அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Friday, February 17, 2012

ENGLISH

LETTER WRITING
ஆங்கில கடிதங்கள் எழுதும்போது நாம் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவை பின்வருமாறு

1)HEADING (தலைப்பு)
இதில் கடிதம் அனுப்புவரின் விலாசமும், தேதியும் இருக்கவேண்டும். வியாபார நிறுவனங்களில் அச்சடிக்கப்பட்ட Letter heads (முகவரிக் கடிதத்தாள்கள்) இருக்கும். அவற்றில் தேதியை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

2) SALUTATION(வணக்கவுரை)
அ) வியாபாரக் கடிதங்களில் தனிப்பட்ட ஒரு வணிகராய் இருந்தால் Dear sir (அன்புள்ள ஜயா) என்றும் பலருள்ள நிறுவனமாக (Company) இருந்தால் Dear sirs (அன்புள்ள ஜயன்மீர்) எனவும் எழுதுவேண்டும். மாதிரி (model) கடிதம் இம்முறைய நன்கு விளக்கும். அதனைக் காண்க.
ஆ) தந்தை, தாய் மற்ற உறவினர், பெரியவர்களுக்கு:

Dear Mother
Dear Mother
Dear uncle
Dear aunt
Dear sir
அன்புள்ள அப்பா
அன்புள்ள அம்மா
அன்புள்ள மாமா
அன்புள்ள அத்தை
அன்புள்ள ஜயா
            எனக்குறிப்பிட வேண்டும்.

இ) இரு நண்பர்களுக்கு:

Dear Kamal , Dear Jeeva , Dear suman என்று Dear வுடன் தோழன் அல்லது தோழியின் பெயரை எழுத வேண்டும். Dear Friend (அன்புள்ள நண்பரே) என எழுதகூடாது.

3) MESSAGE (கடிதச் செய்தி)
இதில் கூற வேண்டிய முக்கிய செய்தியை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதவேண்டும். செய்தி நீளமாக இருந்தால் பகுதிகளாக (Paragraph) பிரித்துக் கொள்ளவேண்டும்.

4) SUBSCRIPTION (வணக்க முடிவரை)
அ) இதில் தாய் தந்தை உறவினர் நண்பர்கள் ஆகியோருக்கு:
Yours affectionately (தங்கள் அன்புள்ள) அல்லது Yours lovingly (தங்கள் அன்புள்ள) அல்லது Your affectionate son (தங்கள் அன்புள்ள மகன்) இவ்வாறு எழுதவேண்டும்.

ஆ) வயது முதிர்ந்த நண்பர்கள், பெரியவர்களுக்கு:
Yours sincerely (தங்கள் உண்மையுள்ள) Your truly (தங்கள் உண்மையுள்ள)

இ) வியாபாரிகள்:
Yours faithfully (தங்கள் நன்றியதிதலுள்ள) Yours truly (தங்கள் உண்மையுள்ள)

குறிப்பு: பலர் பங்குதாராக இருக்கும் வணிக நிறுவனத்தில்“For Rubber stamp” (ரப்பர் முத்திரை) இருக்கும். அதை Your faithfully க்கு கீழே பதிவு செய்து பிறகு கையொழுத்தினைப் போடவேண்டும். Model Letter யை நன்கு கவனிக்கவும். இவ்விஷயம் நன்கு தெளிவாகும்.

5) SIGNATURE(கையெழுத்து)

கடிதம் அனுப்புபவர் தெளிவாகத் தன் கையெழுத்தைப் போட வேண்டும். கையெழுத்து ஒழுங்கில்லாமல் இருந்தால், அதன்கீழ், தெளிவாக எழுத்துகளில் பெயரை எழுதுதல் நல்லது.
6) SUPERSCRIPTION (கடிதம் பெறுபவரின் விலாசம்)
விலாசத்தைக் கீழ்கண்டபடி தெளிவாக எழுதவேண்டும். அதில் அஞ்சல் எண் வீட்டு எண் முதலியன தெளிவாய் இருக்கவேண்டும்.
உதாரணம்:

வியாபார நிறுவனம் 
Caxton Printers,
No.37, Kandy Road,
Chundikuly,             

தனிப்பட்டவர்
Jaffna. R.S. Ganesan,
14,Love Lane,
Batticaloa.

மேற்கூறிய ஆறு பகுதிகளைப் பற்றி நன்கு கவனித்து ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதும் போது இதனைப் பின்பற்றவும்.