இதன் மூலம் உயர் கல்வியை கற்கும் மாணவர்கள் தாம் விரும்பிய பாடநெறியை தொடரக் கூடியவாறு மிகவும் குறுகிய வட்டியினைக் கொண்ட நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட நபர் ஒருவரின் பிணையின் மீது இக்கடன் மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அது பற்றிய முன்மொழிவினை பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெறும் 265 வது மகாபொல வர்த்தக மற்றும் கல்வி கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார்.