இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்புக்கள்
நம்நாட்டின் ஆரம்ப கால முஸ்லிம் வணிகர்கள் இந்நாட்டின் எற்றுமதி இறக்குமதி வணிகத்தில் கூடிய பங்களிப்புச் செய்துள்ளார்கள்.
இது இவர்களை ஆரம்ப காலம் முதற்கொண்டே இந்நாட்டு மன்னர் பிரதானிகளோடு தொர்பு கொள்ள வைத்தது.
சுதேச சிங்கள மக்கள் கடல் மார்க்க வணிகத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத நிலையில், அரபு வணிகர்களே நம் நாட்டின் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று அந்நிய செலாவணியைத் திரட்டி வழங்கினர்.
புடவை, கருவாடு முதலானவற்றை இங்கு எடுத்து வந்த அவர்கள், நாட்டு மன்னர்களுக்காகவும் சேவையாற்றினர்.
மந்திரி பிரதானிகளுடன் இவ்வாறு இவர்களுக்கு ஏற்பட்ட உறவானது, இந்நாட்டின் அரசியல் பிரச்சினைகளிலும் அவர்களைப் பங்கு கொள்ளச் செய்ய வழி வகுத்தது. (M.I.M. Ameen)
அ) சிங்கள மன்னர்களிடத்தில் முஸ்லிம்கள் நால்வர் அமைச்சர்களாகப் புரிந்தனர். (அல்-இத்ரீசி) ஆ)இவர்கள் அமைச்சர்களாகவன்றி அன்னிய இனத்தினரிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் வெளிநாட்டு வணிகத்தில் அரசுக்கு ஆலோசனை வழங்குவோராகவே இருந்தனர். (பீ. ஜே. பெரேரா
உள்நாட்டு விவசாயத்துறை பாதிப்படைந்தபோது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்றிறக்குமதி வர்த்தகத்தைப் பலப்படுத்த இலங்கை அரசு முஸ்லிம் தூதுவர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. Eg:*அந்நாட்டின் ஏற்றிறக்குமதி வர்த்தகத்தில் பங்கு வகித்த முஸ்லிம் ஒருவர் எகிப்துக்குத் தூதுவராக அனுப்பப்பட்டமை. * இரு நாடுகளுக்கும் இடையில் தூதுவர்களைப் பரிமாற்றம் செய்து கொள்வது பற்றியும், கட்டுப்பாடுகளின்றிச் சுதந்திரமாக இந்நாட்டில் வர்த்தகம் செய்வதற்கிருக்கும் வாய்ப்புக்கள் பற்றியும் அத்தூதுவர் எடுத்துச் சென்ற கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்தூதுக் குழுவிற்கு முஸ்லிம் ஒருவர் தலைமை தாங்கியமையும், சுதேச மொழியில் எழுதப்பட்டிருந்த குறித்த கடிதத்தை முஸ்லிம் ஒருவரே வாசித்தமையும். * இவ்விடயம் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் முஸ்லிம்கள் நேரடியாகவே கலந்து கொண்டார்கள் என்பதைக் காட்டுகின்றது.
புவனேகபாகு போர்த்துக்கீசரோடு சேர்ந்து மாயாதுன்னையை எதிர்த்தபோது, போர்த்துக்கீசரை விரட்டியடிக்க கள்ளிக் கோட்டை மன்னனன் சாமோரினின் உதவி மாயாதுன்னைக்கு அவசியமாகிய வேளையில், இவ்வுதவியைப் பெற முஸ்லிம்களையே கள்ளிக் கோட்டைக்கு மாயாதுன்னை அனுப்பி வைத்தான்.
கண்டிய மன்னன் சார்பாக முஸ்லிம்கள் ஒல்லாந்தரின் உதவியை நாடினர் என்ற ஒரே காரணத்துக்காகவே, 1642ல் மாத்தறையில் 200 முதல் 300 வரையிலான ஆண்களைக் கொலை செய்ததோடு பெண்களையும் பிள்ளைகளையும் சிறைப்படுத்தினர்.
போர்த்துக்கீசரை துரத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காகவே அல்லது ஒரு நன்றிக்கடனாகவே மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன் அக்குரனையில் காணி வழங்கி முஸ்லிம்களைக் குடியேற்றினான்.
