மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்த நடவடிக்கை!

அலரி மாளிகையில் இன்று இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் இலங்கையின் ஒன்பது மாகாணங்களையூம் பிரதிநிதிப்படுத்தும் வகையில் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
'வாழ்வின் முன்னேற்றத்துக்கு ஆங்கிலம்" என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி செயலகத்தால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 6ஆம் தரம் முதல் 11 தர மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த டிவிடி இறுவட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன- ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் சுனிமல் பெர்னாந்து ஆகியோர் உட்பட மற்றும் பிரமுகர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

