- அரச வர்த்தமானி அறிவித்தல் -
வெளி விவகார அமைச்ச்சினால் இலங்கை வெளிநாட்டு சேவையின் IIIம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த 10.02.2012 வெள்ளிக்கிழமை அரச வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளன.
பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அடிப்படைத் தகமைகள் வருமாறு:
விண்ணப்பதாரர் இலங்கைப் பிரஜையாய் இருக்க வேண்டும்
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்
விண்ணப்ப முடிவுத் திகதியான 09.02.2012 அன்று வயது 22க்கு மேலும் 32க்கு உள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரி ஏற்கெனவே அரச சேவையில் இருந்தால், வயது 40க்குள் இருக்க வேண்டும் என்பதுடன் அவரது சேவைக்காலம் திருப்திகரமான பதிவுகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
இப்பரீட்சை தொடர்பான அனைத்து விபரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் இங்கு பிரசுரிக்கப் படுகின்றது.
GazetteT 12-02-10 SLFS Ad pages
Monday, March 5, 2012
இலங்கை வெளிநாட்டு சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2012
Monday, March 05, 2012
Vacancies