தொழினுட்பவியல் தேசிய டிப்ளோம கட்கைநெறியானது இரண்டுவருட முழுநேர கற்றலையும், ஒருவருட தொழிற் பயிற்சியையும் உள்ளடக்கியது.
விண்ணப்பதாரிகள் பின்வரும் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்:
கப்பற்றுறைக் கல்வியும் தொழிநுட்பவியலும்.
கடல்சார் எந்திரவியல் தொழில்நுட்பவியல்.
இரசாயன எந்திரவியல் தொழில்நுட்பவியல்.
குடிசார் எந்திரவியல் தொழில்நுட்பவியல்.
மின்சார எந்திரவியல் தொழில்நுட்பவியல்.
இலத்திரன் தொலைத்தொடர்பு எந்திரவியல் தொழில்நுட்பவியல்.
பொறிமுறை எந்திரவியல் தொழில்நுட்பவியல்.
பல்பகுதிய தொழில்நுட்பவியல்.
புடவை மற்றும் ஆடைத்தொளினுட்பவியல்.
விண்ணப்பதாரருக்கான குறைந்தபட்ச தகமைகள்:
31-12-2011 ஆந் திகதியன்று 24 வயதிற்குக் குறைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரிகள் G.C.E A/L பரீட்சையில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது துறை ஒன்றில் மூன்று பாடங்களிலும் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
* பௌதீகவியல் விஞ்ஞானம்(Physical science)
* உயிரியல் விஞ்ஞானம்(Bio-science)