அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே


பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Saturday, June 30, 2012

உலகில் வெற்றி நடைபோடும் ஆங்கில மொழி!!!

இந்த நூற்றாண்டின் இறுதியில் இல்லாவிட்டாலும் அடுத்து வரும் நூற்றாண்டுகளில் ஆங்கிலம் பலராலும் கௌரவமாக போற்றப்படும் மொழியாக வளர்ச்சியுற்று உலக ரீதியாக அநேகமானோரால் வாசிக்கவும், பேசக்கூடிய மொழியாகவும் பிரகாசிக்குமென’’ 1780 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதியாகவிருந்த John Adams ஆருடம் கூறினார்.


1780 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில்பிரஞ்சு மொழியே உலகில் பலராலும் பேசப்பட்டது. அதற்கு முன்பு லத்தீன் மொழியே உலகில் அநேக மக்களால் பேசப்பட்டது. இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். அப்போது உலகில் 130 இலட்சமானோரே ஆங்கிலம் பேசினர். இவர்கள் அனைவரும் பிரிட்டனிலும், வட அமெரிக்க கரையோரங்களிலுமே வசித்து வந்தனர்.

அப்போதைய உலகின் சனத் தொகையில் இது 1 சதவீதமே. அத்தோடு, ஐரிஸ் நாட்டவரையும் வேல்ஸ் நாட்டவரையும் விட வேறு ௭வரும் ஆங்கிலம் கற்பதில் அக்கறை ஏதும் காட்டவேயில்லை. 230 வருடத்திற்கு முன்பு கூறப்பட்ட தைரியமான ஆரூடம் (Bold prediction) இன்று ௭ப்படி நிரூபணமாகிறது, நிஜமாகிறது ௭ன்பதை அலசி ஆராய்கிறது இக் கட்டுரை.

சற்று காலம் அதிகம் ௭டுத்திருக்கிறது. ஆனால், இத்தாலியில் மிகவும் பிரசித்தி பெற்ற பல்கலைக் கழகமான politecnico Di milano 2014 ஆம் ஆண்டிலிருந்து தனது சகல கற்கை நெறிகளையும் ( Courses ) ஆங்கிலத்தில் மாத்திரம் நடாத்த இருப்பதாக கடந்த மாதம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு ௭திராக இத்தாலியில் பலத்த வாத, பிரதி வாதங்கள் ௭ழுந்துள்ள நிலையில் 1863 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதும் 36,500 மாணவர் கல்வி கற்கும் பல்கலைக்கழகத்தின் தலைவர் ( Rector ) ஆன ஜியோ வன்னி அசோனி மிகவும் தெளிவான கருத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

௭மது பிரிவுகள் ( Classes ) சர்வதேச தரத்தை உடையதாக இருக்க வேண்டுமென நாம் திடமாக நம்புகிறோம். சர்வதேச தரத்தை பேணுவதற்கு ஆங்கிலத்தை பயன்படுத்துவதே ஒரே வழி. இன்று பல்கலைக் கழகங்கள் உலகில் போட்டி நிறைந்ததாகவே காணப்படுகின்றன. இதர உலக பல்கலைக் கழகங்களுடன் நாம் இயங்க வேண்டுமாயின் மாற்று வழி ஏதுமே கிடையாது.

வெளிநாட்டு மாணவரை கவருவதற்காக ௭மது பல் கலைக் கழகம் இதை நடை முறைப்படுத்தவில்லை. இத்தாலிய மொழியை முதற் பாஷையாக கொண்ட மாணவருக்கே நாம் இத் திட்டத்தை நடை முறைப்படுத்துகிறோம். இன்று உலக பொருளாதாரம் பரந்துபட்டு காணப்படும் நிலையிலும் உலகின் பல பாகங்களிலும் பங்காளர் நிலவுகின்ற நிலையிலும் சகலரும் ஆங்கிலத்தை ஒரு பொது மொழியாக பேச முடியும் ௭ன்பதுதான் அவரின் கருத்து.

பல ஐரோப்பிய, ஸ்கன்டி நேவிய குறிப்பாக ஜேர்மன் பல் கலைக் கழகங்களும் இதே முடிவைத்தான் ௭டுத்திருக்கின்றன. இந்த உணர்வு இன்று ஆசிய நாடுகட்கும் வெகுவாக பரவி வருகிறது. இம் மாற்றம் நடை பெறும் இக் கால கட்டத்தில் ஆங்கிலம் தெரியாத ஒரு விஞ்ஞானியையோ அல்லது சர்வதேச வர்த்தகரையோ காணுவது அபூர்வம் தான்.

தென் அமெரிக்காவிலுள்ள பேரு ( Peru ) நாட்டவர் சீனருடன் ௭ப்படி தொடர்பு கொள்கிறார்கள். உலகின் இரண்டாவது பெரிய மொழியாகிய ஸ்பானிய ( Spanish ) மொழியையே பேரு நாட்டவர் பேசுகின்றனர். சொந்த நாட்டவர்கள் அதிகமானோர் பேசும் மொழியாக சீனம் காணப்படுகிறது. இவ்விரு இனத்தவரும் இரு மொழிகளையும் கற்க முடியுமா? வேறு ௭வருக்கும் இம் மொழிகள் பயன்படுவதில்லைதானே.

