இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக the aCADDemy கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ABM.மாஹிர் (B.Sc) அவர்களும், விஷேட அதிதிகள் மற்றும் ஆங்கில தின மதிப்பீட்டாளர்களாக I.M. மர்சூக் ஆங்கிலப் பாட ஆசிரிய ஆலோசகர் (மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்), HMM. ரியாழ் ஆங்கிலப்பாட ஆசிரியர் (மட்/அந்நாசர் வித்தியாலயம்), I.அருள்தாசன் ஆங்கிலப்பாட ஆசிரியர் (மட் மத்திய மகா வித்தியாலயம்-தேசிய பாடசாலை காத்தான்குடி) ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் த அகடமி கல்வி நிறுவனத்தின் கற்கைநெறிகளுக்கான இணைப்பாளர் MIM. இஸ்ஸத் BA (ஆசிரியர்) அவர்களும் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள், நிருவாக உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆங்கில தின நிகழ்வில் மாணவர்களது நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் முகாமைத்துவப்பணிப்பாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. மாணவர்களது எதிர்கால கல்வி மற்றும் தொழில்சார் நடவடிக்கைகளுக்கு ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை வலிறுத்தி அதிதிகள் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
தகவல்: நிருவாகம்-த அகடமி கல்வி நிறுவனம்