அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே


பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Monday, June 17, 2013

அறிவியல் துறையில் முஸ்லிம் அறிஞர்களின் பங்களிப்பு

விஞ்ஞானம்

முஸ்லிம்கள் அறிவு பெற வேண்டும் என்பதற்கான தூண்டுதல்களை அல்குர்ஆனும் ஸுன்னாவும் வழங்கியிருக்கின்றன. அல்குர்ஆனின் போதனைகளும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளின் செல்வாக்குமே பௌதிக விஞ்ஞானங்களைப் பயில்வதற்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் பின்புலமாக உள்ள பிரதான சக்தியாகும்.

அல் குர்ஆன் வேதநூலாகவே அருளப்பட்டது. எனினும் சமய சிந்தனைக்கும் விஞ்ஞான சிந்தனைக்கும் இடையே வேற்றுமையை அந்நூலில் காணமுடியாது. மாறாக அவ் விரண்டிற்கும் இடையே நெருக்கான உறவு இருப்பதையே காணலாம். சமயமும் விஞ்ஞானமும் ஒன்றிற்கொன்று முறண்பட்டதல்ல. சமய உண்மைகளை விஞ்ஞானம் நிறுவுவதையே காணமுடிகிறது. இதனால் அல் குர்ஆனில் விரவி வந்துள்ள விஞ்ஞானத்துறைப் போதனைகளை முஸ்லிம்கள் ஆழ்ந்து சிந்தித்தனர். பிரபஞ்சம் முழுவதும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிகிறது என்ற கருத்து இஸ்லாத்தின் தௌஹீத் கோட்பாட்டுடன் இயைந்து செல்கின்றது. ஆதலால் பிரபஞ்சம் பற்றிய ஆய்வை இஸ்லாமிய ஆய்வாகவே முஸ்லிம்கள் கருதினர்.

விஞ்ஞான அறிவு அவதானம்இ ஆழ்ந்த சிந்தனை ஆகிய இரு முக்கிய காரணிகளில் தங்கியிருக்கிறது. முன்னையது புலன்களின் பிரயோகத்தோடும் பின்னையது உள்ளத்தின் செயற்பாட்டோடும் தொடர்புடையனவாக இருக்கின்றன.

இறை படைப்புகளை அவதானிப்பதும்இ அதனைப் பற்றிச் சிந்திப்பதும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதிலும் அவனது எல்லையற்ற வல்லமையிலும் மகிமையிலும் ஏனைய பண்புகளிலும் ஒருவன் நம்பிக்கை கொள்வதற்கு வழிவகுக்கின்றன. குர்ஆனில் கூறப்பட்டுள்ள இப்றாஹீம் நபியின் சரிதையில் விண்மீன்களும் சந்திரனும் சூரியனும் மறைந்து விடுவதை அவதானித்துப் பார்த்து விட்டு அவர் பின்வருமாறு கூறியதாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.

'மறைந்து போகக் கூடியவற்றை நான் நேசிக்க மாட்டேன்' அதாவது அவற்றின் வருகை நிலையற்ற தன்மை வாய்ந்தது. பிரபஞ்சத்தைப் படைத்த நித்தியமான ஓர் இறைவன் இருக்க வேண்டும் என்பதில் இப்றாஹீம் (அலை) நம்பிக்கை கொண்டார் என்பதையே இது காட்டுகிறது. இயற்கைத் தோற்றப்பாடுகளை அவதானிப்பதானது இறைவனில் நம்பிக்கை கொள்வதற்கு வழிவகுக்கும் என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

' இப்றாஹீம் உறுதி கொள்ளும் பொருட்டு வானங்களிலும் பூமியிலுமுள்ள நம்முடைய சிருஷ்டிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்தோம்'.

சில உண்மைகளை விளங்கிக் கண்டு கொள்வதற்காக அவதானித்தவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதும் அவசியமாகும். அல்குர்ஆன் சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கின்றது.

தமது புலன்களைக் கொண்டு அவதானிக்காதவர்களும் உள்ளங்களைக் கொண்டு சிந்திக்காதவர்களும் கால்நடைகளுக்கு நிகரானவர்களாகவும் கால்நடைகளைவிட மோசமானவர்களாகவும் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபடுவதற்குத் தூண்டக்கூடிய வகையில் அல்குர்ஆன் சில தெளிவான அறிவுறுத்தல்களை விசுவாசிகளுக்கு வழங்கியிருக்கின்றது. சந்திரனின் பல்வேறு நிலைகள்இ குறிப்பிட்ட விகிதாசாரத்தில் அனைத்தையும் படைத்திருத்தல்இ குறிப்பிட்ட வேகத்தில் சூரியன்இ சந்திரன் ஆகியவற்றின் சுழற்சிஇ குறிப்பிட்ட ஒழுங்கிற்கேற்ப அவற்றின் அமைவுஇ அனைத்தும் சோடி சோடியாகப் படைக்கப்பட்;டிருத்தல் என்பன போன்ற பிரபஞ்ச இயற்கைத் தோற்றப்பாடுகள் பற்றி அடிக்கடி பேசும் அல்குர்ஆன் வசனங்கள் விஞ்ஞான ஆராய்ச்சிக்கான தூண்டுதல்களைத் தருகின்றன. அல்குர்ஆன் எடுத்துரைத்துள்ள ஏராளமான பிரபஞ்ச உண்மைகளில் வெகு சொற்பமான அளவையே நவீன விஞ்ஞானம் இன்று புரிந்து கொண்டுள்ளது.

தொழுகைஇ நோன்புஇ ஹஜ் போன்ற குர்ஆனியக் கட்டளைகளும் விஞ்ஞானக் கல்விக்கான தூண்டுதல்களை வழங்குகின்றன. தொழுகை நேரங்களில் முஸ்லிம்கள் தமது முகங்களைக் கஃபாவின் பக்கம் திருப்பிக் கொள்ளக் கூடிய வகையில் முஸ்லிம்களுக்குக் கஃபாவின் திசையையும் தொழுகைக்குரிய நேரங்களையும் நிர்ணயிக்க வேண்டியிருந்தது. இது முஸ்லிம்கள் வாழ்ந்த அனைத்து இடங்களுக்குமுரிய அகலஇ நெடுங்கோடுகளையும் சூரியனின் குத்துயரத்தையும் நிர்ணயிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது.

ஹஜ்இ ஜிஹாத்இ வர்த்தகம் போன்ற நோக்கங்களுக்காக முஸ்லிம்கள் கடலிலும் தரையிலும் நீண்ட நெடும் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்நடவடிக்கைகள் அவர்களது வழிகாட்டுதலுக்குத் தேவையான நட்சத்திர நிலைகள் பற்றிய படங்களைத் தயாரிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டன. புவியியற் கல்வியை விருத்தி செய்வதில் ஹஜ் முக்கியமானதொரு பங்கினை வகித்தது. மக்காவுக்குத் தமது புனித யாத்திரையை மேற்கொள்ளத் தொடங்குவதற்கு முன்னர் ஹஜ்ஜாஜிகள்இ மக்காவுக்குச் செல்லும் வழியிலுள்ள பிரதேசங்கள் பற்றித் தேவையான அனைத்துத் தகவல்களையும் திரட்டிக் கொள்ளலாயினர். இவ்வகையில் எழுதப்பட்ட நூல்கள்இ பல நாடுகளினது மதஇ சமூகஇ அரசியல்இ பொருளாதாரஇ புவியியல்இ விவசாய ஆய்வுகளை உள்ளடக்கியனவாக இருந்தன.

இஸ்லாத்தின் வருகைக்குப் பின் ஒரு நூற்றாண்டு காலத்திற்குள் இஸ்லாமிய சாம்ராச்சியமானது கிழக்கே அரேபியாவிலிருந்துஇ மேற்காக அத்திலாந்திக் கரை வரையும் பரந்து விரிந்திருந்தது. ஜிஸ்யாஇ கராஜ்இ உஷ்ர்இ கனீமத் என்பன இப்பரந்த இராச்சியத்தின் வருமானத்திற்குரிய பிரதான மூலங்களாக இருந்தன. கணக்கு வழக்குகளைப் பேணி வருவதற்கு எண் கணிதத்தில் சிறந்த அறிவ தேவைப்பட்டது. கட்டடங்களையும் பள்ளிவாயல்களையும் நிர்மாணிப்பதற்கு திரிகோண கணிதம்இ கேத்திர கணிதம்இ அட்சர கணிதம்இ எண் கணிதம் என்பவற்றில் ஆழ்ந்த அறிவு தேவைப்பட்டது.

அல்குர்ஆன் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்திற்கான முன்னேற்பாடுகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது. சிக்கலான வாரிசுரிமைச் சொத்தின் நடைமுறைகளைத் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு எண் கணிதத்தில் சிறந்த அறிவு பெற்றிருப்பது அவசியமாகும். இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்திற்கிணங்க உரிமையாளர்களின் பங்குப் பிரிவுகள் பற்றி பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

பூமியின் கீழுள்ள கனிப்பொருட்கள் பற்றிய அறிவையும் அல் குர்ஆனே வழங்கியுள்ளது தாவரவியல் பற்றி அல் குர்ஆனில் பல இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

'மேகத்தில் இருந்து மிக்க பாக்கியம் உள்ள மழையை நாம் வருவிக்கச் செய்து அதனைக் கொண்டு பல சோலைகளையும் அறுவடை செய்யும் தானிய மணிகளையும் முளைக்கச் செய்கின்றோம். அடுக்கடுக்காக (கனிகள்) நிறைந்த குலைகளையுடைய நீண்டு வளரும் பேரிச்ச மரங்களையும் (முளைப்பிக்கச் செய்து) அடியார்களுக்கு ஆகாரமாக்கின்றோம்....'(50:9-11)

'வித்துக்களையும் கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடி(த்து முளை) க்கச் செய்கின்றான்.....'(06:95)

தாவரவியல் பற்றி எடுத்தாண்ட மேற்குp;த்த கருத்துக்களால் தூண்டப்பட்டதால் முஸ்லிம்கள் பலர் இத்துறையில் நிறைய ஈடுபாடு காட்டினார்கள். ஜாபிர் பின் ஹய்யான்இ அபூ சஈத் அல் அஸ்மஇஇ இப்னு பாச்சாஇ இப்னுல் லதீப் அல் பக்தாதிஇ அல் கஸ்னவி போன்றவர்கள் இத்துறையில் நிறைய பங்களிப்பு செய்துள்ளனர்.

