்சுவார்த்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றுள்ளது.
உத்தேச திட்டத்திற்காக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கணணி உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இத்தகையதொரு திட்டத்தை செயற்படுத்தும் ஆசிய நாடு என்ற வகையில் கல்வித்துறை அடையும் மிகப்பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார்





இஸட் புள்ளி குளறுபடி காரணமாக பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வழிகள் குறித்து உயர் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாக உயர் கல்வி அமைச்சர் ௭ஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். 
2012ஆம் ஆண்டிற்கான நாடளாவிய ரீதியில் நாளை(06/08/2012) ஆரம்பமாகின்றன.இந்தவருடம் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தில் 277,671 பேர் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.இவர்களுக்காக நாடு முழுவதிலும் 2093 பரீட்சை நிலையங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.இசெட் புள்ளி மீண்டும் வெளியிடப்பட்டதன் பின்னரும் பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி கோரியுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