சீன மொழியோ, ஐரோப்பா, ஆபரிக்கா, அமெரிக்கா, ஆசியாவிலோ பேசப்படுவது குறைவு. அதே போலவே ஸ்பானிய மொழியும் லத்தீன் அமெரிக்கா (தென் அமெரிக்கா)வை விட ஏனைய நாடுகளில் பேசப்படுவதில்லை. அதிகமானோருக்கு ஒன்று, இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை பயிலுவதற்கு நேர காலம் காணப்படுவதில்லை ௭ன்பதால் ஒருவர் ௭வருடனும் தொடர்பு கொள்வதற்காகவே ஒரு பொது மொழி ( langua Franca ) தேவைப்படுகிறது.

ஏனைய மொழிகளை விட ஆங்கிலம் பரவலாக பலராலும் பேசப்படுவதால் அந்த இடத்தை ஆங்கில மொழி கவர்ந்துள்ளது. அதிகமானோரால் மன்டறின் சீனம் ( Mandarin Chinese ) கடந்த 1000 ஆண்டுகளாக பேசப்பட்டது. இன்று இம் மொழி 1 பில்லியன் மக்களால் பேசப்பட்டாலும், சீனாவை விட ஏனைய நாடுகளில் இம் மொழி பெரிதாக பேசப்படுவதில்லை.

ஆங்கிலத்தை போலவே ஸ்பானிய மொழியும் 200 வருடங்களாக வேகமாக பரவி வருகிறது. இவ்விரு மொழிகளையும் தலா 400 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். இருந்தாலும் மத்திய அமெரிக்கா, ஸ்பெயின், தென் அமெரிக்காவில் மாத்திரம் ஸ்பானிய மொழி மட்டுப்படுத்தப்பட்டு பேசப்படுகிறது. ஆனால், ஆங்கிலமோ ௭ங்கும் பேசப்படுகிறது.
தென் அமெரிக்காவை விட ஏனைய கண்டங்களில் பெரிய வல்லரசுகள் ( Major Powers )ஆங்கிலத்தை பாவிக்கின்றார்கள். வட அமெரிக்காவில் அமெரிக்கா, ஐரோப்பாவில் ஐக்கிய இராச்சியம் (U.K), ஆபிரிக்காவில், தென் ஆபிரிக்கா, ஆசியாவில் இந்தியா, அவுஸ்திரேலியாவில் முழு கண்டத்தில் வசிப்பவர்களுமே ஆங்கிலம் பேசுகிறார்கள்.

இந்த ஆங்கில மொழிப் பாவனைக்கு காரணம் ஒரு காலத்தில் உலகில் 25 சத வீத மக்களை ஆட்சி செய்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே (British Empire ) இதே காரணத்தால் பல டசின் கணக்கான நாடுகளில் ஆங்கிலம் இன்று அரச பாஷையாகவும் விளங்குகின்றது. நிச்சயமாக கடந்த நூறு ஆண்டுகளில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் திடீரென வீழ்ச்சி கண்டாலும் பிரிட்டனின் இடத்தைப் பிடித்த ஆதிக்க வல்லரசும் (Super Power) ஆங்கிலமொழி பேசும் அமெரிக்காவே.இப்போது காணப்படும் சூழ்நிலையில் சர்வதேச வர்த்தகத்திலோ, ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களோ, சுற்றுலாவை மேற்கொள்பவர்களோ கட்டாயம் ஆங்கிலம் கற்றாக வேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றனர்.

ஆங்கிலமே உலகளாவிய ரீதியில் இன்று முதலாவது பொது மொழியாக வெற்றி நடை போடுகிறது. ஆங்கிலத்தை கற்பவர்கள் ஒரு போதும் முழுமையான ஆங்கில அறிவை பெறாவிட்டாலும் ௭திர் வரும் காலங்களில் மில்லியன் கணக்கான மக்கள் ஆங்கிலத்தை கற்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டிய கட்டாயத்திற்குள் காணப்படுவதால் இம் முயற்சிகள் சந்ததி சந்ததிகளாக பயனுள்ளவைகளாக அமையுமென்பதில் சற்று சந்தேகமும் கிடையாது.

