அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Friday, February 17, 2012

லா- நினாவும் மாற்றங்களும் ...

அண்மைக்காலங்களில் இலங்கை உட்பட அவுஸ்ரேலியா பிரேசில் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்ட வானிலைக் குழப்ப நிலைக்கு காரணங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முழுக்காரணம் காலநிலை மாற்றம்(Climate Change) என்பதை ஒத்துக்கொண்டும் இதனோடு இயற்கையான வளிமண்டலத் தோற்றப் பாடும். அதாவது எல்-நினோ (தெற்கத்திய அலைவு) வும் லா - நினாவும் காரணமாகும் என தெரிவிக்கின்றனர்.
எல் நினோ - தெற்கத்திய அலைவு (El Niño-Southern Oscillation) என்பது ஒரு இணைப் பெருங்கடல் வளிமண்டலத் தோற்றப்பாடு ஆகும். எல் - நினோ, லா - நினா எனப்படும் இவை கிழக்குப் பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பில் இடம்பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகள்.

"எல் நினோ" (El Niño is Spanish for "the boy" and refers to the Christ child) என்பது இஸ்பானிய மொழியில் "சிறு பையன்" என்னும் பொருள் கொண்டது. இப்பெயர் பாலன் யேசுவைக் குறிப்பது. இத் தோற்றப்பாடு தென்னமெரிக்காவின் கரையோரப் பகுதிகளில் நத்தார் காலங்களில் ஏற்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது.
எல் நினோ - தெற்கத்திய அலைவு, ஆனது சமுத்திர வளிமண்டலத்தில் தளம்பல்கள் ஏற்பட்டு பூகோள வளியோட்டங்களில் மாறுதல்கள் ஏற்படுவதால் உலகம் முழுவதற்குமான வானிலை பாதிக்கப்படும் தோற்றப்பாடாகும். உலகின் பல பகுதிகளிலும் ஏற்படும் வெள்ளம், வரட்சி போன்ற பல இடையூறுகளுடன் தொடர்புள்ளது. இத்தாக்கங்களும், இதன் ஒழுங்கற்ற தன்மையும் இவற்றை எதிர்வு கூறுவது தொடர்பில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஸ்டீபன் செபியாக், மார்க் கேன் போன்றோர் இதனைஎதிர்வு கூறுவது தொடர்பில் பெரும் பங்களிப்புக்களைச் செய்துள்ளனர்.

இதேபோல "லா நினா" (La Niña - from Spanish as "the girl-child")என்னும் சொல் "சிறிய பெண்பிள்ளை" என்னும் பொருளுடையது. 1923 ஆம் ஆண்டில் சர். கில்பர்ட் தாமஸ் வாக்கர் என்பவர் இவற்றை முதன் முதலாக விளக்கினார்.

"லா நினா" தோற்றப்பாடு பொதுவாக அதிகரிக்கும் குளிர்நிலையாக கருதப்படுகிறது. இதனால் பின்வரும் மாற்றங்கள் வளிமண்டலத்திலும் சமுத்திர சுற்றுவட்டத்திலும் ஏற்படுகிறது.

* மத்திய மற்றும் கிழக்கு வெப்பப்பசுபிக் சமுத்திரத்தில் கடல்மேற்பரப்பு வெப்பநிலையில் வழமையானதை விட அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதனால் வளிமண்டல காற்றோட்டம் மேற்குநோக்கி தள்ளப்படும்.

* வெப்ப ஓட்டம் அல்லது மழைக்காலநிலை அவுஸ்ரேலியா, பப்புவா குனியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஏற்படும்

* வழமையைவிட கடுமையான காற்றோட்டம் கிழக்குப்பக்கமாக பசுபிக் சமுத்திரத்தைக் குறுக்கறுக்கும்.ஆனாலும் இது அவுஸ்ரேலியாவை எட்டவேண்டிய அவசியமில்லை.

இதனால் லா-நினாவானது சிலநேரங்களில் தெற்கத்தைய எதிர் அலையாக (anti-ENSO: anti-El Niño-Southern Oscillation) கருதப்படுகிறது.

பசுபிக் சமுத்திரத்தில் லா -நினா தோற்றப்பாடு மற்றும் அதன் வளிமண்டல சுற்றோட்டத்தில் அதன் விளைவு வரைபடம்


சாதாரண சுற்றோட்ட நிலைமை

லா -நினாவினால் ஏற்படும் உலகளாவிய சில தெளிவான விளைவுகளைப் பின்வரும் வரைபடம் காட்டுகின்றன. நிறந்தீட்டப்பட்ட பரப்புகளில் வெப்ப அல்லது குளிரான காலநிலைலைக் காட்டுகின்றன.


ஆயினும் இப்பொழுது அவுஸ்ரெலியா, பிரேசில் மற்றும் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள நிலமைக்கு காரணமான லா -நினோ தோற்றப்பாடுகளைப்பற்றி காலநிலை விஞ்ஞானி டாக்டர் அடெம் ஸ்கைவ் (Dr Adam Scaife) கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான வெள்ளப்பெருக்கு ஒரு வரலாற்றுச்சாதனையாக லா -நினாவினால் ஏற்பட்டதெனவும்,1984 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட காலநிலைமாற்றத்திற்கு் பிறகு வரலாற்றில் பதியப்படவேண்டிய இந்த வெள்ளப்பெருக்கு லா -நினாவினால தான் ஏற்பட்டதென்பதை குறிப்பிடுவதென்பது கடினமாக இருக்கிறது. காரணம் இலங்கை இந்த லா நினா குளிர்ச்சியான வளியோட்டத்தின் விளிம்பில் காணப்படுவதால் குறிப்பிட்டுச்சொல்வது கஸ்டமாக அமைந்தாலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியும் காரணம் எல்-நினோதோற்றப்பாடு இலங்கையில் ஏற்படுவதால் லா -நினா ஏற்படலாம்.ஆயினும் காலநிலை மாற்றங்களின் விளைவும் இந்ததோற்றப்பாடுகளுக்கு காரணம் என்பதையும் கூறுகிறார்.