விவசாய உற்பத்தியையும் அல் குர்ஆனும் சுன்னாவும் ஊக்குவித்தன. 'நாளை உலகம் அழியப்போகிறது என்று அறிந்தாலும் இன்று நீ ஒரு மரத்தை நடு'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்குர்ஆனும் விவசாய உற்பத்pயை விதந்து பாராட்டியுள்ளது.

இவ்வாறான பல குர்ஆன் ஆயத்துகளால் உந்தப்பட்ட முஸ்லிம்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே விவசாயத்தில் அதிக ஈடுபாடு காட்டினர். உற்பத்தியின் தரத்தைக் கூட்டினர். உற்பத்தியைப் பெருக்கி புதிய தாவரங்களை அறிமுகப்படுத்தினர். விவசாய உத்திகளைக் கையாண்டனர். நிலம்இ நீர்இ தாவரங்கள்இ மிருகங்கள் என்பவற்றை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் அறிவைப் பெருக்கினர். பல அறிஞர்கள் விவசாயம் பற்றிய நூல்களை எழுதினர்.

அல் குர்ஆன் மனித உற்பத்தியைப் பற்றிக் குறிப்பிடும் போது சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்னால் முதல் மனிதனைப் படைத்ததாக குறிப்பிடுகிறது. மற்றோர் இடத்தில் ஆரம்பத்தில் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான். ஆயினும்இ பின் ஒரு துளி இந்திரியத்தில் இருந்து ஆண்இ பெண் என்று இருபாலாராகப் பிரிக்கப்பட்;டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புகை மண்டலத்தில் இருந்து வானத்தைப் படைத்தான் என்றும் அனைத்துப் படைப்பினங்களையும் இனவிருத்தி நோக்கி சோடி சோடியாகப் படைத்ததுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

ஒரு பெண்ணிண் கர்ப்பப் பையில் விந்தானது பல்வேறு படித்தரங்களில் மாற்றமும் வளர்ச்சியும் அடைந்து ஒரு பூரண வளர்ச்சியடைந்த குழந்தையின் அமைப்பைப் பெறுவதை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

'நிச்சயமாக (ஆரம்பத்தில் முதல்) மனிதனைக் களிமண்ணின் சத்திலிருந்து சிருஸ்டித்தோம். பின்னர் அதனை நாம் இந்திரியமாக்கி ஒரு பத்திரமான இடத்தில் வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாக்கினோம். புpன்னர் அவ்விரத்தக் கட்டியை மாமிசப் பிண்டமாகச் செய்தோம். பின்னர் அம் மாமிசப் பிண்டத்தில் இருந்து எலும்பை உற்பத்தி செய்து அவ்வெலும்புக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச்செய்தோம் பெரும் அருட்பேறுடைய அல்லாஹ் படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன்.' (23: 12 - 16) அல் குர்ஆன் மனித உற்பத்தி பற்றி சிந்திக்க எவ்வாறு வழிகாட்டுகிறது என்பதனை இவ்வாயத் அழகாகக் காட்டுகிறது. நவீன அறிவியலானது மிகத் துல்லியமான உபகரணங்களின் துணை கொண்டு கண்டு பிடித்த தாயின் கருவறைக்குள் நிகழும் இந்த அற்புத வளர்ச்சிப் படிவங்களைப் பதினான்கு நுற்றாண்டுகளுக்ககு முன்னர் இவ்வளவு நுட்பமாக அல்குர்ஆன் விளக்கியிருக்கும் பான்மையானது அது மனித மனித சிந்தனையின் விளைவன்றிஇ ஒரு தெய்வீக வெளிப்பாடே என்பதை சந்தேகமின்றி நிறுவுவதாக கலாநிதி கீத் மூர் குறிப்பிடுகிறார்.

இதைப் போலவே இரசாயனக் கலவைகள் பற்றியும் அல் குர்ஆன் சிந்திக்க வழிகாட்டுகிறது.

'உமதிறைவன் தேனிக்கு உள்ளுணர்ச்சியை உண்டாக்கினான். மலைகளிலும்இ மரங்களிலும் உயர்ந்த கட்டிடங்களிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள். அன்றிஇ நீ எல்லாவிதமான கனி(களின் மலர்)களிலிருந்தும் அருந்தி உமதிறைவனின் எளிதான வழிகளில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல். இதனால்இ அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) புறப்படுகிறது. அதில் மனிதனுக்கு நிவாரணியுண்டு...' (16: 68 – 69)

அல்குர்ஆனின் இவ்வாயத்து சடப் பொருட்கள் பல அளவுகளில் ஒன்றுடன் ஒன்று கலப்பதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி சிந்திக்கத் தூண்டியது. அல் குர்;ஆனில் மேலே சுட்டியது போன்ற ஆயத்துகள் பல விஞ்ஞான ரீதியான உண்மைகளைப் புலப்படுத்தி அக்கலைகளை வளர்த்துச் செல்லும் மனப்பாங்கையும் முஸ்லிம்களிடம் தோற்றுவித்தது. அதன் விளைவாகத்தான் முஸ்லிம்களிடையே விஞ்ஞானக் கலை அப்பாஸியர் காலமுதல் வளர்ச்சியடைந்ததைக் காணமுடிகிறது.

அல்குர்ஆனின் போதனைகளின் துண்டுதலால் இயற்கையின் படைப்பினங்களில் அவதானத்தைச் செலுத்திஇ படைப்புகளில் காணப்படும் சீரமைப்பையும் ஓழுங்கையும் அடிப்படையாக வைத்து இயற்கையைப் பிணைத்திருக்கும் இயற்கை விதிகளைக் கண்டறிந்த முஸ்லிம் அறிவியல் அறிஞர்கள் பெருமைக்குரிய ஓர் அறிவியல் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பினர். வானியல்இ புவியியல்இ மருத்துவம்இ பௌதிகம்இ இரசாயனம்இ தாவரவியல் போன்ற அனைத்துத் துறைகளுக்கும் முஸ்லிம் அறிவியல் மேதைகள் பங்களிப்புச் செய்தனர். முஸ்லிம்கள் கிரேக்கஇ பாரசீக இந்திய அறிவியல் பாரம்பரியங்களை ஆழமாகக் கற்று அவற்றில் காணப்படும் குறைகள்இ பலவீனங்களை இனங்கண்டுஇ தமது ஆய்வுகளின் அடிப்படையில்புதிய அம்சங்களை இணைத்து அதற்கேயுரிய சிறப்பியல்புகளைக் கொண்ட இஸ்லாமிய அறிவியல் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பினர்.


மருத்துவத்துறை வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு

மருத்துவத்துறையில் முஸ்லிம்கள் அடைந்த முன்னேற்றத்திற்கு குர்ஆனினதும்,ஹதீஸினதும் போதனைகளே தூண்டுகோலாய் அமைந்தன. தேனின் மருத்துவக் குணம் பற்றி அல் குர்ஆன் பின்வருமாரு கூறுகிறது 'அதனுடைய வயிற்றில் இருந்து (தேனி) பல நிறங்களுடைய ஒரு பானம் (தேன்) பெறப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணி உண்டு. சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதிலும் ஓர் அத்தாட்சி இருக்கன்றது'. (16:69)

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் அடியார்களே, நீங்கள் மருந்துகளைக் கொண்டு நோய்களுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள.; மரணத்தைத் தவிர மற்றைய எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்துகளைப் படைத்துள்ளான.; ஆனால், மனிதர்கள் அவற்றை அறியாமல் இருப்பதுண்டு' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் பல நோய்களுக்கான நிவாரணங்களை விளக்கியுள்ளார்கள். அவர்களின் நோய் நிவாரணி பற்றிய விளக்கங்களை அறிஞர்கள் 'அத்திப்புந் நபவிய்யி (நபிகளாரின் மருத்துவம்)' எனும் தலைப்பில் தொகுத்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் காலப்பிரிவில்'ஹாரிஸ் பின் கல்தா' என்ற யூத அறிஞர் மருத்துவத்துறையில் புகழ் பெற்று விளங்கினார். நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஐ;ஐpன் பின்னர் ஸஅத் பின் அபி வக்காஸ் (றழி) அவர்கள் சுகவீனம் அடைந்த போது நபியவர்கள் ஸஅதுக்கு சிகிச்சை செய்யும்படி ஹாரிஸைப் பணித்தார்கள.; இவர்களது காலப்பிரிவில் பாரசீக மன்னன் நபியவர்களுக்கு வைத்தியம் செய்வதற்காக பாரசீக வைத்தியர் ஒருவரை அனுப்பி வைத்தான்.