கண்டிய மனனனின் தூதுவர்களாகவும் முஸ்லிம்கள் செயல்பட்டனர். Eg: 1) 1762இல் திருகோணமலையிலிருந்து கண்ணொருவைக்கு வந்த ஆங்கிலத் தூதுவர் ஜோன் பைபஸை கண்டிய அரசின் சார்பில் அதன் பிரதிநிதியாக நின்று முஸ்லிம் ஒருவரே உபசரித்தார். இப்பணியை சிறப்பாகச் செய்தமைக்காக கண்டி மன்னன் அவருக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தான். 2) இதே காலப் பகுதியில் கண்டி மன்னன் ஒல்லாந்தரைத் துரத்துவதற்காக உஸ்மான் லெப்பே மௌலா முஹாந்திரம் என்பவரை கர்நாடகா நவாப் முஹம்மத் அலியிடம் என்பவரைத் தூதனுப்பினார். * இவை கணடி மன்னனின் காலத்தில் முஸ்லிம்கள் எத்தகைய அரசியல் செல்வாக்கைப் பெற்றிருந்தனர் என்பதை காட்டுகின்றன.
*1815இல் இங்கிலாந்தின் தாரான்மைக் கொள்கை இலங்கையிலும் தாக்கம் செலுத்தல். * 1833இல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட நிரூபன சபையில் முஸ்லிம்களும் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டானமை. * 1865இல் அறிமுகமான முனிசிபல் சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களிலும் முஸ்லிம்களுக்கு பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்தமை. * கண்டி முனிசிபல் சபையில் 8 முஸ்லிம்கள் முஸ்லிம் சமூக நலனுக்காக குரல் கொடுத்தமை.
* 1833இல் சட்ட நிரூபண சபை அறிமுகமான போதும் 1889 வரை அதில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. * பறங்கியரும் தோட்டத்துரைமாரும் முஸ்லிம்களைவ விட சிறுபான்மையாக இருந்தும் அவர்களுக்கு அங்கத்துவம் கிடைத்திருந்தமை. * ஆகவே சித்திலெப்பையும் அவரது நண்பர்களும் அரசியல் உரிமை கோரி பத்திரிகைகள் மூலம் குரல் கொடுத்தனர். * கவர்னர்களுக்கு மஹஜர்களை அனுப்பியதோடு அவர்களை நேரடியாக சந்தித்து அரசியல் உரிமை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். * இப்போராட்டங்களின் விளைவாக 1889இல் எம். சி. அப்துல் ரகுமான் சட்ட நிரூபண சபை அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டார். அது முதல் முஸ்லிம்களும் தேசிய அரசியலில் பங்கு கொள்ளலாயினர்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பு * 19ம் நூற்றாண்டின் இறுதியில் சமய சீர்திருத்த இயக்கங்களும் போதைத் தடுப்பு இயக்கங்களும், 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொழிற் சங்கங்களும் இயங்க ஆரம்பித்தன. * இதனால் தேசீய உணர்வு மேலோங்க ஆரம்பித்தமையும், பிரித்தானிய சாமராஜ்யத்துக்கு உட்பட்டுச் செயல்படுகின்ற ஆட்சிப் பொறுப்பு தமக்கு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தமை * இலங்கை மக்களின் இச்சுதந்திரக் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக 1919ல் இலங்கைத் தேசீய காங்கிரஸ் உருவாக்கப்படல் * இதன் உப தலைவராக இளம் பட்டதாரி வு.டீ. ஜாயா தெரிவாதலும், முஸ்லிம்கள் பலரும் இக்கட்சியின் உருப்பினராகச் சேர்ந்து கொண்டமையும், இதன் விளைவாக, இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களும் பங்காற்றியமும்
சிவில் சேவை உத்தியோகத்தரின் சம்பளத்தைக் கூட்டுவதற்காக, வரித்தொகை அதிகரிக்கப்படுவதை எதிர்த்து, 1922ல்சட்ட நிரூபண சபையின் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்கள் வெளி நடப்புச் செய்தபோது , முஸ்லிம் உறுப்பினர்களும் அவர்களோடு இணைந்து கொண்டமை
யாப்புச் சீர்திருத்தத்தால் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, உத்தியோகப்பற்றுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அதிகரிக்கப்பட்டது. * அவ்வுறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கும் ஏற்பாடாகியிருந்தது. * முஸ்லிம் சிறுபான்மைக்கு மொத்தமாக 49 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் 03 ஆசனங்களே ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த 03 ஆசனங்களும் கவர்னரால் நியமிக்கப்படுவதை மரபு-வழி முஸ்லிம் உயர் குழாத்தினர் ஆதரித்தனர். * லண்டன் குஞ்சுகள் எனப்பட்ட படித்த வர்க்கத்தினர் அதனை எதிர்த்து, அந்த முவரும் மக்களால் தெரிவு செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். * இக்கோரிக்கையை கவர்னர் ஏற்றுக் கொண்டதால் முஸ்லிம் சமூகத்தில் முழு இலங்கையையும் தழுவிய தேர்தல் நடாத்தப்பட்டது. * இதன்முலம் 1. மாகான் மாகார், N.H.M.ஆ. அப்துல் காதர், T .B. ஜாயா ஆகிய மூவரும் சட்ட மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்ப்டனர். * இத்தேர்தல் இலங்கை முழுவதிலும் பரந் வாழ்ந்த முஸ்லிம்களை உள்ளடக்கியதாக நடாதத்தப்பட்டதால், முஸ்லிம் வேட்பாளர்கள் தம் ஆதரவாளர்களுடன் நாடளாவிய ரீதியில் சென்று வாக்குக் கோரினர். * இது முஸ்லிம் பொது மக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சியைக் காட்ட பெரிதும் உதவியது.