இந்த முன் ஆதிக்கமுள்ள ஆங்கில மொழியால் வேறெந்த மொழியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை. இத்தாலியின் பிரசித்தி பெற்ற politecnico Di milano ’ வில் கற்பவர்கள் ஒரு போதும் தமக்குள் இத்தாலிய மொழியில் பேசுவதை நிறுத்தப் போவதில்லை. அதே போல் சீனரும், அரேபியர்களும் தமது மக்களோடு உரையாடும் போது தமது மொழிகளில் உரையாடுவதை உலகின் ௭ந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஆனால் வெளிநாட்டவருடன் உரையாடும் போது அவர்கள் ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டும். இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா போன்ற ஆசிய நாடுகள் பிரிட்டிஷ் சாம் ராஜ்யத்தினால் பல காலமாக ஆளப்பட்டு வந்தமையால் நாம் இன்று ஆங்கில அறிவை பெற்று சர்வதேச அரங்கில் பல அனு கூலங்களை அடைந்து வருகிறோம்.
ருஷ்யாவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கம்யூனிச ஆட்சிக்குட்பட்ட காலத்தில் இந் நாட்டு மக்களுக்கு ஆங்கில அறிவைப் பெற பல தடைகள் ஏற்பட்டிருந்தன. இன்று கம்யூனிஷம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் ருஷ்யர்கள், கிழக்கு ஐரோப்பியர்கள் பலர் ஆங்கில அறிவை பெற்று பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகட்கு சென்று வேலைவாய்ப்பை பெறுகிறார்கள்.

சிங்கப்பூரில் 75 வீதமானோர் சீனர்களாக இருக்கின்ற நிலையிலும் தனியே சீன மொழியை மாத்திரம் அரச மொழியாக பிரகடனப்படுத்தாமல், ஆங்கிலம், மலாய், தமிழ் போன்ற ஏனைய மொழிகளையும் அரச மொழிகளாக்கி சிங்கப்பூரை பிளவு படாமல் காப்பாற்றியதாகவும் இன்று உலக நாடுகளில் சிங்கப்பூர் மிகவும் சுபீட்சமடைந்து வெற்றி நடை போடுவதற்கு ஆங்கில மொழியே காரணமென சிங்கப்பூரின் தந்தை ௭ன வர்ணிக்கப்படும் லீ குவான் யூ அண்மையில் தெரிவித்த கருத்தையும் இங்கு கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

உலகில் வெற்றி நடைபோடும் ஆங்கில மொழி!!!

இந்த நூற்றாண்டின் இறுதியில் இல்லாவிட்டாலும் அடுத்து வரும் நூற்றாண்டுகளில் ஆங்கிலம் பலராலும் கௌரவமாக போற்றப்படும் மொழியாக வளர்ச்சியுற்று உலக ரீதியாக அநேகமானோரால் வாசிக்கவும், பேசக்கூடிய மொழியாகவும் பிரகாசிக்குமென’’ 1780 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதியாகவிருந்த John Adams ஆருடம் கூறினார்.

Friday, June 29, 2012

தென்கிழக்கு பல்கலையில் விரைவில் பொறியியல் பீடம்; அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உறுதி!

 தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல வசதிகளும் கொண்ட பொறியியல் பீடம் விரைவில் நிறுவப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். 
பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை விரிவுரையாளர்கள் சிலர் எதிர்ப்பதானது அவர்களது மனநலக்
குறைபாட்டின் வெளிப்பாடே என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா  ஒலுவில் வளாக பல்கலைப் பூங்காவில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவற்றைத் தெரிவித்தார். பல்கலைகலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஏ.எம்.இஸ்ஹாக் தலைமையில், பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் முன்னிலையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், எஸ்.எஸ்.பி.மஜீத் மற்றும் ஏ.எம்.நௌசாத் உட்பட அரசியல் பிரமுகர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.ஏ.சத்தார் உட்பட பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.இப்பட்டமளிப்பு விழாவில் விஞ்ஞானம், கலை, வர்த்தகம் மற்றும் வணிக முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த 454 உள்வாரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இதன்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரட்ன பட்டமளிப்பு பேருரையை நிகழ்த்தினார்.

தென்கிழக்கு பல்கலையில் விரைவில் பொறியியல் பீடம்; அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உறுதி!

 தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல வசதிகளும் கொண்ட பொறியியல் பீடம் விரைவில் நிறுவப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். 

Wednesday, June 27, 2012

2011 உ/த பரீட்சை மீளாய்வு பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம்


 கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உ/த பரீட்சை மீளாய்வுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி விடைத்தாள் மீளாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்கள இணைய முகவரியில் பெறுபேறுகளை பார்வையிட முடியும். 

பரீட்சை மீளாய்வுக்கு 140000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2011 உ/த பரீட்சை மீளாய்வு பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம்


 கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உ/த பரீட்சை மீளாய்வுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி விடைத்தாள் மீளாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்கள இணைய முகவரியில் பெறுபேறுகளை பார்வையிட முடியும். 

பரீட்சை மீளாய்வுக்கு 140000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Monday, June 25, 2012

இசெட் புள்ளிகளை புதிய மற்றும் பழைய திட்டத்தின் அடிப்படையில் வெவ்வேறாக கணிப்பிடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!!!

graduate student with thumb up Stock Photo - 11114109
கடந்த வருடம் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான இசெட் புள்ளிகளை புதிய மற்றும் பழைய திட்டத்தின் அடிப்படையில் வெவ்வேறாக கணிப்பிடுமாறு உயர் நீதிமன்றம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.