குலபாஉர்ராசிதீன்கள் காலத்தில் மருத்துவத்துறை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாக வள்ர்ச்சியடைந்திருக்கவில்லை. இஸலாமிய உலகில் முதன்முதலாக வைத்திய சாலைகளை நிறுவிய பெருமையுடைய கலீபா வலீத்தையே சாரும். இவரால் நிறுவப்பட்ட அங்கவீனர்களுக்கான வைத்தியசாலையில் குருடர், செவிடர், போன்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இவரது முன்மாதியைப் பின்பற்றி ஏனைய உமையா கலீபாக்களும் ஆங்காங்கே வைத்தியசாலைகளை நிறுவிய போதிலும் அவை ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பில் இருக்கவில்லை. அப்பாசியர் ஆட்சியிலேயே ஒழுங்கு படுத்தப்பட்ட மருத்துவ மனைகள் தோன்ற ஆரம்பித்தன. முதன்முதலாக சகல வசதிகளையும் கொண்ட பொது வைத்தியசாலையை நிறுவிய பெருமை கலீபா ஹாரூன் அர்ரஷீதையே சாரும். பக்தாதில் நிறுவப்பட்ட இவ் வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் இருந்ததோடு மருத்துவம் பயில விரும்பிய மாணவர்களுக்கு இங்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் வௌ;வேறான வார்ட்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதே போல் தொற்றுநோய்களுக்கு தனித்தனி வார்ட்கள் இருந்தன. ஆண்களுக்கான வார்ட்களில் ஆண் தாதிகளும், பெண்களுக்கான வார்ட்களில் பெண் தாதிகளும் கடமையாற்றினர். வெளி நோயாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனை குறித்த தினங்களில், குறித்த இடத்தில் இடம் பெற்றது. மருத்துவ மனையில் தங்குவோருக்கான பிரத்தியேக உடைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன. நோயாளியின் உடைகள், உடமைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நோயாளிகளைப் பார்க்க வருவோருக்கும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. மருந்துகளை தயாரிக்கவும், நிர்வாக தேவைகளுக்காகவும் சமயலறைக்காகவும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

வைத்தியசாலைகளில் கடமையாற்றுவோர்களுக்கு கவர்ச்சி கரமான சம்பளம் வழங்கப் பட்டிருந்தது. தம் கடமை நேரததில் அவர்கள் வைத்திய சாலையில் இருப்பது அவசியமாகியது. பிரபல வைத்தியர்கள் தினந்தோறும் நோயாளிகளைப் பரிசோதித்தனர். நோயாளிகளுக்கான மருந்துகள், உணவு, தங்குமிடம் என்பன எல்லாம் இலவசமாக வழங்கப்பட்டன.

வைத்தியசாலைகளோடு இணைந்ததாக மருத்துவக் கல்லூரிகள் இயங்கின. பத்தாத், டமஸ்கஸ், கெய்ரோ, மக்கா, ஜெரூசலம், அலெப்போ, ஹர்ரான் ஆகிய பகுதிகள்pல் பல மருத்துவக் கல்லூரிகள் செயற்பட்டன. இதற்காக வைத்திய சாலைகளில் விரிவுரை மண்டபங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வைத்தியசாலைகளினதும் வைத்திய மாணவர் களினதும் நலன்கருதி அங்கு நூல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பு எடுக்கும் மாணவர்களுக்கு தாளும், பேனாவும் இலவசமாக வழங்கப்பட்டன.

மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உணவும், தங்குமிட வசதியும் வழங்கப்பட்டன. ஏழை மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. இக்கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்குப் பரீட்சை நடாத்துவதற்கு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வழக்கமும் இருந்தது.

கலீபா மஃமூன் 'பைத்துல் ஹிக்மா' எனும் நிறுவனத்தை நிறுவி 'ஹுனைன் இப்னு இஸ்ஹாக்' என்பவரை அதன் பிரதான மொழி பெயர்ப்பாளராக நியமித்தார். ஈஸா பின் யஹ்யா, தாபித் பின் குற்றா, அலி அத் தபறி, யுஹன்னா பின் மஸாவேஹ்; என்போர் மொழிபெயர்ப்பாளர் குழுவில் அடங்கியிருந்த ஏனையோராகும். இவர்கள் கிரேக்க அறிஞர்களான கெலன், ஹிப்போகிரட்டிஸ், போல் முதலானோரின் மருத்துவ நூல்களை மொழி பெயர்த்தனர். கிரேக்க மருத்துவ நூல்கள் கால ஓட்டத்தில் அழியாது பாதுகாக்கப்பட மொழிபெயர்ப்புப் பணி பெரிதும் உதவியது. கிரேக்க மருத்துவ அறிவியல் நூல்களை மொழிபெயர்த்ததன் மூலம் அவற்றை அழியாது பாதுகாத்த பெருமை முஸ்லிம்களையே சாரும். முஸ்லிம்கள் கிரேக்க மருத்துவ நூல்களை மொழிபெயர்த்தது மட்டுமன்றி, கிரேக்க மருத்துவ மேதைகளின் தவறுகளை விமர்சித்து அவற்றை சுடடிக்காட்டியதோடு மருத்துவத்துறையில் பரிசோதனை முறையை அறிமுகப்படுத்தியும் பல கோட்பாடுகளை நிறுவியும் மருத்துவத்துறையின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினா.; கிரேக்கரின் மருத்துவ முறையான யூனானி மருத்துவத்தைப் பாதுகாத்து இன்றைய உலகிற்கு அளித்த பெருமை அரேபிய முஸ்லிம்களையே சாரும்.

போர்க்காலங்களில் வைத்திய சிகிச்சை அளிப்பதற்காக முஸ்லிம்களால் இராணுவ வைத்தியசாலைகளும் நிறுவப்பட்டன. படுக்கைகள் இணைக்கப்பட்ட ஒட்டகங்கள் அம்யுலன்ஸ் வண்டிகளாகப் பயன்படுத்தப்பட்டன. அவ்வாறே முஸ்லிம்கள் மருந்துக்கடைகளையும் நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.

மருந்து உற்பத்தித் துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு மகத்தானதாகும். இதனை மேற்குலகம் அங்கிகரித்துள்ளது எனலாம். கி.பி. 1618ல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட மருந்தியல் நூலில் கிரேக்க அறிஞ்ஞர்களான ஹிப்போகிரட்ஸ், கலன் எனும் இருவரது படங்களுடன் முஸ்லிம் மருத்துவரான அபூ அலி ஸீனா, அபூ ஸகரிய்யா யுஹன்னா பின் மஸாவிஹ் எனும் இருவரது படங்களும் பிரசுரிக்கப்பட்டடிருந்தன என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

முஸ்லிம் மருத்துவ அறிஞ்ஞர்கள் எழுதிய நூல்கள் ஐரோப்பிய மொழிகள் பலவற்றிற்கு மொழி பெயர்க்கப்பட்டமையும், முஸ்லிம் மருத்துவர்கள் கையாண்ட வழி முறைகள் நீண்ட காலம் ஐரோப்பிய மருத்துவர்களால் பின்பற்றப் பட்டமையும் இன்றும் அக் கலையில் அறபு மருத்துவத்தின் செல்வாக்கு இருக்கின்றமையும் மேற்குலக மருத்துவத்தின் மீது முஸ்லிம்களின் செல்வாக்கு யாது என்பதை மதிப்பிட உதவுவன எனலாம்.

மருத்துவத் துறைக்குப் பங்காற்றிய அறிஞர்கள்

மருத்துவத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த முஸ்லிம் மருத்துவ மேதைகளுள் அர்ராஸி, இப்னு ஸீனா, இப்னு நபீஸ், அஸ்ஸஹ்ராவி, ஹுனைன் இப்னு இஸ்ஹாக் ஆகியோர் சிறப்புற்று விளங்கினர்.

அர்ராஸி

மேற்குலகத்தால் 'ராஸஸ்' என அழைக்கப்பட்ட இவர் இளம் வயதிலேயே இரச வாதத்தில் யுடுஊர்நுஆலு (அல் கெமி) ஈடுபட்டவராவார். பிற்காலத்தில் மேற்காசியாவில் பல பாகங்களிலும் இருந்து வந்த நோயாளர்களாலும், மாணவர்களாலும் கவரப்பட்டார். இவர் மருத்துவம் செய்யும் திறமையைப் பெற்ற பிறகு பக்தாக் நகருக்குச் சென்று அங்கிருந்த பிரதான வைத்திய சாலையில் பிரதம மருத்துவ அதிகாரியாகக் கடமையாற்றினார். பின்னர் அப்பாஸிய கலீபாக்களுள் ஒருவரான முக்தபி பில்லாஹ் (கி.பி.902 - 907) என்பவரின் ஆட்சிக்காலத்தில் இராச்சியம் முழுவதிலும் நிறுவப்பட்டிருந்த வைத்தியசாலைகளின் தலைவராகக் கடமையாற்றினார். இவர் எழுதிய 220க்கும் அதிகமான நூல்களில் 140 நூல்கள் மருத்துவம் சார்ந்த நூல்களாகும். அவற்றுள் அல்ஹாவி, அல் ஜ}தரி வல் ஹஸ்பா, கிதாபு திப்பில் மன்சூரி, கிதாபுல் அஸ்ரார் ஆகியவை தவிர ஏனையவை மிகச்சிறியவையாகும்.

12 பாகங்களை உள்ளடக்கிய பிரசித்தி பெற்ற நூலான அல்ஹாவி இவர் எழுதிய நூல்களில் மிப் பெரியதாகும். இந்நூல் 'மருத்துவத்தின் கலைக்களஞ்சியம'; என போற்றப்படுகிறது. இதைப்போன்ற ஒரு பொய மருத்துவ நூல் இதுவரை உலகில் இல்லை என கருதப்படுகிறது. சுகாதாரம,; நோய்களும் அவற்றின் அறிகுறிகளும் அவற்றிற்கான சிகிச்சை முறைகளும் ஆகிய அம்சங்களை இந்நூல் உள்ளடக்கியிருப்பதுடன் ஒவ்வோரு நோயின் முடிவிலும் அந்நோய் பற்றிய அர்ராஸியின் சொந்தக் கருத்தக்களும் அனுபவங்களும் கூறப்பட்டிருக்கின்றன.