கனமூர் சீர்திருத்தத்தால் சட்டசபைக்கு உறுப்பினர்கள் தெரிவான போது முஸ்லிம் எவரும் வாக்காளரால் தெரிவு செய்யப்படவில்லை. * கவர்னரால் நியமிக்கப்படுவோரைக் கொண்டே அனைத்தும் நடந்தது. * ஆகவே, முஸ்லிம் லீக் 50.000 வாக்காளர்களின் கையொப்பத்தைப் பெற்று தமது குறைகளை நீக்குமாறும் மஹஜர் ஒன்றை துதுக் குழு ஒன்றின் மூலம் காலணித்துவ நாடுகளுக்கு பொறுப்பான காரியதரிசிக்குச் சமர்ப்பித்தது. * தமக்கு சுதந்திரமளிப்பதாக அளித்த வாக்குருதியை நிறைவேற்றுமாறு கோரி அரசாங்க சபை இரண்டாம் உலக யுத்தத்தின் பின் கோரிக்கை விடுத்த போது 3 முஸ்லிம் உறுப்பினர்களும் எவ்வித நிபந்தனையும் விதிக்காது ஆதரவு நல்கினர். * இப்பிரேரணை பற்றி T.B. ஜாயா அரசாங்க சபையில் பின்வருமாறு உரையாற்றினார் ‘ இனரீதியான கோரிக்கைகளையும், இலாபங்களையும் அடைவதைவிட சுதந்திரம் பெறுவது ஒரு முஸ்லிமுக்கு மிகவும் முக்கியமானது. மக்களின் பிறப்புரிமையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை.’ * இதன்பின் உரையாற்றிய ளு.று.னு.சு.னு. பண்டாரநாயக்கா முஸ்லிம் உறுப்பினரின் ஆதரவுக்காக தனது சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும், முஸ்லிம்களின் நியாயபூர்வமான எந்தக் கோரிக்கைகளையும் சீர்தூக்கிப் பார்க்க தான் சித்தமாக இருப்பதாகவும் கூறியமை நோக்கத்தக்கது.
1939ல் நடைபெற்ற அகில இலங்கை அரசியல் மாநாட்டில் சட்டசபை உறுப்பினராகக் கடமையாற்றிய ளுசை. மாகான் மாகார் உரையாற்றும்போது, பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்படுவதைநான் விரும்பவில்லை.இந்நாட்டை சிங்களவர்கள் ஆட்சி செய்வதை நான் எதிர்க்கவில்லை என்பதை நான் என் மனசாட்சியை சானறாக வைத்துக் கூறுகிறேன்’ எனக்கூறினார். * இதே கூட்டத்தில் உரையாற்றிய அப்போதைய இளம் அரசியல்வாதி பதீஉத்தீன் மஹ்மூத், ‘எமது நாட்டுக்குப் பூரண சுதந்திரம் கோருவதில் சிங்கள மக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.’ எனக் கூறினார். * 1945ல் அரசாங்க சபையில் ளுசை. ராஸிக் பரீத் யாப்புச் சீர்திருத்தம் பற்றிப் பின்வருமாறு உரை நிகழித்தினார். ‘ எம்மிடம் உள்ள அரசியல் ஞானமும், நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்ற உணர்வும்தான் இந்நாட்டுக்கு டொமினியன் அந்தஸ்துக் கோரும் போது சிங்கள மக்களோடு தோளோடு தோள் நின்று நாமும் போராட எம்மைத் தூண்டின.’