இதன்படி கடந்த வருடம் இசெட் புள்ளி கணிக்கப்பட்ட முறையை இரத்து செய்யுமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் சிலர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்து இன்று (25) தீர்ப்பளித்துள்ள பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தலைமையிலான உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் இசெட் புள்ளி மீள் கணிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். பழைய மற்றும் புதிய முறை இரண்டையும் ஒன்றிணைத்து கடந்த வருட உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இசெட் புள்ளி விநியோகிக்கப்பட்டதால் மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

அதனால் வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளை இரத்து செய்யுமாறு மனுதாரர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம் இசெட் புள்ளியை மாத்திரம் இரத்து செய்து மீள் கணிப்பீடு செய்யும்படி தீர்ப்பளித்துள்ளது

இசெட் புள்ளிகளை புதிய மற்றும் பழைய திட்டத்தின் அடிப்படையில் வெவ்வேறாக கணிப்பிடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!!!

graduate student with thumb up Stock Photo - 11114109
கடந்த வருடம் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான இசெட் புள்ளிகளை புதிய மற்றும் பழைய திட்டத்தின் அடிப்படையில் வெவ்வேறாக கணிப்பிடுமாறு உயர் நீதிமன்றம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

Saturday, June 23, 2012

பங்களாதேஷ் பல்கலைக்கழக கற்கை நெறிக்கான புலமைப்பரிசில்கள் – 2012

Profile pictureசர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் சிட்டகொங் பங்களாதேஷ் (International Islamic University Chittagong,Bangladesh) கடந்த மூன்று வருடங்களாக இலங்கை முஸ்லிம் மாணவர்களுக்கு இலங்கை வாமி நிறுவனமூடாக இளமாணி பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசிலை வழங்கிக்கொண்டிருக்கின்றது.

Friday, June 22, 2012

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான அனுமதி - 2013


தேசிய கல்வியியற் கல்லூரி ஒன்றில் ஆசிரியர் கல்வியில் மூன்றாண்டு கால சேவை முன் தொழிற்பயிற்சி ஒன்றைப் பயிலுவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விபரம்:JUNE 22 ஆந் திகதி வர்த்தமானப் பத்திரிகையில். 


Friday, June 15, 2012

கூகுளின் சில்மிஷம்.

வேலைக்காக பதிந்து காத்திருக்கும் பட்டதாரி மாணவர்களே , தொழிலதிபர்களே உஷார்.

வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரி மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் தங்களுக்கென்று இமெயில் கணக்கு வைத்திருக்கின்றனர், இந்த இமெயில் கணக்கு பெரும்பாலும் கூகிள் கொடுக்கும் ஜீமெயில் சேவையாகத்தான் இருக்கிறது.

யாரிடம் கேட்டாலும் ஜீமெயில் கணக்கு தான் கொடுப்பார்கள் அந்த அளவிற்கு மக்களிடம் கூகிள் தன் வளர்ச்சியை காட்டி வளர்ந்துள்ளது தெரிந்த செய்திதான், ஆனால் ஜீமெயில் தற்போது செய்யும் ஒரு ஏடாகூடம் என்னவென்றால் ஆர்வக்கோளாறு அதிகமாகி அதாவது நாங்கள் (ஜீமெயில்) மட்டும் தான் அதிகமான குப்பை இமெயில்களை இனம் கண்டறிந்து நேரடியாக Spam ஸ்பாம் -க்கு அனுப்புகிறோம் என்ற பெரிய வார்த்தையை சொல்லி விளம்பரம் தேடினர் இதில் என்ன ஸ்பெசல் என்றால் அரசு மற்றும் பல பெரிய நிறுவனங்களில் வேலைக்கு வர சொல்லி அனுப்பும் அத்தனை இமெயில்களையும் ஜீமெயில் நேரடியாக ஸ்பாம்-க்கு அனுப்புகிறது.


ஜீமெயில் எச்சரிக்கை ஆபத்து நமக்கு

வேலைக்காக பதிந்து வைத்து பதில் இமெயிலை எதிர்பார்த்து காத்திருக்கும் நம்மவர்களுக்கு ஜீமெயில் சொல்லும் செய்தி என்னவென்றால் உங்களுக்கு இமெயில் வரவில்லை என்பதுதான் ஆனால் வந்த இமெயிலை கூப்பைக்கு அனுப்பி வேடிக்கை பார்க்கும்,

இதே போல் தான் இண்டர்வியூக்கு வரச்சொல்லி மற்றும் தொழிலதிபர்களுக்கு வாடிக்கையாளர் அனுப்பும் செய்தி என அனைத்துமே குப்பைக்கு சென்று விடுகிறது. என்ன காரணம் என்று கூகிளிடம் தேடிப்பார்ததில் கிடைத்த தகவல் தான் ஆச்சர்யம், “ ஒரே மாதிரி தகவல்களை அதிகபட்ச மக்களுக்கு அனுப்பினால் நாங்கள் அதை குப்பையாக தான் கருதுவோம் “ இப்படி சொல்கின்றனர், சரி நிறுவனத்தின் இமெயில் கணக்கில் இருந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத்தான் அனுப்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்பவும் கூகிள் சொல்லும் செய்தி “ ஏற்கனவே இந்த செய்தி குப்பை என்று எங்கள் ஸ்பெசலிஸ்ட் தூங்காமல் கண்டுபிடித்துவிட்டனர் ”என்கிறது.

