இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதும், சமூகப் பணித்துறையில் இலங்கையில் தொழில்சார் கல்வியை வழங்கிவரும் ஒரேயொரு கல்வி நிறுவனமான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் 2013ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த பட்டப்படிப்பானது முழுநேர 4 வருடங்களை உள்ளடக்கிய ஆங்கில மொழி மூலமான பாட நெறியாகும். (முதல் இரண்டு வருடங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் விரிவுரைகள் நடைபெறும்.
மிகவும் போட்டிமிக்க தொழிற்சந்தைக்கு ஏற்றாற் போல வடிவமைக்கப்பட்டுள்ள இக்கல்வித் திட்டமானது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்டதும் ஒரு வருடகால களப் பயற்சிகளையும் உள்ளடக்கியதாகும். அத்தோடு, கல்வி கற்றுக் கொண்டு இருக்கும் போதே தொழில் சந்தைக்குள் பிரவேசிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் காணப்படுகின்றது.
விசேடமாக இத்துறையானது எமது நாட்டைப் பொறுத்தவரையில் தொழில் சந்தை மற்றும் சமூகங்கள் வேண்டி நிற்கும் சமூகவியல் (Sociology), உளவியல் (Psychology), உளவளத்துணை (Counseling), முரண்பாடும் அதன் தீர்வு முறையும் (Conflict and Conflict Resolution), அனர்த்த முகாமைத்துவம் (Disaster Management), சமூக அபிவிருத்தி (Social Development) போன்ற முக்கியமான பாடத்திட்டங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இத்துறையானது எமது எதிர்கால சமூகத்திற்கு சிறந்த ஆளுமைமிக்க சமூகத் தலைவர்களையும், சமூகப் பணியாளர்களையும் உருவாக்குவதற்கு நிச்சயம் உதவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதில் இணைக்கப்பட்ட மாதிரியினடிப்படையில் ஆங்கில மொழியில் சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பமானது 2013.04.30 ஆம் திகதிக்கு முன்னர் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்படல் வேண்டும். கடித உறையில் மேல்பக்க இடது மூலையில் BSW 2013 எனக் குறிப்பிடவும்.
The Director, National Institute of Social Development, 488A, Nawala Road, Rajagiriya. மேலும் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தோடு The Director, National Institute of Social Development என்ற பெயருக்கு ரூபா 500.00 பெறுமதியான காசுக் கட்டளையை இணைத்து 5 ரூபா பெறுமதியான முத்திரையொட்டிய, தங்களின் விலாசம் எழுதப்பட்ட கடித உறையையும் இணைத்து 2013.04.30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புதல் வேண்டும்.
மேலதிக தகவல்கள் தேவைப்படின் தொடர்புகளுக்குwww.nisd.lk 0774772357, 0776162404, 0772280889