நம் நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் வந்தபோதெல்லாம் இந்நாட்டு முஸ்லிம்கள் ஆரம்பம் முதல் இன்று வரை சுதந்திரத்தைக் காப்பதற்காக சிங்கள மக்களோடு தோளோடு தோள் சேர்ந்து அந்நிய சக்திகளுக்கெதிராகப் போராடியுள்ளார்கள். இலங்கை நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களாக அவர்கள் என்றுமே இருந்ததில்லை. நூட்டின் நலனுக்காகப் பெரும்பான்மை மக்களோடு இணைந்து அவர்கள் எப்பொழுதும் செயல்பட்டார்கள்
ஐரோப்பியர் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள்
போர்த்துக்கீசர் காலம் (1505 – 1656)
இவர்கள் இலங்கை வந்தடைந்தபோது தமது கீழைத்தேய வர்த்தகத்துக்குப் போட்டியாக இருந்த முஸ்லிம்கள் இந்நாட்டின் துறைமுக நகர்களிலும் பெரும் செல்வாக்குடன் இருப்பதைக் கண்ணுற்றனர். போர்த்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் பழைமை வாய்ந்ததாகும். கி.பி. 711 ல் Spain கைப்பற்றப்பட்டது முதல் அரசியல், சமயம், பொருளாதாரம் முதலாம் துறைகளிலும் இவ்விரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட பகைமையும் போட்டியும் காரணமாக அவர்களிடையே கசப்பான உணர்வுகள் நிலவின. இதனால் இந்நாட்டு முஸ்லிம்களையும் போர்த்துக்கள் தம் எதிரிகளாகக் கருதினர். போர்த்துக்களின் வர்த்தக முயற்சிகளையும் அதன் பின்னால் மறைந்திருந்த அரசியல், சமய அபிலாசைகளையும் முஸ்லிம்கள் நன்கு அறிந்திருந்ததால் போர்த்துக்களின் இலங்கை வருகையை அவர்கள் விரும்பவில்லை. இதனால் இரு சமூகத்தாரும் ஒருவர் மற்றவரை சந்தேகக் கண்கொண்டு பார்த்தது மட்டுமல்லாது பகைமை உணர்வுடனும் செயற்படலாயினர்.
கி.பி. 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் நிலவிய அரசியற் பின்புலமும் அவர்களிடையே பகைமை வளரத் துணையாகியது. கோட்டை இராசதானி கி.பி. 1521ல் புவனேகபாகு, மாயாதுன்னை, ரைகம்பண்டார எனும் மூன்று சகோதரர்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டு மூன்று தனித்தனி அரசுகளாகியது. முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்த கொழும்புப் பகுதி கோட்டை மன்னன் புவனேகபாகுவின் ஆட்சியின் கீழ் வந்தது. மாயாதுன்னையின் ஆட்சிக்குட்பட்ட சீதாவக்கையுடனான யுத்தத்தில் புவனேகபாகு போர்த்துக்களின் உதவியை நாடினான். இதனால் போர்த்துக்களின் வற்புறுத்தலுக்கிணங்கி மூன்றே நாட்களில் தனது இராசதானியை விட்டும் வெளியேறுமாறு 1526ல் அவன் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டான். முஸ்லிம்களின் உதவியைப் பெற்றுக் கொள்ள விரும்பிய மாயாதுன்னை, துரத்தப்பட் முஸ்லிம்களை தனது ஆட்சிக்கு உட்பட்ட எல்லைக்குள் குடியமர்த்தினான். போர்த்துக்கள் சீதாவக்கையைக் கைப்பற்றிய பின்பு, அங்கு வந்த முஸ்லிம்கள் பற்றித் தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கவேண்டியதாயிற்று. அங்கிருந்து அவர்களை வெளியேற்றினால் முஸ்லிம்கள் கண்டியில் குடியேறித் தமது எதிரியான கண்டி மன்னனின் கையைப் பலப்படுத்துவர். அத்துடன் உள் நாட்டு வர்த்தகத்திலும் படகோட்டுவதிலும் போர்த்துக்களுக்கு முஸ்லிம்களின் சேவையைப் பயன்படுத்தவேண்டிய கட்டாயத் தேவையிருந்தது. எனவே, முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. பதிலாக கரையோர நகர்களில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு தொல்லைகள் கொடுத்து அவர்களின் செல்வங்களையும் கொள்ளையடித்தனர். 1579ல் வெலிகாமத்து முஸ்லிம்கள் இவ்வாறான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இலங்கையில் வாழ்ந்த கிறிஸ்தவ மதகுருமார் இலங்கை முஸ்லிம்களை கோட்டையிலிருந்து வெளியேற்றுமாறு தொடர்ந்து வற்புறுத்தினர். ஆகவே, பின்வரும் 3 காரணங்களைக் காட்டி முஸ்லிம்களை வெளியேற்ற போர்த்துக்கல் தீர்மானித்தது.