ஆர்வக்கோளாறில் நாமும் ஜீமெயிலை சோதித்து பார்க்கலாம் என்று சரியாக 490 பேருக்கு ஒரு செய்தியை அனுப்பினோம் அதில் 200 பேரின் இமெயில் சரியில்லை என்று திரும்பி வந்தது, சரி அதே செய்தியை காப்பி செய்து நம் மற்றொரு ஜிமெயில் முகவரிக்கு அனுப்பினோம், தூங்காமல் கண்டுப்பிடிக்கும் கூகிள் அதிகாரிகள் கண்ணில் விளக்கெண்னெய் விட்டு கண்டுபிடித்து நேரடியாக அந்த செய்தியை ஸ்பாம் -க்கு அனுப்பிவிட்டனர். இதனால் பலரும் ஜீமெயிலுக்கு பை பை சொல்லிவிட்டு யாகூ பக்கம் சென்றுவிட்டனர்,

வேலை வேண்டிய பட்டதாரிகள், தொழிலதிபர்கள் ,மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு யாகூ இமெயில் கணக்கு உருவாக்கி அதை முக்கியமாக பயன்படுத்துங்கள். நம் வீட்டு தபால் பெட்டிக்கு வரும் கடிதங்கள் கூப்பை தொட்டியில் விழுகிறது என்றால் தபால் பெட்டியை மாற்றுவதில் எந்த தவறும் இல்லை. கண்டிப்பாக நம் அனைத்து நண்பர்களுக்கும் இந்த தகவலை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கூகுளின் சில்மிஷம்.

வேலைக்காக பதிந்து காத்திருக்கும் பட்டதாரி மாணவர்களே , தொழிலதிபர்களே உஷார்.

வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரி மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் தங்களுக்கென்று இமெயில் கணக்கு வைத்திருக்கின்றனர், இந்த இமெயில் கணக்கு பெரும்பாலும் கூகிள் கொடுக்கும் ஜீமெயில் சேவையாகத்தான் இருக்கிறது.

Friday, June 8, 2012

நீதிச்சேவை ஆணைக்குழு


நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் சேவையின் நீதிமன்ற
சுருக்கெழுத்தாளர் (சிங்களம்ஃ ஆங்கிலம்) தரம் II மற்றும் நீதிமன்ற
தட்டெழுத்தாளர் (சிங்களம்ஃ ஆங்கிலம்) தரம் II இற்கு
சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2012


விபரம்:08 -06-2012 திகதி வர்த்தமானப் பத்திரிகையில் 


நீதிச்சேவை ஆணைக்குழு


நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் சேவையின் நீதிமன்ற
சுருக்கெழுத்தாளர் (சிங்களம்ஃ ஆங்கிலம்) தரம் II மற்றும் நீதிமன்ற
தட்டெழுத்தாளர் (சிங்களம்ஃ ஆங்கிலம்) தரம் II இற்கு
சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2012


விபரம்:08 -06-2012 திகதி வர்த்தமானப் பத்திரிகையில் 


மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் மருத்துவியல் தொழில் வல்லுனர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையில் பயிற்சிக்காக பயிலுனர்களைச் சேர்த்துக்கொள்ளல் - 2012

சுகாதார அமைச்சில் மருத்துவ சேவைகளுக்காக நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுனர்சேவை மற்றும்துணை மருத்துவ சேவையில் கீழ்க்காணும் தொழிற் பயிற்சி;க்காக தகைமைகளையுடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விபரம்:08 -06-2012 திகதி வர்த்தமானப் 


பத்திரிகையில்

மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் மருத்துவியல் தொழில் வல்லுனர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையில் பயிற்சிக்காக பயிலுனர்களைச் சேர்த்துக்கொள்ளல் - 2012

சுகாதார அமைச்சில் மருத்துவ சேவைகளுக்காக நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுனர்சேவை மற்றும்துணை மருத்துவ சேவையில் கீழ்க்காணும் தொழிற் பயிற்சி;க்காக தகைமைகளையுடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விபரம்:08 -06-2012 திகதி வர்த்தமானப் 


பத்திரிகையில்

உயர்தர வர்த்தக மாணவர்களுக்கான கருத்தரங்கு

Seminar : a person doing a presentation at a business conference or product marketing in front of crowd to audience. add your copy text on blank projection screen. தகவல் – எம்.எம்.ஏ.ஷாகிர்

மேற்படி எமது ஸ்மைல் சென்றர், இவ்வருடம் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றும் வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்கான பரீட்சை முன்னோடி கருத்தரங்கினை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Tuesday, June 5, 2012

கல்வித் துறையில் கலாநிதிப் பட்டம் சகோதரர் அஷ்ஷெய்க் அலவிஷரீப்தீன்


தகவல் – எம்.எம்.ஏ.ஷாகிர்Kattankudi.info

மஞ்சந்தொடுவாய்க் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் அஷ்ஷெய்க் செய்யத் அலவி ஷரீப்தீன் (நளீமி) அவர்கள் கடந்த 2012 மே 31ம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரிலுள்ள விக்டோரியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கல்வித் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.


