இந்தியாவின் உயர்கல்வி கொள்கை வகுப்பாளர்கள், ஸ்வீடன் நாட்டின் புகழ்பெற்ற கணித புள்ளியியலாளர் ஹன்ஸ் ரோஸ்லிங் உடன், உலகளாவிய வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.
அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தின், மியாமியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 29 முதல் மே 1ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாடு, மியாமி நகரத்தின் திட்ட கமிஷனுடன் இணைந்து, பிரிட்டிஷ் கவுன்சிலால் நடத்தப்படுகிறது.
Going Global எனப்படும் இந்த வருடாந்திர மாநாடு, பெரிய அமைப்பு நாடுகளின் உயர்கல்வி பற்றி விவாதிக்கவுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனா உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளன.
உலக நாடுகளிடையே, உயர்கல்வியை மேம்படுத்துவதில், ஒத்துழைப்பை அதிகரிப்பதை இந்த மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இம்மாநாட்டின் மூலம், உயர்கல்வியில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த வியூகங்கள் மற்றும் அனுபவங்களை நாடுகள், தங்களிடையே பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினை பெறும்.