(ULM.Riyas + முஹம்மது பர்ஹான்)சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனையும் வலய அதிபர்கள் சங்கமும் இணைந்து நடாத்துகின்ற மூன்றுநாள் கல்விக்கண்காட்சி இன்று 2ம் திகதி செவ்வாய்க்கிழமை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் ஆரம்பமாகியது.
சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லுரியில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இக் கண்காட்சியை நேற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.எ.அமீர் மற்றும் த.கலையரசன் ஆகியோர் அங்குரார்ப்பணம்செய்து வைத்தார்கள்.
அதேவேளை காலைமுதல் பெருந்தொகையான மாணவர்களும் பொதுமக்களும் சாரிசாரியாக வந்து கண்காட்சியை முண்டியடித்துக்கொண்டு பார்வையிட்டதைக் காணக்கூடியதாயிருந்தது.
சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லுரியில் செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாட்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றுவரும் இக்கண்காட்சியில் 32 காட்சிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
source jaffnamuslim