இலங்கை இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவுக்கு கீழே 65,610 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 20 மில்லியன் மக்கள் தொகையையும் கொண்ட ஒரு சிறிய தீவாகும்.
இலங்கை மிக நீண்ட காலமாக மேற்குத் தேச அரசுகளின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு நாடாக விளங்கியது. 1505-1658 வரை போர்த்துக்கேயரும் 1658-1796 வரை ஒல்லாந்தரும் ,1796-1948 பெப் 4ஆம் திகதி வரை ஆங்கிலேயரும் இலங்கையை ஆட்சி செய்தனர்.
போர்த்துக்கேயரம் ஒல்லாந்தரும் இலங்கையின் சட்டம், சமயம் போன்ற துறைகளில் மாற்றங்களை செய்தார்களே தவிர அரசியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் மாற்றங்களை செய்தார்களே தவிர அரசியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் பாரிய மாற்றங்களை செய்தவர்களாக விளங்கினர்.
இவர்கள் அரசியல் துறையில் பிரித்தானிய மாதிரிகளான பாராளுமன்ற அரசாங்க முறையை அறிமுகப்படுத்தியதோடு பொருளாதாரத் துறையில் பெருந்தோட்ட உற்பத்தி முறையையும் அறிமுகப்படுத்தினர் இவர்களால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களே இன்றும் அத்துறைகளில் பாரிய பாதிப்புக்களை செலுத்துகின்ற காரணிகளாக விளங்குகின்றன. இதனால் இலங்கையின் அரசியல் வரலாற்றினை ஆராய்கின்ற போது ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலம் முக்கியமானதொன்றாக விளங்குகின்றது.
ஆங்கிலேயர் 1796 ல் இலங்கையின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றிய போதும் 1798 லேயே அதனை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தோடர்ந்து 1798-1802 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இரட்டை ஆட்சி நடைபெற்றது. இலங்கையின் வருமானம் , வர்த்தகம், போன்றவை பிரித்தானிய கிழக்கு இந்திய வர்த்தக கம்பனியிடமும் பாதுகாப்பு சிவில் நிர்வாகம் என்பன பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்ட தேசாதிபதியிடமும் ஒப்படைக்கப்பட்டது. 1802 ஆண்டு கைச்சாத்திடப்பட்ட எமியன்சு உடன்படிக்கையின் படி இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக இணைக்கப்பட்டு பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் ஒர பகுதியாக மாறியது. இலங்கையின் அனைத்து நிர்வாகமும் பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்ட தேசாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டு அவருக்கு ஆலோசனை சபையில் குடியேற்றநாட்டு காரியதரிசி ,இராணுவதளபதி , பிரதம நீதிபதி ஆகியோர் இடம்பெற்றனர்.
போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்தார்களே தவிர அவர்களால் கண்டி இராச்சியத்தை கைப்பற்ற முடியவில்லை. ஆங்கிலேயரே மதன் முதலாக கண்டி இராச்சியத்தையும் கைப்பற்றி இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றி 19 வருடங்களின் பின்னரே 1815 ல் 2 கண்டியை கைப்பற்றினர். 1803 ஆம் ஆண்டு இவர்கள் கண்டியை கைப்பற்றும் நோக்கத்துடன் கண்டி மீது படையெடுத்த போதும் அப்படையெடுப்பு படு தோல்வியாக முடிந்தது. பின்னர் கண்டியில் அரசனுக்கும் பிரதானிகளுக்குமிடையே காணப்பட்ட முரண்பாடுகளை பயன்படுத்தியே கண்டியை கைப்பற்றினர்.
ஆங்கிலேயர் கண்டியை கைப்பற்றிய போது கண்டிய மாகாணங்கள் தனியாக நிர்வகிக்கப்படும் என்றும் பௌத்தமதம் நன்கு பேணப்படும் என்றும் உறுதி கூறினர். அவ் உறுதி மொழிகளை நடைமுறையில் செயற்படுத்தாததினால் கண்டிய மக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக 1818 ல் மிகப் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். கண்டிக் கலம்பகம் எனக் கூறப்படுகின்ற இக் கலம்பகம் ஆங்கிலேயரினால் மிக மோசமாக நசுக்கப்பட்டது. 1827 ல் இலங்கையில் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் கண்டியில் இன்னொரு கலம்பகம் வரவிடாமல் தடுப்பதற்காகவும் இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர ஆங்கிலேயர் விரும்பினர். அந்த வேளை இலங்கையில் அக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெருந்தோட்டத்துறையில் முதலிடுபவர்களுக்கு அரசியல் ரீதியாக சலுகைகள் வழங்க வேண்டிய தேவையும் ஏற்பட்டிருந்தது. இவை இரண்டையும் நிறைவேற்றும் வகையில் ஓர் அரசியல் சீர்திருத்தத்தை கொண்டு வர ஆட்சியினர் விரும்பினர் இதற்கு சாதகமான வகையில் 1825 ல் பிரித்தானியாவில் லிபரல் கட்சி (தாராண்மை கட்சி) ஆட்சியை பொறுப்பேற்றிருந்தது. இக்கட்சி பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் தனது தாராளவாத கொள்கையை அறிமுகப்படுத்த முன் வந்தது.
மேற்கூறியவற்றின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் 1829 ல் இலங்கைக்கு என ஒரு அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்காக கோல்புறுக் -கமரன் தலைமையில் ஒரு குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இவர்களில் கோல்புறுக் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங்கினர்
கோல்புறுக் குழுவினர் இலங்கையில் ஒரு குறிப்பிட்ட காலம் தங்கியிருந்து இலங்கையில் உள்ள நிலைமைகளை அவதானித்து ஓர் அரசியல் சீர்திருத்தத்தை சிபாரிசு செய்தனர். இவர்களால் சிபாரிசு செய்யப்பட்ட அரசியல் சீர்திருத்தம் 1833 ம் ஆண்டு அமுலுக்கு கொண்டு வரப்பட்டு இடைக்கிடையே சில மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் அதன் அடிப்படைத் தன்மை மாற்றப்படாது 1931 ம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் அமுலுக்கு வரும் வரை நடைமுறையில் இருந்தது.
கோல்புறுக் குழுவினர் இலங்கையில் ஒரு குறிப்பிட்ட காலம் தங்கியிருந்து இலங்கையில் உள்ள நிலைமைகளை அவதானித்து ஓர் அரசியல் சீர்திருத்தத்தை சிபாரிசு செய்தனர். இவர்களால் சிபாரிசு செய்யப்பட்ட அரசியல் சீர்திருத்தம் 1833 ம் ஆண்டு அமுலுக்கு கொண்டு வரப்பட்டு இடைக்கிடையே சில மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் அதன் அடிப்படைத் தன்மை மாற்றப்படாது 1931 ம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் அமுலுக்கு வரும் வரை நடைமுறையில் இருந்தது.