1. முஸ்லிம்கள் உள்நாட்டு அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறார்கள்.
2. தமது எதிரியான கண்டிய மன்னனோடு வர்த்தகம் செய்து அவனது கையை பலப்படுத்துகிறார்கள்.
3. சிறுபான்மையாக இருந்தும் நல்ல பொருளாதார செழிப்போடு வாழ்கிறார்கள்.
கி.பி. 1626இல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை கணடிய மன்னன் செனரத் (1604 – 1635) வரவேற்று கண்டியின் உட்புற நகர்களிலும் மட்டக்களப்பிலும் குடியேற்றினான். முட்டக்களப்பில் மாத்திரம் 4000 முஸ்லிம்கள் இவனால் குடியேற்றப்பட்டனர். முஸ்லிம்கள் போர்த்துக்கலை தாக்குவதற்காக ஒல்லாந்தரிடம் உதவி கோரினர் என்ற குற்றச்சாட்டைச் சுமத்தி 1642இல் மாத்தறையில் 200 முதல் 300 வரையான முஸ்லிம் ஆண்களைக் கொன்று அவர்களது பெண்களையும் பிள்ளைகளையும் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு சென்றனர். போர்த்துக்கலின் இத்தகைய நடவடிக்கைகளால் அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதும் முஸ்லிம்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர்.
போர்த்துக்கீச அதிகாரிகளோடு கொண்டிருந்த தொடர்பும், தமது பொருளாதார நலன்களுக்காக முஸ்லிம்களை பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலையில் போர்த்துக்கீச அதிகாரிகள் இருந்தமையும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் அதிகமானோர் மீண்டும் கரையோரப் பகுதிகளில் குடியேறத் துணையாகின. போர்த்துக்கீசர் தயாரித்த தோம்புகள் முஸ்லிம்கள் குடியேறியிருந்த பகுதிகள் பற்றி அறிய உதவுகின்றன. 16ம், 17ம் நூற்றாண்டுகளில் புத்தளம், சிலாபம், மாதம்பை, நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, பேருவளை, பயாகலை, அளுத்கம, பெந்தொடை, வெலிகம, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வலிகாமம், மன்னார்த் தீவு ஆகிய கரையோரங்களிலும் பானகமுவ, கண்டி, கம்பளை, ஹிங்குள, மாவனெல்லை முதலாம் இடங்களிலும் முஸ்லிம் குடியேற்றங்கள் இருந்தன. 1614இல் சிலாபம், நீர்கொழும்பு, களுத்துறை நகர்களில் தலா ஒவ்வொரு முஸ்லிமும், அளுத்கமையில் மூன்று முஸ்லிம்களும் கிராமத் தலைவர்களாகக் கடமையாற்றினர். புத்தளத்திற்கும் முல்லைத்தீவிற்கும் இடையே உள்ள பிரதேசத்தில் மாநில சுயாட்சி உரிமையுடன் முஸ்லிமகள் பரிபாலனம் செய்துள்ளனர். குமார வன்னியன் எனும் பதவிப் பெயர் தாங்கிய ஒரு முஸ்லிம் இத்தகைய பிரதேசமொன்றின் தலைவராக இருந்துள்ளதை வரலாறு கூறுகிறது.