இவருக்கான கௌரவம் விக்டோரியா பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி பீடர் டோகின்ஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. பலநூறு மாணவர்கள் பட்டம் பெற்ற போதிலும் இவ்வருடம் இப்பல்கலைக்கழகத்தில் இச்சகோதரர் அடங்கலாக ஐவர் மாத்தரமே கலாநிதிப் பட்டம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் கல்வித் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுக் கொண்ட முதல் இலங்கையர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

கல்விப் பீடத்தில் பேராசிரியர் நிகொலா யெல்லான்ட் அவர்களின் கீழ் ‘இளைஞர் சமூகமும், கல்வியும்‘ என்ற தலைப்பில் இச்சகோதரரால் சமர்ப்பிக்கப்பட்ட கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வானது பல்வேறு உண்மைகளை வெளிக் கொணர்ந்ததுடன் பல்கலைக் கழக சமூகத்தினால் அமோக வரவேற்பையும் பெற்றது.

சகோதரர் செய்யத் அலவி ஷரீப்தீன் கடந்த 1990ம் ஆண்டு காத்தான்குடி ஹூசைனியா பள்ளிவாயலில் ஷஹீதாக்கப்பட்ட என்றும் எமது மதிப்பிற்குரிய அஷ்ஷஹீட் ஷரீப்தீன் ஆசிரியர் அவர்களின் சிரேஷ்ட புதல்வாராவார். இவர் கடந்த இரண்டு தசாப்தங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த போதிலும், எமது பிரதேச மக்களின் பிரச்சினைகளை மறக்காமல் பல்வேறு சமூகப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டும் வருகின்றார். குறிப்பாக வறிய மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புக்கான மாதாந்த புலமைப்பரிசில்களையும், வேறு ஆதரவுகளையும் கடந்த பல வருடங்களாக வழங்கி வருகின்றார்.

தனது ஆரம்பக் கல்வியை காத்தான்குடி 1ம் குறிச்சி மட் அந்-நாஸர் வித்தியாலயத்தில் கற்றதுடன், காத்தான்குடி மத்திய கல்லூரியிலும், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலும் கல்வி கற்ற பின் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் ஷரீஆ கல்வியினைப் பூர்த்தி செய்து நளீமிய்யாவில் பட்டம் பெற்றுக் கொண்டதுடன், பேராதனைப் பல்கலைக் கழகத்தின் இளமானிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகையாளருக்கான டிப்ளோமா பட்டத்தைப் பூர்த்தி செய்த இவர் தொடர்ந்தும் சட்டக் கல்வியைக் கற்பதற்காக கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்ட பீடத்தில் நுழைந்தார்.

1990ம் ஆண்டின் பயங்கரவாத அகோரத்தில் தனது குடும்பத்தில் பல உயிரிழப்புக்களை எதிர்நோக்கிய நிலையில் அகதியாக கொழும்பில் தஞ்சமடைய வேண்டிய நிலைக்கு இவரது குடும்பம் தள்ளப்பட்டது. இந்த நிலையில் தனது சட்டப் படிப்பைத் தொடர முடியாமல் 1992ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு உலக வங்கியின் புலமைப்பரிசிலைப் பெற்றுச் சென்ற இச்சகோதரர் தனது முதுமானிப் பட்டத்தை கல்வித் துறையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் உள்ள டீகின் பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கொண்டார். தனது தந்தையின் வழியில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் நோக்குடன் கடந்த எட்டு வருடங்களுக்கு மேல் அபுதாபி நகரில் தங்கியிருந்து பல்கலைக் கழக கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியிருந்தார். இது தவிர அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றியுள்ளார்.

காத்தான்குடி, ஓட்டமாவடி, மீராவோடை, நாவலடி, மருதமுனை, கொலன்னாவ, மத்திய முகாம், வாழைச்சேனை, பூநொச்சிமுனை, பாலமுனை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இச்சகோதரரின் ஆதரவில் பல்வேறு சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெறுமனே பணத்தை வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைத்து சமூகப் பணி செய்யுங்கள் என்று இருந்துவிடாமல், தானே தனிப்பட்ட முறையில் தனது வேலைப்பழுக்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு வருகை தந்து, மிகவும் கவனமாகவும், கச்சிதமாகவும் செய்து முடிக்கின்ற ஆற்றலும், ஆர்வமும் உள்ளவர் இவர். தனது உறவினர்கள், நண்பர்கள், அறிந்தவர்கள் என்ற உறவில் பல அரசியல்வாதிகளின் தொடர்புகள் இருந்த போதிலும், சமூகப் பணிகளை அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்து அரசியல் சாயம் பூசாது செய்கின்ற போதுதான் அவை நிரந்தரமாகவும், தூய்மையாகவும் இருக்குமென்பது இவரது கருத்தாகும்.

