நிலவில்லாது போனால் கடலில் நீரோட்டம் முடக்கமாகி கடலியக்கம் தடைப்படும். அப்போது பேரளவு ஒக்ஸிஐன் வெளியாக்கம் ஆல்கே போன்ற கடற்களைகள் அழிந்து போகும். அதாவது சந்திரன் இல்லா விட்டால் நாம் உண்ணும் உணவுச் சங்கிலி பாதிக்கப்படும். நிலவின் அமைப்பு மனிதரைப் போன்ற பூமியின் உயிரினச் செம்மை விருத்திக்குப் பல்வேறு செழிப்பு முறைகளில் பாதிப்பு செய்வதே. அவற்றில் முக்கிய மானவை:
1. 4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் அதிஷ்ட வசமாக செவ்வாய்க் கோள் அளவில் பூமியைத் தாக்கிய ஓரண்டம் சிதைத்து 99% திணிவு மிக்க இயற்கையான உயிரினத் தடை உண்டாக்கும் சூழ்வெளியை அகற்றியது. அதன் பின்னர் மிக மெல்லிய தெளிவான உயிரின வளர்ச்சிச் சூழ்வெளி தோன்றியது. அதே சமயத்தில் தான் முதன்முதல் சந்திரன் துணைக்கோளும் பூமிக்கு உண்டானதாகக் கருதப்படுகிறது.
2. அதே கொந்தளிப்புக் காலத்தில் தான் மிகையான கதிர் வெப்பம் வீசும் யுரேனியம் , தோரியம் மூலகங்கள் தோன்றி பூகோள உட்கரு செழிப்பாகத் தொடங்கியது. கதிரியக்க வெப்பம் அடித்தட்டுக் கண்ட நகர்ச்சியால் எழுந்த வாயுத் திடப் பொருட்களை சுற்றியகத்தால் பூமியிலிருந்து வெளியேற வழி வகுத்தது. அதாவது அடித்தட்டு நகர்ச்சியில் ஒன்றின் மீது ஒன்று குதிரை ஏறிக் கரி கலந்த பொருட்கள் வெளியாகிக் காலம் செல்லச் செல்ல ‘சுக்கிரன் விளைவு’ மாதிரி பூகோள சூடேற்றத்தைப் படிப்படியாகத் தவிர்ப்பது
3. கடல் நீர்மட்டம் ஏறி இறங்கி கடல் வெள்ளத்தின் சுற்றோட்டத்தை அனுதினமும் நிகழ்த்தி கடல் நீர் முடமாவதைத் தடுப்பது. அதன் விளைவு: மேலான மனித உயிர் வளர்ச்சிக்குத் தடையானவற்றை நீக்குவது
4. நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கடல் நீட்சி தடை செய்வதால் பூமியின் சுய சுழற்சி வேகம் தணிகிறது. அதனால் பூகோளத்தில் உயிரினம் செம்மையாக விருத்தியாகச் சூழ்வெளி மிதமாகிறது. பூமியின் சுழற்சி வேகம் மிகையானால் உயிரினம் பாதிக்கப்படும் பயங்கரச் சூழ்வெளி உருவாக வழி ஏற்படும்.
5. மேலும் பூமியின் சுற்றச்சு 23.4 டிகிரி பரிதிக்கு ஒப்பாகச் சரிந்திருக்க நிலவே நிலைப்பாடு செய்ய உதவுகிறது. அதே சமயத்தில் யுரனேஸ் கோளின் அச்சு கட்டுப்பாடு இல்லாமல் சுற்றச்சு சுமார் 98 டிகிரி சாய்ந்து போய் உள்ளது. அதாவது மிதமான பருவ நிலைக் காலம் பூமத்திய ரேகைப் பகுதிக்கு மேலும் கீழும் சுற்றியக்கம் பெற உயிரினங்களுக்கு வசதி உண்டாகிறது
6. உலகம் முழுவதிலும் நிலவின் அமைப்பே கடல் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. நிலவு இல்லாவிட்டால் அலை ஏற்ற இறக்கங்கள் பேரளவில் மெலிந்து போய்விடும்!. நிலவு இல்லாவிட்டால் பூமியின் சுழலச்சு தாறுமாறாக ஊஞ்சல் ஆடும். அந்த ஆட்டம் உஷ்ணக் கொந்தளிப்பையும் பெருத்த காலநிலை மாறுதல்களையும் உண்டாக்கும். புமியில் சுமுகமாக வசித்த மனித இனங்கள் வசதியற்ற தட்ப வெப்பச் சூழ்வெளியில் தவிக்க நேரிடும்.