க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்தார்.
பாடசாலை அதிபர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக பரீட்சை அட்டைகளை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் மாணவர்களது பெயர் மற்றும் விபரங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தால் இயலுமானவரை விரைவில் பரீட்சைகள் திணைக்களத்தை நாடுமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிபர்களைக் கேட்டுள்ளார்.
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அட்டைகள் பாடசாலை அதிபருக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அட்டைகள் அவர்களது தனிப்பட்ட விலாசங்களுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 05 ஆம் திகதி க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகிறது. சுமார் ஒரு மாதம் வரை கால அவகாசம் இருப்பதனால் பல அதிபர்கள் அவற்றை மாணவர்களிடையே பகிர்ந்தளிக்காது இறுதி தறுவாய் வரை வைத்திருப்பார்கள்.
இதன் காரணமாக பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக மாணவர்களும் பரீட்சைகள் திணைக்களமும் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவற்றை தவிர்க்கும் பொருட்டே இதற்குரிய வேலைத் திட்டங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 92 ஆயிரத்து 706 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இவர்களுக்காக சுமார் 2050 இற்கும் அதிகமான பரீட்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும் 14 ஆயிரத்துக்கு அதிகமான அதிகாரிகள் பரீட்சை கடமைகளில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.