அவுஸ்திரேலியாவின் தேசிய மாணவர் சம்மேளனத்தின் (FAMSY) தேசியத் தலைவராகவும், விக்டோரியாவின் இஸ்லாமிக் கவுன்ஸிலின் (ICV) செயலாளராகவும் கடமையாற்றியதோடு மட்டுமல்லாது அல்லாஹ்வின் நாமம் ஒலிக்கும் பூமியெல்லாம் எமது பூமியே என்பதை விசுவாசிக்கும் இவர் பௌதீக வரையறைகளையும், புலம்பெயர்ந்த வாழ்வையும் தனது பணிகளுக்கு தடையாகக் கருதுவதில்லை. இந்த அடிப்படையில் தான் பிறந்த, வளர்ந்த பிரதேச மக்களுக்கு தன்னால் இயன்ற பல பணிகளை முன்னெடுத்தும் வருகின்றார். தஃவா பணியென்பது வறுமையொழிப்பை உள்வாங்கியதாய் இருக்க வேண்டும் என்பதும், கல்வித் தாபனங்கள், மருத்துவசாலைகள், ஆன்மீகத்தை வளர்க்கும் மஸ்ஜித்கள் இவைகளை தஃவா அமைப்புக்கள் அழகாய்த்திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படையில் சமூகத்திற்கு வழங்கும் போதுதான் தஃவாப் பணி காத்திரமாய் இருக்க முடியும் என்றும் நம்புகின்றார்.

வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வசிக்கின்ற ஒவ்வொரு சகோதரரும் தமது பெயர்களில் ஒவ்வொரு பவுண்டேசன்களை நிறுவி அதன் மூலம் சிறுமைப்படுத்தப்பட்டுள்ள எமது சமூகத்திற்காக, அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக, வாழ்வின் பிரகாசத்திற்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற கருத்தை உறுதியாக கூற விரும்புவதாகவும், தான் அந்த ஒழுங்கிலேயே செயற்பட்டு வருவதாகவும் இவர் கூறுகின்றார்.

இவரது பணியை அல்லாஹ்தஆலா பொருந்திக் கொள்ள வேண்டும் என்றும், இவரது முன்மாதிரியைப் பின்பற்றி புத்தி ஜீவிகள், வசதிபடைத்தோர் தமது சமுதாயப் பணியை முன்னெடுக்க முன்வரவேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும்.











கல்வித் துறையில் கலாநிதிப் பட்டம் சகோதரர் அஷ்ஷெய்க் அலவிஷரீப்தீன்


தகவல் – எம்.எம்.ஏ.ஷாகிர்Kattankudi.info

மஞ்சந்தொடுவாய்க் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் அஷ்ஷெய்க் செய்யத் அலவி ஷரீப்தீன் (நளீமி) அவர்கள் கடந்த 2012 மே 31ம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரிலுள்ள விக்டோரியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கல்வித் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

முதல் தடவையாக மட்டக்களப்பில் திறந்த பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா

 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா முதற் தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கடந்த காலங்களில் கொழும்பில் இடம்பெற்று வந்த சான்றிதழ் வழங்கும் வைபவம் முதற் தடவையாக இம்முறை மட்டக்களப்பி பிராந்திய கற்கைகள் நிலையத்தில் இடம்பெற்றுது. 

இதன்போது, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 350 பேர் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.

கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி கே.கோபிந்தராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் இலங்கை திறந்த பல்கலைகழகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் டபிள்யூ.ஏ. விமலவீர கௌரவ அதிதியாக கலந்துகொண்டனர்.

முகாமைத்துவம், தொழில்நுட்பம், ஆரம்ப கல்வி, தொழில்சார் ஆங்கிலம், சமூகவியல் உள்ளிட்ட கற்கைநெறிகளுக்கான சான்றிதழ்களே வழங்க்கப்பட்டன.














முதல் தடவையாக மட்டக்களப்பில் திறந்த பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா

 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா முதற் தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

Friday, June 1, 2012

அடுத்த வருடம் முதலாம்தரம் படிக்கவிருக்கும் மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு..!



அடுத்த வருடத்திற்காக அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்து கொள்வதற்கான சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி 2013 ஜனவரி 31 இல் ஐந்து வயதைப் பூர்த்திசெய்த பிள்ளைகளை முதலாம் தரத்திற்கு அனுமதிக்க விண்ணப்பிக்க முடியும் என்பதோடு, இந்த காலப் பகுதிக்குள் 6 வயது அல்லது 6 வயதைத் தாண்டிய பிள்ளைகள் அதனிலும் பார்க்க குறைந்த வயதுடைய தகைமையுடைய பிள்ளைகளை அனுமதித்த பின்னரே அனுமதிக்கப்படுவர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கான விண்ணப்பங்களை ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பிள்ளைகளைச் சேர்க்க விரும்பும் பாடசாலைகளுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