அர்ராஸியின் மற்றுமொரு நூலான அல் ஜ}தரி வல் ஹஸ்பா சின்னமுத்து, பெரியம்மை பற்றி விளக்குகின்றது. இந்நூல் பல ஐரோப்பிய நாடுகளில் பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. சின்னமுத்துக்கும் பெரியம்மைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை முதன்முதலில்; விளக்கிய நூலாக மதிக்கப்படுகிறது.

அர்ராஸியின் மற்றொறு நூலான 'கிதாபுத் திப்பில் மன்சூரி' (மன்சூரி மருத்துவ நூல்); எனும் நூலும் ஒரு சிறந்த மருத்துவப் படைப்பாகும். இந்நூல் 10 பாகங்களைக் கொண்டது அவற்றில் சில பாகங்கள் ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.

அர்ராஸி மகப்பேற்று மருத்துவம், பெண் மருத்துவம், கண் மருத்துவம், சத்திர சிகிச்சை போன்ற துறைகளிலும் திவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். அறுவைச் சிகிச்சையின் போது தையல் போடுவதற்காக முதன் முதலில் மிருகங்களின் குடல் இழைகளைப் பயன்படுத்தியதும் இவரேயாவார்.

அர்ராஸி கி.பி 925ம் அண்டில் கண்பார்வை இழந்த நிலையில் மரணமானார். இவரின் உருவப்படம் பாரீஸ்; பல்கலைக்கழத்தன் மருத்துவ பீடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது இவரது நினைவாக 1964ம ஆண்டு ஈரானில் தபால் முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.

அலி இப்னு ஸீனா

அர்ராஸியை அடுத்து மத்தியகால மருத்துவத்துறையின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தவர் 'அவிசென்னா' என ஐரோப்பியர்களால் அழைக்கப்பட்ட அபூ அல் ஹுஸைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸீனா (கி.பி 980 - 1037) ஆவார். இவர் தனது 17வது வயதில் திறமை படைத்த மருத்துவராக விளங்கினார். 21வது வயதில் நூல்கள் எழுத ஆரம்பித்தார். இவர் எழுதிய 99 நூல்களுள் 17 நூல்கள் மருத்துவம் சார்ந்வையாகும். இவற்றுள் 'கெனன்' என ஐரோப்பியர்களால் அழைக்கப்பட்ட 'கானூன் பித்திப்பி' (மருத்துவ விதிகள்) ஐரோப்பியரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதுடன் மருத்துவத்துறையின் பைபிளாகவும் மதிக்கப்பட்டது. இந்நூல் 5 பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

முதலாம் பகுதி – உடலமைப்பு, உடல்நலன்கள், குழந்தை நலன், வயோதிபர் நலன், பொதுவான சிகிச்சைகள்.

இரண்டாம் பகுதி – நோய்களின் அறிகுறிகள் அகரவரிசையில் விளக்கப்படுகின்றன.

மூன்றாம் பகுதி – உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையுள்ள உறுப்புக்களைப் பாதிக்கும் நோய்களைப் பற்றியுள்ள விளக்கங்களும், பொது நோய் பற்றிய குறிப்புக்களும்.

நான்காம் பகுதி – காய்ச்சல், வீக்கம். உடைவு. அறுவைச் சிகிச்சை, முறிவு, உணவு நஞ்சாதல், விசர்நாய்க்கடி, சரும நோய் பற்றிய விளக்கங்கள்.

ஐந்தாம் பகுதி – கலவை முறை மருந்துகள், சிகிச்சை முறைகள்.

இந்நூலில் 760 வகையான மருந்துகள் தொடர்பான விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இந்நூல் பல ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் மருத்துவ பாட நூலாகவும் பயன்படுத்தப்பட்டது.

அலி இப்னு ஸீனா, கானூன் பித்திப்பி தவிர அர்ஜுஸா பித்திப்பி, அத்வியதுல் காலிபா. அஷ்ஷிபா முதலிய மருத்துவ நூல்களையும் எழுதியுள்ளார். தொற்று நோய் பற்றி உலகிற்கு அறிமுகம் செய்த இவர் சில நோய்களின் பரம்பலுக்கு மண்ணும், நீரும் காரணமாகின்றன என்றும் நிறுவினார். மருத்துவத்துறைக்கு ஆற்றிய பணிகள் காரணமாகவே 'நவீன மருத்துவத்தின் தந்தை (கயவாநச ழக வாந அழனநசn அநனiஉiநெ)' என அழைக்கப்படுகிறார்.

இவருக்கு 'ஷெய்குல் ரயீஸ்', '2ம் அரிஸ்டோட்டில'; போன்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.

ஹுனைன் இப்னு இஸ்ஹாக்

அப்பபஸிய கலிபாக்களான அல் மஃமூன், அல் முதவக்கில் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் புகழ் பெற்று விளங்கிய மற்றுமொரு மருத்துவ மேதை 'ஹுனைன் இப்னு இஸ்ஹாக் ஆவார். கலீபா மஃமூனின் காலத்தில் அரசாங்க மொழிபெயர்பாளராகவும் பைத்துல் ஹிக்மாவின் மேற்பார்வையாளராகவும் கடமையாற்றினார். மஃமூனின் காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கநூல்களுள் பெரும்பாலானவை இவரால் மொழிபெயர்க்கப்பட்டவையே ஆகும். கிரேக்க மருத்துவ நூல்களை சேகரிப்பதற்காக சிரியா, பலஸ்தீன், அலெக்சாந்திரியா போன்ற நாடுகளுக்கு பிரயாணம் செய்தார்.

கிரேக்க மருத்துவ மேதையான கெலனால் எழுதப்பட்ட மருத்துவ நூல்கள் யாவும் இவரால் மொழி பெயர்க்கப்பட்டன.

இவர் மொழிபெயர்ப்பு நூல்கள் மட்டுமின்றி சொந்தமாகவும் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் சொந்தமாக எழுதிய நூல்களுள் 'மருத்துவத்தின் கேள்விகள்' எனும் நூல் பிரசித்தி வாய்ந்தது. இதில் மருத்துவக்கலை பற்றிய விளக்கங்கள் வினாவிடை முறையில் கூறப்பட்டடுள்ளன.

அஸ்ஸஹ்ராவி

கி.பி 10ம் நூற்றாணடில் வாழ்ந்த முஸ்லிம் மருத்துவ மேதைகளுள் இவரும் ஒருவராவார். குர்துபாவுக்கு அருகில் உள்ள 'ஸஹ்ரா' எனும் ஊரில் பிறந்த காரணத்தினால் 'ஸஹ்ராவி' என அழைக்கப்படுகின்றார். இவரது முழுப்பெயர் அபுல் காஸிம் கலப் பின் அப்பாஸ் அஸ்ஸஹ்ராவி என்பதாகும். குரங்குகளைப் பயன்படுத்தி மனித உடல் உறுப்புக்களை பற்றி மிகுந்த ஆய்வுகள் செய்து வெற்றி கண்ட இவர் அறுவைச் சிகிச்சை முறையில் பல நவீன முறைகளையும் கண்டுபிடித்தார். இவரால் எழுதப்பட்ட 'அத்தஸ்ரீப்'எனும் 30 பாகங்களைக் கொண்ட நூல் மருத்துவத் துறையில் எழுதப்பட்ட ஓர் ஒப்பற்ற மருத்தவக் கலைக் களஞசியமாகும்.

இந்நூல் பின்வரும் விடயங்களை உள்ளடக்கியிருந்தது

மருந்து தயாரித்தல்.

கண், காது, மூக்கு, வாய், முதலிய உறுப்புக்களில் அறுவைச் சிகிச்சை செய்தல்.

சயரோகம்

பெண்கள் தொடர்பான நோய்கள்

குருதியுறையா நோய்.

குருதியுறையா நோய் பற்றி முதலில் விளக்கிய இவர் ஒரு பல் வைத்தியராகவும் விளங்கினார்.

இப்னு அந்நபீஸ்

கி.பி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்னு அந்நபீஸ் மருத்துவக் கலை பற்றி பல நூல்களை எழுதினார். கண்நோய்கள், உணவியல் சம்மந்தமான நூல்களை எழுதிய இவர் ஹிப்போகிரட்டீஸ், ஹுனைன் இப்னு இஸ்ஹாக், இப்னு ஸீனா ஆகியோரின் நூல்களுக்கு விரிவுரைகளும் எழுதியுள்ளார். இவர் எழுதிய விரிவுரை நூல்களுள் கிதாப் அல் முஃஜிஸ், அத்தஷ்ரீஹ் என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.

அலி இப்னு அப்பாஸ்

இவரது முழுப்பெயர் அலி இப்னு அப்பாஸ் மஜூஸி ஆகும். ஐரோப்பியர் இவரை 'ஹெலி அப்பாஸ்' என அழைத்தனர். மைத்துளைக்குழாய்களின் அமைப்பு, தொழிற்பாடு, குழந்தை பிரசவமாகும் விதம் என்பன பற்றி ஆராயந்து மிகச்சரியான விளக்கமளித்த முதல் மருத்துவர் இவராவார். இவர்எழுதிய 'கிதாபுல் மாலிக்கி' எனும் நூலில் வில்லியம் ஹார்வேக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே குருதிச் சுற்றோட்டம் பற்றி விளக்கப்பட்டது.

புகழ் பெற்ற மருத்துவ மேதையான இப்னு ஸீனாவின் கானூன் எனும் நூலின் தோற்றம் வரை மருத்துவத்துறையில் புகழ் பெற்ற நூலாக கிதாபுல் மாலிக்கி விளங்கியது.

இவ்வாறு முஸ்லிம்களால் வளர்க்கப்பட்ட மருத்துவக்கலை பிற்பட்ட காலங்களில் அவர்களினால் கைவிடப்பட்டதினால் மேற்கத்தையவர்களும் பிற மதத்தவர்களும் அந்த மருத்துவ பாரம்பரியங்களை சுதந்திரமாகப் பெற்று அதனை வளர்க்க முற்பட்டனர்.

