- றப்தான் -
கடந்த 2012ம் ஆண்டில் நடை பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையின் முடிவுகளின் படி தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 83.4வீதங்களை பெற்று முதலிடம் பெற்றுள்ளது.
79 வீதங்களை பெற்று கண்டி வலயம் இரண்டாவது இடத்தினையும், 77 வீதங்களை பெற்று கொழும்பு வலயம் மூன்றாவது இடத்தினையும் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கடந்த 2011ம் ஆண்டும் கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர், காத்தான்குடி ஆகிய கல்விக் கோட்டங்களில் 66 பாடசாலைகள் உள்ளன.

Thanks to kattankudi.info