2013 இல் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்று நிருபத்தின் பிரகாரம் விண்ணப்பிக்கும் பாடசாலைகளுக்கு அருகில் வசிக்கும் பிள்ளைகளுக்கு 50 வீதமும் பழைய மாணவர்களின் பிள்ளைகளுக்கு 25 வீதமும், பிள்ளைகளின் சகோதரர்கள் அந்தப் பாடசாலையில் கற்பார்களாயின் அதன் அடிப்படையில் 15 வீதமும், கல்வி அமைச்சின் கீழுள்ள அரச பாடசாலைகளோடு தொடர்புடைய நிறுவன மற்றும் அலுவலகங்களில் சேவையாற்றுவோரின் பிள்ளைகளுக்கு 5 வீதமும், அரச சேவையில் இடமாற்றம் பெற்றுச் செல்வோரின் பிள்ளைகளுக்கும் 4 வீதமும், பிள்ளைகளுடன் வெளிநாடுகளிலிருந்து வருவோரின் பிள்ளைகளுக்கு ஒரு வீதமும் இடம் வழங்கப்படவுள்ளன. 

இதில் மேற்குறித்த விடயங்களின் உறுதிப்படுத்துலுக்கான புள்ளிகளின் அடிப்படையிலேயே மாணவர்களின் அனுமதி இடம்பெறவுள்ளன.

இதன் படி பாடசாலைக்கு அருகில் வசிப்போர் அடிப்படையில் விண்ணப்பிப்போருக்கு வாக்காளர் பதிவிற்கு 35 புள்ளிகள் வரையும் வதிவிடத்தை உறுதிப்படுத்த 10 புள்ளிகளும் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் மேலதிக ஆவணங்களுக்கு 5 புள்ளிகளும் பாடசாலை மற்றும் வதிவிடத்திற்கான தூரத்திற்கு 50 புள்ளிகளும் வழங்கப்படும். 

பழைய மாணவர்களின் பிள்ளைகளை அனுமதிக்கும் போது பெற்றோர் குறித்த பாடசாலையில் கற்ற ஒரு வருடத்திற்கு 2 புள்ளிகள் என்ற ரீதியில் 26 புள்ளிகள் வரையும் பாடசாலையில் கற்ற போது பாடசாலைக்குப் பெற்றுக் கொடுத்த வெற்றிகளுக்கும் 25 புள்ளிகளும், பாடங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு 25 புள்ளிகளும் , பழைய மாணவர் சங்க உறுப்பினருக்கு 24 புள்ளிகளும் வழங்கப்படும். 

பிள்ளையின் சகோதரர் பாடசாலையில் கற்பாராயின் ஒரு வகுப்புக்கு 3 புள்ளிகள் என்ற ரீதியில் 30 புள்ளிகளும் வாக்காளர் பட்டியலில் பெற்றோரின் பெயர் இருப்பின் 15 புள்ளிகளும் பாடசாலை மற்றும் வதிவிடத் தூரத்திற்கு 35 புள்ளிகளும் வதிவிடத்தை உறுதிப்படுத்தலுக்கு 10 புள்ளிகளும், பாடசாலையில் சகோதரர்கள் பெற்ற வெற்றிகளுக்கு 10 புள்ளிகளும் வழங்கப்படும். 

கல்வி அமைச்சுக்கு கீழ் அரச பாடசாலைகளுடன் தொடர்புடைய நிறுவனம் மற்றும் அலுவலகங்களில் சேவையாற்றும் பிள்ளைகளை அனுமதிக்கும் போது பெற்றோர் சேவை புரியும் காலத்திற்கு 20 புள்ளிகள் வரையும் நிரந்தர வதிவிடம் மற்றும் சேவையாற்றும் இடத்திற்கான தூரத்திற்கு 35 புள்ளிகள் வரையும் கஷ்ட சேவைகள் தொடர்பாக 25 புள்ளிகளும் எடுக்கப்படாத விடுமுறைகளுக்கு 10 புள்ளிகளும் வழங்கப்படவுள்ளன. 

இதேவேளை அடுத்த வருடத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் போது வசதிக் கட்டணம், சேவைக் கட்டணம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்துவ கட்டணம் தவிர்ந்த வேறு எந்தக் கட்டணங்களோ அல்லது பொருட்களையோ அறவிடுவதற்கு தடை விதித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் முதலாம்தரம் படிக்கவிருக்கும் மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு..!



அடுத்த வருடத்திற்காக அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்து கொள்வதற்கான சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி 2013 ஜனவரி 31 இல் ஐந்து வயதைப் பூர்த்திசெய்த பிள்ளைகளை முதலாம் தரத்திற்கு அனுமதிக்க விண்ணப்பிக்க முடியும் என்பதோடு, இந்த காலப் பகுதிக்குள் 6 வயது அல்லது 6 வயதைத் தாண்டிய பிள்ளைகள் அதனிலும் பார்க்க குறைந்த வயதுடைய தகைமையுடைய பிள்ளைகளை அனுமதித்த பின்னரே அனுமதிக்கப்படுவர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.