வானவியல்

வானவியல் என்பது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அவற்றின் பருமன், நகர்வு முதலான அம்சங்கள் பற்றி பேசும் துறையாகும். வானுலகின் அமைப்பு, சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள் என்பவற்றின் வடிவமைப்பு, அவற்றின் பருமன், நட்சத்திரங்களின் எண்ணிக்கை, அவற்றின் நகர்வு, அவற்றுக்கிடையிலான தூரம், சூரிய குடும்பம், பால்வெளி வீதி, வானவியல் அட்டவணை முதலான பல அம்சங்கள் வானவியற் கலைப் பரப்ப எல்லையுள் அடங்கும்.

இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அறேபியர் வாழ்வு வானவியலுடன் தொடர்பு கொண்டிருந்தது. அறேபியாவின் மப்பும் மந்தாரமும் இல்லாத தெளிவான வானம், வானவியல் பற்றிய சரியான அவதானங்களைப் பெற அறேபியர்க்குப் பெரிதும் உதவியது. பாலைவனத்தினூடாகச் சென்ற வர்த்தகப் பாதைகளை அடையாளங் காண நட்சத்திரங்களே அவர்களுக்குப் பெரிதும் உதவின. நட்சத்திரங்களுடன் அவர்களுக்கு இருந்த நெருக்கமான உறவின் காரணமாக அவர்களில் சிலர் நட்சத்திரங்களை வணங்கினர்.அவர்களின் வாழ்க்கையுடன் நட்சத்திரம் கொண்டிருந்த இத்தகைய தொடர்பு வானவியல் பற்றிய சில தகவல்களை இஸ்லாத்துக்கு முன்பிருந்தேஅறிந்து வைத்திருக்க உதவியது.


வானியல் துறையில் முஸ்லிம்கள் ஈடுபட்டமைக்கான காரணங்கள்

01. சர்வதேச வர்த்தகத்திலும் கடல் பிரயாணத்திலும் புகழ் பெற்று விளங்கிய அராபியர் காலநிலை பற்றி அறிந்து தமது கடல் பிரயாணத்தை மேற்கொள்வதற்கும் காலத்தைக் கணித்து தமது வர்த்தகத்தைத் திறம்பட மேற்கொள்வதற்கும் அவர்களுக்கு வானியல் அறிவு அவசியப்பட்டமை.

02. வானத்தைப் பற்றியும், நட்சத்திரங்கள், கோள்கள், மேகங்கள் பற்றியும் அங்கு கூறப்பட்ட கருத்துக்களால் அவர்கள் தூண்டப்பட்டமை. அல்குர்ஆன் பின்வருமாறு வினவுகிறது.

'தங்களுக்கு மேல் இருக்கும் வானத்தை அவர்கள் பார்க்கவில்லையா? எத்தகைய வெடிப்புக்களும் இல்லாமல் நாம் எவ்வாறு அதனை நட்சத்திரங்களைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்திருக்கிறோம்.'(50 : 06)

'அவனே (பொழுதை) விடியச் செய்பவன். அவனே (நித்திரை செய்து நீங்கள்) சுகமடைவதற்காக இரவை ஆக்கினான். (நீங்கள் காலத்தின்) கணக்கை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் ஆக்கினான்.' (6: 96)

'உங்களுக்காக நட்சத்திரங்களை அமைத்தவனும் அவனே. தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் அவைகளைக் கொண்டு நீங்கள் வழியறிந்து செல்கிறீhகள்' (6: 97)

இவ்வாறான வசனங்களால் தூண்டப்பட்ட முஸ்லிம்கள் வானியல்பற்றிய அறிவைத் தேடுவதை சமய சிந்தனையின் ஓர் அங்கமாகக் கருதினர்.

03.பள்ளிவாயில்களை அமைப்பதற்கென கஃபா இருக்கும் திசையை அறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டமை.

04. ஐங்காலத் தொழுகையை நிறைவேற்ற வேண்டிய நேரங்கள், நோன்பு நோற்பதற்கும் பெருநாள் கொண்டாடுவதற்குமான தலைப்பிறையை அறிய வேண்டியிருந்தமை, ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற வேண்டிய காலம் என்பவற்றை அறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டமை.

வானியல் துறையின் வளர்ச்சி


குலபாஉர் ராஷிதூன்கள் காலத்திலும் உமையாக்கள் காலத்திலும் நாடடின் நிர்வாகம், சமூக வாழ்வு போன்ற துறைகளில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டியேற்பட்டதால் விரல் விட்டு எண்ணக்கூடிய சில முஸ்லிம்களே விஞ்ஞானக் கலைகளில் ஆர்வம் காட்டினர். உமையா ஆட்சியின் இறுதிக்காலப் பகுதியில் அறிவு ஆராய்ச்சித்துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டதால் அப்பாஸியர் காலத்தில் நிறுவப்பட்ட பைத்துல் ஹிக்மாவின் துணையுடன் முஸ்லிம்கள் துரிதமாக முன்னேறினர். பிற மொழி நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டதால் பாரசீக, கிரேக்க, இந்திய வானியல் கருத்துக்கள் அவர்களுக்குக் கிடைத்தன. அத்துடன் அப்பாஸிய கலீபாக்களும் வானியல் துறைக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர். இதனால் பைத்துல் ஹிக்மாவின் ஒரு அம்சமாக இருந்து அரச ஆதரவுடன் இத்துறை வளர்ச்சி கண்டது. முஸ்லிம்கள் முன்னைய வானிலை ஆராய்ச்சியாளர்களது கருத்துக்களை நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றில் காணப்பட்ட பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தி விட்டதுடன் புதிய கருத்துக்களையும் வெளியிட்டனர்.

கலீபா மன்சூரின் காலத்தில் இந்திய வானியல் அரேபிய முஸ்லிம்களுக்கு முதன்முறையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கி.பி 770இல் 'மங்கா'எனும் பெயர் கொண்ட இந்திய வானியல் அறிஞரை 'யாகூப் அல் பஸாரி'என்பவர் கலிபா மன்சூருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த அறிஞர் தமமோடு கொண்டு வந்திருந்த 'சித்தாந்த' எனும் சமஸ்கிருத வானியல் நூல்'முகம்மத் இப்னு இப்றாஹிம் அல் பஸாரி' என்பவரால் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டது. அந்த மொழி பெயர்ப்பைத் தொடர்ந்து இஸ்லாத்தில் விஞ்ஞான அடிப்படையிலான வானியல் ஆராய்ச்சி ஆரம்பமானது. இம்மொழி பெயர்ப்பு முஸ்லிம்களின் வானவியற் கலையின் வளர்ச்சிக்குப் பெருந் துணையாகியது.

மன்சூருக்கு அடுத்து வந்த அப்பாஸிய கலீபாக்களும் வானியல் துறை வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தினர். வானியல் துறை அறி;ஞர்களுக்கு சமுக மட்டத்தில் அதிக மதிப்பு இருந்தது. அவர்களுக்கு சம்பளம், உணவு, மற்றும் வசதிகள் அரச செலவில் வழங்கப்பட்டன.

கலீபா ஹாரூன் ரஷீதீன் காலத்தில் ஈரானிய வானியல் அரேபிய முஸ்லிம்களுக்கு முதன்முறையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கலீபாவின் நூலகராகக் கடமையாற்றிய 'அல் பழல் இப்னு நௌபக்த்'ஈரானிய வானியல் நூல்களை கலீபாவுக்கு அரேபியில் மொழிபெயர்த்துக் கொடுத்தார்.

கலிபா மஃமூனின் காலத்தில் ஏராளமான கிரேக்க வானியல் நூல்கள் அரேபியில் மொழிபெயர்க்கப்பட்டன. பைத்துல் ஹிக்மாவில் மொழி பெயர்ப்புகளுக்காகவும் வானிலை அவதானத்துக்காகவும் தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தனி நபர்கள் சிலரும் மொழி பெயர்ப்பில் ஆர்வம் காட்டினர். தொலமியின் 'அல் மஜெஸ்ட்' அரபு மொழியில் பல முறை மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றுள் ஹஜ்ஜாஜ் இப்னு மாதரினதும், ஹுனைன் இப்னு இஸ்ஹாக்கினதும் மொழிபெயர்ப்புக்கள் பிரபல்யம் வாய்ந்தவை. அத்துடன் கலிபாவும் செல்வம் படைத்த சில் தனி நபர்களும் முக்கிய நகர்களில் பல வானியல் அவதான நிலையங்களை நிறுவினர். பக்தாத், டமஸ்கஸ், இஸ்பஹான் முதலிய நர்களில் இவ்வாறான வானியல் அவதான நிலையங்கள் நிறுவப்பட்டன.

மிகச் சரியாக அவதானிப்பதிலும், மிகச் சரியான முடிவுகளை எடுப்பதிலும் முஸ்லிம் வானவியலாளர்கள் அதிக கவனம் செலுத்தினர். அதனால், தொடர்ந்து நீண்ட அவதானங்களை மேற்கொண்டனர். சில அவதானங்கள் தொடர்ந்து நாற்பது வருடங்கள் வரை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிரேக்க அறிஞர்களின் அவதானங்களை மறுபரிசீலனை செய்தே ஏற்றனர். இதனால், கிரேக்க அறிஞரான தொலமி உட்பட பலரது அவதானங்கள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. பைத்துல் ஹிக்மாவின் வானிலை அவதான நிலையத்தில் சூரிய கிரகணத்தின் சரிவு, சூரிய வருடத்தின் மொத்த நாட்கள், சூரியன் பூமத்திய ரேகையைத் தாண்டும் நான் போன்றன அவதானிக்கப்பட்டன.