போர்த்துக்கீசர் காலத்திலும் இலங்கை - இந்தியா வரத்தகம் முஸ்லிம்கள் வசமே இருந்து வந்தது. இவ்வர்த்தகத்துக்கான மூலதனமும் உபயோகித்த வள்ளங்களும் முஸ்லிம்களுடையனவே. வுள்ளங்களும் மாலுமிகளும் பணியாளர்களும் முஸ்லிம்களே. கப்பலோட்டுவதில் முஸ்லிம்கள் திறமை பெற்றிருந்ததால் எத்தகைய தொழிலையும் முஸ்லிம்களுக்கு வழங்க விரும்பாத போர்த்துக்கீசரும் வேறு வழியின்றிதம் கப்பல்களில் முஸ்லிம்களை மாலுமிகளாக அமர்த்திக் கொண்டனர். ஊள்நாட்டு வர்த்தகமும் முஸ்லிம்கள் வசமே இருந்தது. ஊப்பு, கருவாடு, புடவை முதலானவற்றைக் கொடுத்து விட்டு அரிசி, பாக்கு, தேன், மெழுகு, வெற்றிலை போன்றவற்றைப் பெற்றனர். இப்பொருட்களை பொதி சுமக்கும் மாடுகள் மூலம் கொண்டு சென்றனர். இவ்வாறு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தாவளம் என அழைத்தனர். இதற்கு பொதி சுமக்கும் 65 மாடுகளை பாணகமுவையில் வாழ்ந்த 12 முஸ்லிம்கள் வைத்திருந்தனர். சுpல முஸ்லிம்கள் தையல் வேலையிலும் தச்சு வேலைகளிலும் 16ம், 17ம் நூற்றாண்டுகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஓல்லாந்தர் காலம் (1656 – 1796)
1656ல் இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிய இவர்களின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம்களால் அமைதியாக வாழ முடியவில்லை. இலாப நோக்கோடு செயல்பட்ட ஒல்லாந்தர் இலங்கை முஸ்லிம்கள் வசம் இலங்கை-இந்திய வர்த்தகமும் இருப்பதைக்கண்டு ஆத்திரமடைந்தனர். முஸ்லிம்களின் வர்த்தகத்தை ஒடுக்கிவிடுவதற்காக கண்டிப்பான விதிகளை அறிமுகப்படுத்தினர். வுர்த்தகத்தைத் தம்வயப்படுத்த எததகைய இழிவான வழிமுறைகளையும் கையாள அவர்கள் தயங்கவில்லை. வர்த்தகத்தை ஒடுக்கும் நோக்கில் முஸ்லிம்களின் குடியேற்றத்தைத் தடுத்து, சுதேச முஸ்லிம்களின் நடமாட்டத்துக்கும் கட்டுப்பாடு விதித்தனர். இந்தியாவுடனான வர்த்தகத்தில் முஸ்லிம்கள் ஒல்லாந்தருடன் பங்குதாரராக மட்டுமே ஈடுபடலாம் என்று 1659ல் சட்டமியற்றினர். முஸ்லிமல்லாதோருக்கு சுங்க வரியில் இருந்து விலக்களித்து, முஸ்லிம்களிடம் அதிளவில் சுங்க வரி அறவிட்டனர். முஸ்லிம்களின் உள்நாட்டு வர்த்தகத்துக்கும், ஊர்-ஊராகப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பதற்கும் தடைகளை ஏற்படுத்தினர். இவை எதிர்பார்த்த பலனைத் தராதபோது குறித்த சில எல்லைக்குள் மட்டும் முஸ்லிம்களை நடமாட அனுமதித்தனர். வேவ்வேறு இடங்களில் வாழும் முஸ்லிம்களின் பெயர்கள், அவர்களின் தொழில்கள் போன்றவற்றை வளக்கும் பெயர் அட்டவணையொன்றைத் தயாரித்தனர். விவசாயப் பயிர்ச் செய்கை, வள்ளம் ஓட்டுதல் தவிர்ந்த வேறெந்தத் தொழிலையும் செய்யக் கூடாதெனக் கட்டுப்பாடு விதித்தனர். நேரடியாகவோ, மறைமுகமாகவோ வர்த்தகம் செய்வதைத் தடுக்கத் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். வேளிநாட்டிலிருந்து வரும் முஸ்லிம் வர்த்தகர்கள், தாம் வரும் அதே கப்பலில் திரும்பிச் செல்லுதல் வேண்டும் என்றும், அதனைத் ‘திஸாவை’ மேற்பார்வை செய்தல் வேண்டும் என்றும், வெலிகமையில் இக்கட்டளை கண்டிப்பாக அமுல்படுத்தப்படுதல் வேண்டும் என்றும் ஒல்லாந்து அரசு கட்டளையிட்டது. கிழக்கந்திய வர்த்தகக் கம்பனி தனது ஆதிக்கத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிமல்லாத ஏனைய சுதேசிகளுக்கும் வழங்கும் சலுகைகளைவிடக் குறைந்த சலுகைகளையே முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என்றும், எச்சந்தர்ரப்பத்திலும் கிறிஸ்தவர்களை மிகை;க முஸ்லிம்களை அனுமதிக்கக் கூடாது என்றும் ஒல்லாந்து அரசு ஆலோசனை கூறியது. அத்துடன், முஸ்லிம் மதபோதகர்கள் தமது சமூக நிலை பற்றிய அறிக்கையொன்றை அவ்வப்போது சமர்ப்பிக்கவேண்டும் என்றும் அவ்வரசு கேட்டுக்கொண்டது. கொழும்பிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்த முஸ்லிம்களை 1670ல் அப்பிரதேசங்களிலிருந்து ஒல்லாந்தர் வெளியேற்றினர். அளுத்கமைக்கும் காலிக்கும் இடையிலுள்ள பகுதிகளில் குடியேற அவர்களுக்கு அனுமதி வழங்கினர். தமது பொருளாதார நலன்களுக்குப் பாதகம் ஏற்படாத வகையில் இச்சட்டம் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சற்றுத் தளர்த்தப்பட்டது.
