
இலங்கையைச் சேர்ந்த மாணவன் கே.எம்.அக்கீல் மொஹம்மட் தனது 16வது வயதில் சீமா (CIMA) பரீட்சையில் சித்தியடைந்து உலகில் முதலாமிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இம்மாணவன் 2013ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற லண்டன் சாட்டட் முகாமைத்துவ கணக்காளர் பரீட்சையில்(எண்டபிறைசஸ் ஸ்டடஜிக்) அதிகூடிய 79 புள்ளிகளை பெற்றதன் மூலம் இச்சாதனையை படைத்துள்ளார்.
இம்மாணவன் மிகவும் இளம் வயதில் சீமா பரீட்சையில் தோற்றி இச்சாதனையை படைத்திருப்பது கல்லூரிக்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் கிடைத்த பெருமையாகும்.
மருதானை சென்ஜோசப் மற்றும் பொண்ட் சர்வதேச பாடசாலைகளில் இம்மாணவன் தனது ஆரம்ப, இடை நிலை கல்வியை பயின்றதுடன் உயர்தர கல்வியை நுகேகொடை லைசியம் சர்வதேச பாடசாலையில் கற்றுள்ளார். டொப் சீமா மாணவராகவும் றொபேர்ட் கோர்டன் யுனிவசிற்றியில் இறுதியாண்டில் பட்டப்படிப்பை இவர் மேற்கொண்டு வருகிறார்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரதி சுங்க அத்தியட்சகர் எஸ்.ரீ.கே முஹம்மட் மற்றும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியை சித்தி சலீமா மொஹம்மட் தம்பதிகளின் புதல்வராவார்.