கலீபா மஃமூன் போன்ற ஆட்சியாளர்களும் பின் வந்தவர்களும் அளித்த ஊக்கம் காரணமாக பல விஞ்ஞானிகள் உருவாகினர். அவர்கள் தாம் திரட்டிய வானவியற் தகவல்களைத் தொகுத்து நூல் வடிவில் தந்துள்ளனர்.

வானியல் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த அறிஞர்கள்


வானியல் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்த அறிஞர்களுள் இப்றாஹீம் அல்பஸாரி, அல் குவாரிஸ்மி , அல் பர்ஹான்p, அல்பத்தானி, அபுல் வபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

இப்றாஹிம் அல் பஸாரி


வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர்களுள் இப்றாஹீம் அல் பஸாரி முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர். 'அஸ்ட்;ரோலோப்' வானோக்கு கருவியை முதன்முதலில் இவரே திருத்தியமைத்தார். கிரேக்கர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இக் கருவியில் இவர் பல திருத்தங்களைச் செய்தார். மேற்கு நாட்டவர்கள் 17ஆம் நூற்றாண்டுவரை இக்கருவியை கடற் பிரயான அலதானங்களுக்காகப் பயன்படுத்தினர்.

அல் குவாரிஸ்மி

மத்தியகால முஸ்லிம் வானியலாளர்களுள் இவர் சிறப்பாகக குறிப்பிடத்தக்கவர் ஆவார். 'சிஜ்' என்ற பெயரில் பெறுமதி வாய்ந்த ஒரு வானியல் அட்டவணையைத தயாரித்தார். 'அஸட்ரோலோப்' கருவியைப்பற்றி இரு நூல்களை எழுதியுள்ளார்.

01. கிதாபுல் அமல் அல் அஸ்தர்லோப் (தயாரிக்கும் முறை)

02. கிதாபுல் அமல் பில் அஸ்தர்லோப் (உபயோகிக்கும் முறை)

அல் பர்ஹானி

இவர் கி.பி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற வானியல் அறிஞராவார். கலீபா முதவக்கிலின் ஆணையின் பேரில் 'புஸ்தாத்' எனும் இடத்தில் நைலோ மீற்றர் (நைல் நதி பொங்கி எழும் உயரத்தை அறிய உதவும் கருவி) அமைக்கப்பட்ட பொழுது அதனை மேற்பார்வை செய்தார். 'அல் முத்கில் இலா இல்மி ஹயாத்தில் அப்லாக்' (வானியல் விஞ்ஞானத்தின் மூலகங்கள்) எனும் பெயரில் நூல் ஒன்றை எழுதினார்.

அல் பதானி


ஐரோப்பியரிடையே 'அல் படனியஸ்' எனும் பெயரில் அறிமுகமாயிருந்த அல் பதானி முஸ்லிம் உலகம் தோற்றுவித்த மிகப் பெரும் வானியல் அறிஞர்களுள் ஒருவராவார். அல் பதானியும் அல் பர்ஹானியும் 'ஐரோப்பியர்களின் ஆசிரியர்கள'; என மதிக்கப்பட்டவர்கள். 30 வருடங்களுக்கு மேலாக கோள்களையும் நட்சத்திரங்களையும் அவதானித்து அவற்றின் இயக்கங்களை ஆராய்ச்சி செய்து அதனடிப்படையில் புகழ் பெற்ற அல் பதானி அட்டவணைகளை தயாரித்தார். ஒரு வருடம் என்பது 365 நாட்கள், 3 மணித்தியாலங்கள், 46 நிமிடங்கள், 24 வினாடிகள் என்று நிறுவினார். சிஜ்ஜுல் ஹபி என்ற பெயரில் வானியல் நூல் ஒன்றையும் எழுதினார்.

அபுல் வபா


அல் பதானிக்குப் பின்னர் கி.பி 10ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற வானியலாளராக விளங்கியவர் 'அல் வபா' ஆவார். வானியல் துறையில் மட்டுமன்றி கணிதத் துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் தொலமின் சந்திரன் பற்றிய கொள்கையில் பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியதோடு சரியான கருத்துக்களையும் விளக்கினார். 'சிஜ்ஜுஷ் ஷாமில்' எனும் வானியல் அட்டவணைகளைக் கொண்ட நூல் இவரது விடாமுயற்சிக்கும் கூர்மையான அவதானத்திற்கும் சிறந்த சான்றாக விளங்குகின்றது.

வானியல் துறைக்கான முஸ்லிங்களின் பங்களிப்பு கிரேக்கர்களின் தத்துவரீதியான சிந்தனைகளையும் இந்தியர்களின் திரிகோண கணித முறைகளையும் மிஞ்சக் கூடிய வகையில் காணப்படுகிறது. முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட ஏராளமான வானியல் உபகரணங்கள் ஐரோப்பாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு ஐரோப்பியரால் மேலும் திருத்தியமைக்கப்பட்டு பூரணத்துவம் பெற்றன.

சர்வதேச வானவியலாளர் சங்கத்தினர் 1935இல் ஒன்றுகூடி சந்திரனின் வடிவமைப்பை 672 அலகுகளாக வகுத்தனர். அவற்றில் 609 அலகுகளுக்கு இத்துறையின் வளர்ச்சிக்கு உதவிய வானவியலாளர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளனர். சந்திரனின் முகப்பு 25 அலகுகளாக வகுக்கப்பட்டுள்ளது. அதில் 13 அலகுகளுக்கு முஸ்லிம்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் வருமாறு.

1. மாஷா அல்லாஹ்

2. கலீபா மஃமூன்

3. அல்பர்கானி

4. அல்பதானி

5. ஸாபித்

6. அப்துர்; ரகுமான் அஸ்ஸூபி

7. அல்ஹஸன் அல்ஹைதம்

8. அஸ்ஸர்காலி

9. ஜாபிர் பின் அப்லாஹ்

10. நஸ்ருத்தீன் தூஸி

11. அல் பித்ருஜி

12. அபுல் பிதா

13. உலூஹ் பேக்

முஸ்லிம் அறிஞர்கள் வானவியற் துறையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினை சர்வதேச வானவியலாளர்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதையே இவை காண்பிக்கின்றன.

புவியியல் துறை

புவியின் மேற்பரப்பு, உருவம், பௌதீக உறுப்புக்கள், எல்லைகள், காலநிலை, உற்பத்திகள், குடிமக்கள் போன்றவற்றை விரிவாக ஆராயும் ஒரு துறையே புவியியல் ஆகும்.

தூண்டிய காரணங்கள்

01 அல் குர்ஆனின் தூண்டுதல்

இஸ்லாமிய தூதை நிறுவுவதற்காக புவியியல் பற்றியும் புவியில் வாழ்ந்து போன பல சமூகங்கள் பற்றியும் அல்குர்ஆன் எடுத்துக்காட்டியும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வுகள் இடம் பெற்ற தளங்களைச் சுட்டிக்காட்டி அவ்விடங்களைத் தேடிப்பார்க்கும் ஆவலை மனிதர்களிடத்தில் தூண்டியது.'கஹ்பு' எனும் அத்தியாயம் சுட்டிக்காட்டுகின்ற குகை வாசிகள் தங்கிய தூபான் வெள்ளத்தின் போது நூஹ் அலை (ஸல்) ஏறி இருந்த கப்பல் சென்றடைந்த 'ஜூதி' எனும் மலை, ஆத் தமூத் கூட்டங்கள் வாழ்ந்த இடம், மலைகளைக் குடைந்து செய்த வீடுகளில் வாழ்ந்தவர்கள், அழிக்கப்பட்ட இடம் என்பன பற்றி அங்கு குறிப்பிட்டவற்றை ஆராய்ந்து பார்க்க முஸ்லிம் அறி;ஞர்கள் தூண்டப்பட்டனர்.

'அவன் தான் வானங்களைத் தூண் இன்றியே சிருஷ்டித்திருக்கிறான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள. பூமி உங்களைக் கவிழ்த்து விடாதிருக்கும் பொருட்டு மலைகளை அதில் நாட்டிவைத்து விதம்விதமான ஜீவராசிகளையும் அதில் பரப்பினான';.

(31:10)

'அவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து இவைகளைப்பார்க்க வில்லையா? அவ்வாறு பார்ப்பார்களாயின் உணர்ந்து கொள்ளக் கூடிய இருதயங்கள் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.' (22:46)

இவ்வாறு அல் குர்ஆனில் புவியியலுடன் தொடர்புடைய மலைகள்;, ஆறுகள், மணல் மேடுகள், மழைமேகங்கள், உஷ்ண, குளிர் சுவாத்தியங்கள், ஆழ்கடலகள், கனிப்பொருட்கள், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், தாவரங்கள், குடிசனப் பரம்பல், விவசாயப் பயிர்ச் செய்கை, அணைக்கட்டுக்கள் முதலான பல அம்சங்கள் பற்றிக் குறிப்பிட்டு அவற்றை ஆராய்ந்து பார்க்குமாறு தூண்டியது.

02. ஹஜ்ஜூக் கடமை:

முஸ்லிம்கள் ஹஜ்ஜுக்கடமையை நிறைவேற்றுவதற்கு, தூரப்பிரதேசங்களில் இருந்தெல்லாம் மக்காவுக்குச் செல்ல வேண்டியிருந்தது இஸ்லாமிய சாம்ராச்சியத்தின் நாலா புறங்களில் இருந்தும் மக்கா நோக்கி வரும் பிரதான பாதைகள் ஊடறுத்துச் செல்லும் பிரதேசங்கள் அங்குள்ள தட்பவெப்பநிலை, தங்குமிட வசதிகள் என்பன பற்றி பிரயாணிகளும், வர்த்தகர்களும் வழங்கும் தகவல்களை மையமாக வைத்து வழிகாட்டி நூல்கள் தொகுக்கப்பட்டன. ஹஜ்ஜுக்காக மக்காவில் ஒன்று கூடியர்கள் முஸ்லிம் உலகின் அரசியல், பொருளாதார, சமூகவியல் பற்றி கலந்துரையாடவும் தமது பிரயான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அது வாய்ப்பை அளித்தது. இவ்வகையில் ஹஜ்ஜுக் கடமை மக்களின் புவியியல் அறிவை தூண்டவும் விருத்தியாக்கவும் வழி கோலியது.

