இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 1,292 வெற்றிடங்கள் நிலவுகின்றன என்று உயர்கல்வி அமைச்சர் எஸ். பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக் கையில் நூற்றுக்கு 5 வீதமான இடம் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
எனினும் மருத்துவ, விஞ்ஞானக் கற்கை நெறியை விடுத்து ஏனைய கற்கை நெறிகளுக்கு வெளிநாட்டுத் தகைமைகளைக் கொண்டுள்ள இலங்கையர்களோ அல்லது வெளிநாட்டு மாணவர்களோ விண்ணப்பித்துக் கொள்ளாமையே வெற்றிடம் ஏற்பட காரணமாகியுள்ளது என்று கூறினார்.
மருத்துவ, விஞ்ஞான கற்கை நெறிக்கு 41 வெற்றிடங்களும், பல்சத்திர சிகிச்சை விஞ்ஞான கற்கை நெறிக்கு 3 வெற்றிடங்களும், பொறியியல் விஞ்ஞான கற்கை நெறி தொடர்பாக 62 வெற்றிடங்களும், உயிரியல் விஞ்ஞான கற்கை நெறிகள் தொடர்பாக 57 வெற்றிடங்களும், கணினி விஞ்ஞான பாடநெறி தொடர்பாக 11 வெற்றிடங்களும் காணப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
கலைத்துறை பாடநெறிகள் தொடர்பாக 240 வெற்றிடங்களும், முகாமைத்துவக் கற்கை நெறிகள் தொடர்பாக 172 வெற்றிடங்களும், மாணிக்கக்கல் கற்கை நெறி தொடர்பாக 23 வெற்றிடங்களும், பௌதிக விஞ்ஞான கற்கை நெறிகள் தொடர்பாக 87 வெற்றிடங்களும் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டினார்
Wednesday, May 15, 2013
வெளிநாட்டு மாணவர்களுக்கு ..இலங்கைப் பல்கலைக்கழகங்களில்.. 1,292 வெற்றிடங்கள்!
Wednesday, May 15, 2013
News