இவர்கள் கரையோரத்தில் வாழ்ந்த சோனகர் எனப்பட்ட முஸ்லிம்களுக்குத் தொல்லைகளைக் கொடுத்தபோதும், யாவுகர் எனப்பட்ட இந்தோனேசீய முஸ்லிம்களைக் கரையோரப் பகுதிகளில் குடியமர்த்தித் தொழில்களையும் வழங்கினர். ஓல்லாந்தர் ஆட்சிக்காலம் முழுவதிலும் இவர்கள் இலங்கையில் தொடர்ந்து குடியேற்றப்பட்டனர். பதேவிய அரசால் நாடு கடத்தப்பட்ட அரசியற் கைதிகளும், படை வீரர்களாகவும் அரச உத்தியோகத்தர்களாகவும் கடமையாற்ற அழைத்து வரப்பட்ட மலாயர்களும் இவர்களில் அடங்குவர். இவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்ததால் இலங்கை முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து வாழ்ந்தனர். இதனால் இதுகாலவரை அரேபிய, பாரசீக, இந்திய, சுதேச முஸ்லிம்களை உள்ளடக்கியிருந்த இலங்கை முஸ்லிம் சமூகம், மலாய் முஸ்லிம்களையும் தன்னுள் அரவணைத்துக் கொண்டது.
ஐரோப்பியரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்களின் கொடுமைகளுக்குள்ளாகித் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோதும் கண்டி இராச்சியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழ்ந்த பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்தனர். போர்த்துக்கீசரும் ஒல்லாந்தரும் இலங்கையின் கரையோர நகர்களைக் கைப்பற்றியிருந்தபோதும் மேற்கே புத்தளமும் கற்பிட்டியும், கிழக்கே திருகோணமலையும் கொட்டியாரமும் மடடக்களப்பும் கண்டிய மன்னனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தன. இத்துறைமுகங்களின் மூலம் கண்டியின் விளை பொருட்களை முஸ்லிம்கள் இந்தியாவுக்குக் கொண்டு சென்றனர். இந்த நகர்களினூடாக கண்டிக்குச் செல்லும் பாதைகள் இருந்தன. இப்பாதைகள் ஊடாகச் சென்ற வர்த்தகக் குழுக்கள் தங்கிச் சென்ற இடங்களில் முஸ்லிம் குடியேற்றங்கள் இடம்பெற்றன. கோட்டியாரத்தையும் கண்டியையும் இணைக்கும் பாதையில் உள்ள “பங்குரண”, “நிகவடன” எனும் கிராமங்களும் இவ்வாறான முஸ்லிம் குடியேற்றங்களே.
கண்டி உணவுத் தேவையில் சுயதேவைப் பூர்த்தியை அடைந்திருந்தாலும் உப்பு, கருவாடு, புடவை என்பவற்றைப் பெறுவதற்கு முஸ்லிம் வியாபாரிகளை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. கண்டியில் விளைந்த பாக்கை அவர்கள் ஏற்றுமதி செய்து கண்டியின் பொருளாதாரத்தை வளப்படுத்தினர். கண்டியின் ஆதிககத்துக்குட்பட்டிருந்த கிழக்கு மாகாண முஸ்லிம்கள், விவசாயம் செய்வதிலும் மந்தை வளர்ப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். ஆடைகள் நெய்யும் தொழில் நுட்பத்தினையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
கண்டியின் அரச நிர்வாகத்திலும் முஸ்லிம்கள் பங்குகொண்டிருந்தனர். கண்டியில் மக்கள் செய்த தொழில்களை அடிப்படையாகக் கொண்டு பல திணைக்களங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை பந்த என அழைக்கப்பட்டன. இராஜ சிங்கனின் காலத்தில் (1747 – 1781) ஷேஹ் ஆலிம் என்பவர் மடிகே பந்த எனும் திணைக்களத்துக்குப் பொறுப்பாக இருந்தார். அவர் மடிகே பந்த நிலமே என அழைக்கப்பட்டார். இதேபோல முகாந்தரம், லேகம், கிராமத்தலைவர் எனும் பதவிகளையும் முஸ்லிம்கள் வகித்தனர். கண்டிய அரசின் வைத்தியத் துறைத்தலைவராகவும் முஸ்லிம்கள் பணியாற்றியுள்ளனர். இவர்கள் பெஹேத்கே முகாந்திரம் நிலமே என்றழைக்கப்பட்டனர். ராஜபக்ஷ வைத்தய திலக கோபால எனும் குடும்பப் பெயர் கொண்டழைக்கப்பட்ட முஸ்லிம் வைத்தியருக்கு கண்டி மன்னன் 1747ல் உடுநுவரையில் நிலம் வழங்கி கௌரவித்தான். மற்றொரு வைத்தியரான பூவலிகட வெதராலகே அபூபக்கர் புள்ளே என்பவருக்கு 1786ல் தஸ்கரையில் நிலங்களை வழங்கினான். கண்டி மன்னனின் படையில் 2ம் இராஜசிங்கனின் காலத்தில் (1635 – 1687) இருந்து முஸ்லிம்கள் இராணுவ வீரர்களாகக் கடமையாற்றியுள்ளனர். 1810ல் 250 முஸ்லிம் வீரர்களும் 200 மலாய் வீரர்களும் கண்டி மன்னனின் படையில் பணியாற்றினர்.