03. கிப்லா திசையை அறிய வேண்டியிருந்தமை

தொழுகையை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் தான் வாழ்கினற இடங்களில் இருந்து கஃபா இருக்கும் திசையை அறிய வேண்டியிருந்தது. இதற்காக புவியின் நீள அகல கோடுகள் பற்றியும், பூமத்திய ரேகையில் இருந்து எவ்வளவு தூரத்தில் நாம் இருக்கிறோம் என்பது போன்ற தகவல்களை அறிய வேண்டி ஏற்பட்டதால் முஸ்லிம்கள் புவியியல் கலையில் ஆர்வம் காட்டினர்.

04. இஸ்லாமிய இராச்சிய விஸ்தீரணம்

உலகில் பரந்துபட்ட இஸ்லாமிய பேரரசு ஒன்றை நிறுவுவதற்கு நாடுகளைப் பற்றிய புவியல் அறிவு அரேபிய முஸ்லிம்களுக்குத் தேவைப்பட்டது. முஸ்லிம் ஆட்சியாளர்கள் பிற ஆட்சியாளர்கள் மீது படையெடுத்துச் செல்வதற்கு முன் திரட்டிய புவியியல் விபரங்கள் ஆராச்சியாளர்களை அத்துறையில் மேலும் மேலும் ஆய்வுகள் செய்யத் தூண்டின.

05. வர்த்தகத்துறை ஈடுபாடு

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அரேபியர்கள் வர்த்தகத்தில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தனர், ஆழ் கடலும் அகன்ற நிலமும் அவர்களின் பிரயாணப் பாதைகளாக விளங்கின. இத்தகைய வர்த்தக ஈடுபாடு முஸ்லிம் நாடுகளைப் பற்றிய புவியியல் விபரங்களை அறிந்து கொள்ள அவர்களுக்குப் பெரிதும் உதவியது.

06. இயற்கைச் சூழல்


பாலைவனப் பிரதேசங்களில் வாழ்ந்த அரேபிய முஸ்லிம்கள் விண்மீன்களைப் பற்றியும் காலநிலை மாறுபாடுகள் பற்றியும் அராய்வதற்கு இயற்கைச் சூழல் வசதியாக அமைந்தது. பெரும்பாலும் மந்தை மேய்ப்பவர்களாக தொழில் செய்த அவர்கள் தம் மந்தைகளுக்குத் தேவையான புதிய புல்வெளிகளைத் தேடி அறிந்தமையால் பல்வேறுபட்ட நிலப்பகுதிகளை ஆராய வசதியேற்பட்;டது.

07. இஸ்லாமியப் பிரசாரம்

08. உலகைச் சுற்றிப்பார்க்க வேண்டிய ஆவல்

09. பிற மொழி நூல்கள் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டமை.




புவியியல் வளர்ச்சிக்கு முஸ்லிம் அறி;ஞர்களின் பங்களிப்பு


முஸ்லிம்கள் புவியியல் நூல்களை மொழிபெயர்ப்பதுடன் இல்லாது உலகின் நாலா பக்கங்களுக்கும் பிரயாணங்களை மேற்கொண்டு ஆய்வு செய்தனர். இதனால் கிரேக்க, பாரசீக, இந்திய, கருத்துக்களில் காணப்பட்ட பிழைகளைச் சுட்டிக்காட்டி நியாயமானதும் உண்மையானதுமான கருத்துக்களை ஆதாரபூர்வமாக முன்வைத்தனர். அவர்களது கருத்துக்கள் நூலுருவில் பதிக்கப்பட்டமையால் அவை நவீன சமூகத்திற்கும் வழிகாட்டிகளாக அமைந்தன.

அப்பாஸிய கலீபாக்கள் ஏனைய அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கு உதவியது போல புவியியல் துறையின் வளர்ச்சிக்கும் உதவியதால் இக்காலப்பகுதியில் புவியியல் துறை மேலும் முன்னேற்றமடைந்தது. புவியியல் துறையின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய முஸ்லிம் அறிஞர்களுள் ஹிஷாம் அல் கல்பி, அல்குவாரிஸ்மி, சுலைமான் தாஜிர், இப்னு குர்தாபிஹ், அல்யஃகூபி, இப்னு ஷஹ்ரயார், அல் மஸ்ஊதி, அல் முகத்தஸி, அல் பிரூனி, அல் இத்ரீஸி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.




ஹிஷாம் அல்கல்பி


மத்திய காலத்தில் புவியியல் வளர்ச்சிக்குப் பங்காற்றிய முஸ்லிம் அறிஞர்களுள் மிகப் பழைமை வாய்ந்தவர் ஹிஷாம் அல்கல்பி ஆவார். இஸ்லாத்துக்கு முற்பட்ட கால அரேபியாவின் வரலாற்றைத் தொகுத்துத் தந்துள்ளார் அவரால் எழுதப்பட்ட பத்து நூல்களுள் சில பகுதிகளே இன்று கிடைக்கக் கூடியனவாக உள்ளன.

அல் குவாரிஸ்மி


'அல் கோரித்ம்' என்ற இலத்தீன் பெயரில் ஐரோப்பியருக்கு அறிமுகமான அல் குவாரிஸ்மி அரேபிய புவியியல் விஞ்ஞானத்துக்கு பலமான அத்திவாரம் அமைத்தவராவார். இவரால் எழுதப்பட்ட ' கிதாபு சூறதுல் அர்ழ்' (புவியின் அமைப்பு) எனும் நூல் 14 ஆம் நூற்றாண்டு வரை முஸ்லிம் புவியியல் அறிஞர்களுக்கு உதவக் கூடிய ஒரு வழிகாட்டி நூலாக விளங்கியது. இந்நூலில் இவர் பூமியை ஏழு வலயங்களாகப் பிரித்துள்ளார். இவ்வாறான பிரிப்பு முறை தொலமியின் நூல்களில் கூட காணப்படவில்லை. கலீபா மஃமூனின் வேண்டுகோளுக்கிணங்க 70க்கு மேற்பட்ட அறிஞர்களால் தயாரிக்கப்பட்ட உலகப் படம் ஒன்றும் இந்நூலுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் படத்தை இன்று அந்த நூலுடன் பெற முடியாதுள்ளது.

இந்நூலிலே அவர் புவி கோள வடிவமானது என்ற கருத்தைப் பல ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார். இந்நூலை வாசித்த பின்பே 'கொலம்பஸ்'பூமி கோள வடிவமானதாக இருந்தால் மேற்குப் புறமாகச் சென்று கிழக்கை அடைய ஒரு பாதை இருக்க வேண்டும் எனக் கருதிப் புறப்பட்டு கி.பி. 1492 ஆம் ஆண்டில் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார்.

சுலைமான் தாஜிர்

புகழ்பெற்ற கப்பலோட்டியும் வர்த்தகருமான சுலைமான் தாஜிர் வர்த்தகத்தின் பொருட்டு இ;லங்கை, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். அந்நாடுகள் பற்றியும் தனது கடற் பிரயாணங்கள் பற்றியும் சிறந்த தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அல் மஸ்ஊதி

நபித் தோழர்களுள் ஒருவரான மஸ்ஊத் (றழி) அவர்களின் சந்ததியில் தோன்றிய அல் மஸ்ஊதி புவியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு புவியியல் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த ஓர் அறிஞராவார். மிகச் சிறு வயது முதலே உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் இளம் வயதிலேயே உலக யாத்திரையை ஆரம்பித்து விட்டார். இ;லங்கை, இந்தியா, சீனா, மடகாஸ்கர், துருக்கி, கிரியா, பலஸ்தீன், எகிப்து போன்ற பல்வேறு நாடுகளுக்குப் பிரயாணம் செய்துள்ளார். 'முஸ்லிம் உலகின் பூகோளக் குதிரை', 'அரேபியரின் ஹிரதோதஸ்', 'அரேபியரின் பிளினி' போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் இவர் ஏழு நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள்'முரூஜுத் தஹப்' (பொன் வயல்கள்), கிதாபுத் தன்பீஹ் வல் இஸ்ராப்' ஆகிய இரு நூல்களே இன்று கிடைக்கக் கூடியனவாக உள்ளன.

அல் பிரூனி

இவர் புவியியலில் மட்டுமன்றி, வரலாறு, கணிதம், வானியல், தாவரவியல், மருத்துவம் போன்ற துறைகளிலும் சிறந்து விளங்கினார். இவரால் எழுதப்பட்ட'கிதாபுல் ஹிந்த்' இந்தியா பற்றிய ஒரு பிரதேசப் புவியியல் நூல் ஆகும். இந்தியாவின் மத்திய கால புவியியல் வரலாற்றை அறிவதற்கு இந்நூல் மிகவும் துணைபுரிகின்றது.

புவியியலின் ஓர் அங்கமான பட வரைகலையிலும் (ஊயுசுவுழுபுசுயுPர்லு) அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். 1948 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாரிஸில் சர்வதேச கீழைத்தேய ஆராய்ச்சியாளர்கள் மகாநாடு கூடிய போது அல் பிரூனியின் ஆயிரமாம் ஆண்டு பூhத்;தியும் கொண்டாடப்பட்டது.

