அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Sunday, July 1, 2012

கல்வியின் மூலம் கிடைக்கும் உயர்வு மாத்திரம்தான் எமக்கு நிரந்தரமான உயர்வாக இருக்கும்-ஐரோப்பிய யூனியனுக்கான இலங்கைத் தூதுவர் பீ.எம்.எம். அம்சா


எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

கல்வியின் மூலம் கிடைக்கும் உயர்வு மாத்திரம்தான் எமது சமூகத்தின் நிரந்தரமான உயர்வாக இருக்கும் இதனை சாதாரண குடும்பத்திலிருந்தும் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இலவச கல்வியை வழங்கியுள்ளது. இதனை தமது பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையுமாகும். இவ்வாறு ஐரோப்பிய யூனியனுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பீ.எம்.எம். அம்சா தெரிவித்தார்.
காத்தான்குடி ஜாமியுழாபிரீன் பெரிய மீராஜும்ஆப் பள்ளிவாயலில் நேற்றைய ஜும்ஆ தொழுகையின் பின் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தூதுவர் பீ.எம்.எம். அம்சாவுக்கு அளிக்கப்பட்ட கௌரவிப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

இன்று ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம். முஸ்லிம்களை பொறுத்தவரையில் குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம்களை பொறுத்தவகையில் தமது பொருளாதாரம் மிக மோசமான நிலையினை அடைந்து கொண்டு செல்கின்றது. ஒரு காலத்தில் எமது பொருளாதாரம் வளர்ச்சிகண்டது, இப்போது அந்த சூழ்நிலை இல்லை. தொடர்ந்தும் இவ்வாரான போக்கில் செல்லமுடியமா என்பதை நாம் மிகவும் ஆழமாக சிந்திக்கவேண்டும். இந்த நாட்டிலே உள்ள இலவச கல்வியை பயன்படுத்த வேண்டும். அதன் மூலமாக எமது பிள்ளைகளை கல்வியின்பால் கொண்டு செல்லவேண்டும் கல்வியின் மூலம் கிடைக்கும் உயர்வு மாத்திரம்தான் எமக்கு நிரந்தரமான உயர்வாக இருக்கும் என்பது எனது ஆணித்தரமாக கருத்தாகும். இந்த நாட்டிலே இலவச கல்வி உள்ளது வெளிநாடுகளிலே இவ்வாரான வசதிகள் கிடையாது. இந்நாட்டில் இலவச கல்வி உள்ளதால்தான் இவ்வாரான நிலைக்கு சாதாரண குடும்பங்களிலிருந்தும் உயரக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு சகோதரரும் எப்படி எங்களது பெற்றோர்கள் இலவச கல்விக்குறிய வாய்ப்பினை பெற்றுத்தந்தார்களோ அதே வாய்ப்பினை எமது பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் அதற்கு தடையாக இருக்ககூடாது.

இன்று நாம் இலங்கையில் முக்கிய சமூகமாக இருக்கின்றோம் 1930ம் ஆண்டுகளில் எமக்கு ஒரு மத்திய மகா வித்தியாலயம் நிறுவப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்துவதற்கு முக்கிய கல்வித்தளமாக இந்த ஊரும் பாடசாலையும் திகழவேண்டுமென்பதற்காக அதுதரப்பட்டது. ஆனால் அண்மைக்காலமாக பார்க்கின்றபோது ஆட்சி நிருவாகத்தில் பங்கு பெருகின்ற எந்த பதவியையும் எம்மவர்கள் பெறுவது மிகக் குறைவாக உள்ளது. நிருவாக சேவையை எடுத்துக் கொண்டால் இரண்டு மூன்றுபோர் உள்ளனர். இலங்கை கல்வி நிருவாக சேவையை எடுத்துக் கொண்டால் ஒன்று இரண்டு பேர் உள்ளனர். இலங்கை கணக்காளர் சேவைக்கு எவருமில்லை. விஞ்ஞான விவசாய சேவையும் இவ்வாரே உள்ளது. கடல் கடந்த சேவையை எடுத்துக் கொண்டாலும் இரண்டு பேர்தான் இருக்கின்றனர். நாம் ஆளப்படுவதற்கு நம்மவர்கள் இருக்கவேண்டும். இங்கு இருக்கும் சங்கங்கள், இயக்கங்கள், அமைப்புக்கள் இதை ஒரு முக்கிய வேலைத்திட்டமாக எடுக்குமானால் அதற்கு தான் முன்னின்று ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உறுப்பினர்கள், ஜம்இயத்துல் பலாஹ் அரபுக்கல்லூரி அதிபர் செய்குல் பலாஹ் அப்துல்லாஹ் றஹ்மானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பீ.எம்.எம்.அம்சா அவர்களுக்கு பொண்னாடை போர்த்தி கௌரவித்தனர்
thanks to kattankudi info