முஸ்லிம்களின் பள்ளிகளைக் கட்டிக் கொள்வதற்கு கண்டிய அரசன் நிலம் வழங்கியதோடு அவற்றைப் பரிபாலிக்க நிதியுதவியும் வழங்கினான். கண்டியில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் மிக்க அந்நியோன்னியமாக உறவாடினர். கோத்திர வேறுபாடு நிலவிய அச்சமூகத்தில் வேளாளர் குலத்தின் முதலிபேருவ எனும் கோத்திரத்துக்கு அண்மியவர்களாக முஸ்லிம்களைக் கணித்துக் கௌரவித்தனர். இவ்விரு சமூகத்தாரிடையே நிலவிய சுமுகமான உறவு, ஆங்கிலேயர் கண்டியில் தலையிடும்வரை நீடித்தது. அதன்பின்னர் ஆங்கிலேயர் அவர்களிடையே வேற்றுமை உணர்வுகளை மிகவும் திறமையாக வளர்த்துவிட்டனர்.
ஆங்கிலேயர் காலம் (1796, 1815 – 1948)
1796ல் ஆங்கிலேயர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். 1815இல் கண்டியையும் கைப்பற்றி, இலங்கை முழுவதையும் தமது ஆளுகைக்கு உட்படுத்தினர். 1948இல் சுதந்திரம் கிடைக்கும் வரை இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயரின் பரிபாலனத்தில் போர்த்துக்கீஷர், ஒல்லாந்தர் காலத்தில் முஸ்லிம்கள் அனுபவித்த சோதனைகள், துன்பங்கள் படிப்படியாகக் குறையலாயின. இத்தீவின் ஏனைய சுதேச இனங்களைப்போல முஸ்லிம்களும் தமக்கெனத் தனி ஒரு கலாசாரத்தையுடைய சிறுபான்மையினர் என்பதை ஆங்கில அரசு அங்கீகரித்துச் செயற்பட்டது. பள்ளிகளைக் கட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டிய நிலை நீடித்த போதும், கி.பி. 1799இல் வணக்க சுதந்திரத்தை ஆங்கில அரசு வழங்கியது. முஸ்லிம்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகியது. அரசு கி.பி. 1830இல் இராஜகாரிய ஊழியத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விதிவிலக்களித்தது. புறக்கோட்டையிலோ, கோட்டையிலோ நிலங்கள் அல்லது வீடுகளை வைத்திருக்கக் கூடாது என்று கி.பி. 1747இல் ஒல்லாந்தர் விதித்திருந்த சட்டத்தை, ஆங்கில அரசு கி.பி. 1832இல் நீக்கியது. இதனால், தலைநகரில் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக வாழ வாய்ப்புக் கிட்டியது. ஆங்கிலேயரின் வர்த்தகக் கொள்கையும், போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் போலன்றி, முஸ்லிம்களுக்கு ஓரளவு சாதகமாக அமைந்தது. ஆதலால், உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வாய்ப்புக்கிட்டியது. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பும் இலங்கையில் அறிமுகமாகியது. இப்புதிய பொருளாதாரச் சூழலை முஸ்லிம்கள் தமக்கு ஓரளவு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போதும், சமகாலத்தில் வளரச்சி பெறத் தொடரங்கிய கல்வித்துறையில் ஆர்வம் காட்டாமையால், அத்துறையில் மட்டுமுன்றி அரசியற் துறையிலும் பின்தங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.