இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த 292,706 விண்ணப்பதரர்களுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் தபாலிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பாடசாலை பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் பாடசாலை அதிபர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனியார் பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் அவர்களது தபால் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சாத்திகள் அதிபர்கள் கூடாக பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
பரீட்சைகள் நடைபெறும் காலத்தில் பரீட்சை அனுமதிப்பத்திரம் இல்லாத மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்கு எந்தவொரு காரணத்திற்காகவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் உடனடியாக அறியத்தருமாறு பரீட்சாத்திகளிடம் அத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வருடத்திற்கான உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.