அல் முகத்தஸி

கி;.பி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அல் முகத்தஸி என்பவரும் சிறந்த புவியியல் அறிஞர்களுள் ஒருவராவார்;. பைத்துல் முகத்தஸ் அமைந்திருக்கும் ஜெரூஸலத்தில் இவர் பிறந்தமையால் 'அல் முகத்தஸி' அல்லது 'அல் மக்திஸி' என்று அழைக்கப்பட்டார். சுமார் இருபது ஆண்டுகளைப் பிரயாணங்களிலேயே கழித்த இவர் பிரயாணங்களுக்காக மாத்திரம் சுமார் 10 000 திர்ஹம'களைச் செலவிட்டுள்ளார். இவர் தான் எழுதிய 'அஹ்ஸனுத் தகாஸிம்' எனும் நூலில் இஸ்லாமிய நாடுகளை 14 மாகாணங்களாகப் பிரித்து ஆராய்ந்துள்ளதுடன் ஒவ்வொரு மாகாணத்தைப் பற்றியும் எளிதாக விளக்கும் பொருட்டு தேசப் படங்களையும் இணைத்துள்ளார். தேசப் படங்களில் பாதைகள் சிவப்பினாலும், மணற்றரைகள் மஞ்சளினாலும், கடல்கள் பச்சையினாலும், நதிகள் நீலத்தினாலும், மலைகள் சாம்பலினாலும் நிறந் தீட்டப்பட்டிருந்தன.

புவி கோள வடிவை உடையதென்றும், மத்திய கோட்டால் அது இரு சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்தென்றும் அது 360 பாகை பரிதியையும் மத்திய கோட்டிலிருந்து ஒவ்வொரு முனைக்கும் 60 பாகைகளைக் கொண்டதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்னு ஷஹ்ரயார்

சிறந்த யாத்திரிகராகவும் திறமை வாய்ந்த கப்பலோடடியாகவும் மதிக்கப்படும் இப்னு ஷஹ்ரயார் என்பவரும் குறிப்பிடத்தக்க புவியியல் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இரங்கை , இந்தியா, சீனா போன்ற நாடுகள் உட்பட இற்து சமுத்திரத்திலுள்ள பல நாடுகளுக்குப் பிரயாணம் செய்த தனது பிரயாண அனுபவங்களைத் தொகுத்து, 'அஜாயிபுல் ஹிந்த்' (இந்தியாவின் அற்புதங்கள்) என்ற பெயரில் ஒரு நூலை எழுதினார்.

அல் யஃகூபி

மிகச் சிறந்தபுவியியல் எழுத்தாளரான அல் யஃகூபி இந்தியா முதல் வட மேற்கு ஆபிரிக்கா வரை நீண்ட பிரயாணங்களை மேற்கொண்டவர். இவர் தனது ஆராய்ச்சிகளையும் பிரயாண அனுபவங்களையும் வைத்து 'கிதாபுல் புல்தான்' (நாடுகள் பற்றிய நூல்) என்ற பெயரில் நூலொன்றை வெளியிட்டார்.

அல் இத்ரீஸி

புவியியல் அறிவிலும் ஆராய்ச்சியிலும் தனித்துவம் வாய்ந்த ஒருவராக விளங்கிய அல் இத்ரீஸி முதன் முதலில் முறையான உலகப் படத்தை வரைந்த பெருமையைப் பெறுகிறார். இப்படம் இன்று லண்டன் நூதன சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இப்னு குர்தாபிஹ்
ஆரம்ப கால முஸ்லிம் புவியியல் அறிஞர்களுள் ஒருவரான இப்னு குர்தாபிஹ் பக்தாத் நகரில் பிரதம தபால் அதிகாரியாகக் கடமையாற்றிய காலத்தில் புவியில் துறையில் ஆர்வம் கொண்டார்.இவர் எழுதிய 'கிதாபுல் மஸாலிக் வல் மமாலிக்' (பாதைகளும் இராச்சியங்களும் பற்றிய நூல்) அறபு உலகின் முக்கிய வர்த்தகப் பாதைகளைப் பற்றிக் கூறுவதுடன் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற தூரப் பிரதேசங்களைப் பற்றிய விபரங்களையும் பல்வேறுபட்ட இஸ்லாமிய நாடுகளின் நிருவாக அமைப்பு, தபால் விநியோக முறை, பிரயாணம் செய்வதற்கான பாதைகள், வரி விதிப்பு முறைகள் போன்ற விபரங்களையும் தருகின்றது. இந்நூலில் உண்மைக்குப் புறம்பான சில அம்சங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் இந்நூல் பிற்காலப் புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் உதவியதை மறுப்பதற்கில்லை.

வரலாறு
இஸ்லாத்தில் வரலாற்றுக் கலையானது, இஸ்லாமியக் கருத்துக்கள், உணர்வுகளின் தூண்டுதலின் அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்தது. வரலாற்றுக் கலையில் முஸ்லிம்கள் ஆர்வம் செலுத்தியமைக்குப் பின்வரும் அம்சங்கள் தூண்டுதல்களாக அமைந்தன.

1. அல்குர்ஆனின் தூண்டுதல்

அல்குர்ஆன் முன்னைய நபிமார்களின் வரலாறுகளையும் முன்னைய சமூகங்களின் சரித்திர நிகழ்வுகளையும் குறிப்பிடுவதன் மூலமும் பூமியில் பயணம் செய்து முன்னைய சமூகங்கள் இறைவனின் வழிகாட்டலைப் புறக்கணித்ததால் அவர்களுக்கு நிகழ்ந்த பயங்கரத் தண்டனைகளைச் சித்தரிக்கும் சிகன்னங்களைப் பார்த்துப் படிப்பினை பெறும்படி மனிதர்களைப்பணிப்பதன் மூலமும் முஸ்லிம்கள் வரலாற்றுக் கலையில் ஆர்வம் செலுத்தத் தூண்டுதலாக அமைந்தது.

2. நபியவர்களின் வரலாறு, அவர்கள் கலந்து கொண்ட யுத்தங்கள்;, அவர்களது நடைமுறைகள் பற்றி அறிந்து கொளவதில் முஸ்லிம்கள் காட்டிய ஆர்வம்.

3. முஸ்லிம்களால் புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களதும் மக்களதும் வரலாற்றை அறிவதில் காட்டப்பட்ட ஆர்வம்.

4. தத்தமது குடும்பத்தினதும் பரம்பரையினதும் வரலாற்றை அறிவதில் இயல்பாகவே அரேபியரிடம் இருந்த ஆர்வம்.

5. அறிவைத் தேடிப் பெற்றுக் கொள்வதன் அவசியம் குறித்த இஸ்லாத்தின் போதனைகள்.


இஸ்லாத்தின் தோற்றத்துக்கு முன்னர் அரேபியர் வரலாற்றுடன் தொடர்புடைய பல தகவல்களை நினைவில் வைத்திருந்தனர். குறிப்பாக தமது பரம்பரை பற்றிய தகவல், வம்சாவழிக் குறிப்புகளை அவர்கள் பாதுகாத்து வந்தனர். அறபு சமூகத்தில் நடைபெற்ற கோத்திரச் சண்டைகள் பற்றிய வரலாற்றையும் தம் முன்னோர்கள் பற்றிய நிகழ்வுளையும் கர்ண பரம்பரைக் கதைகளாகக் கூறி வந்தனர். தமது கோத்திர வீரர்களின் வீரச் செயல்களைக் கஸீதாக்களாகப் பாடி மகிழ்ந்தனர்.

இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர் நபி (ஸல்) அவர்களின் வாக்குகள், வாழ்க்கையின் நிகழ்வுகள், அவர்கள் பங்கு பற்றிய போர்கள் பற்றிய தொகுப்புகளே ஒழுங்கான வரலாற்று நூல்களின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தன. ஹி;ஜ்ரி 02ஆம் நூற்றாண்டில் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டன. அவை வம்சாவழிக் குறிப்புகள், மரபு வழிக் கதைகள், கவிதைகள், கடிதங்கள், உடன்படிக்கைகள், குர்ஆன், ஸுன்னா தரும் தகவல்கள் முதலானவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டன. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இடம் பெற்ற நிகழ்வுகளைப் பற்றிய பதிவேடுகள் போல குர்ஆனும் ஸுன்னாவும் அமைந்திருந்தன. எனவே, நபி (ஸல்) அவர்களை மையமாக வைத்து குர்ஆன் ஸுன்னாவின் துணையுடன் முதலில் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டன. நபியவர்கள் பங்குபற்றிய போர்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்து 'மகாஸி' எனும் தலைப்பிலும் அவர்களின் வாழ்க்கைத் தகவல்களைத் தொகுத்து 'ஸீரா' எனும் தலைப்பிலும் எழுதினர்.'ஸீரா' என்று அழைக்கப்பட்ட வரலாற்றுத் துறை ஆய்வே பின்பு தாரீக் எனப்பட்ட வரலாற்றுக் கலையாக வளர்ச்சியுற்றது. எனவே, நபியவர்களின் வாழ்வைப் பற்றி அறபு வரலாற்றுக் கலை தோற்றம் பெற்றதால் மதீனா நகர் ஆரம்பகால வரலாற்றுக் கலையின் மையமாக விளங்கியது.

ஆரம்ப காலத்தில் ஹதீஸ், தப்ஸீர் போன்ற இஸ்லாமியக் கலைகளுடன் இணைந்தே வரலாற்றுக் கலை வளர்ச்சியடைந்தது. ஹி;ஜ்ரி 02ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே ஏனைய கலைகள் போல வரலாறும் ஒரு தனிக் கலையாக வளர்ச்சி கண்டது.

மதீனாவில் வரலாற்றுக் கலை வளர்ச்சி பெறுகின்ற காலப் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட கூபா, பஸரா போன்ற நகர்களிலும் இக்கலை வளர ஆரம்பித்தது. எனினும், அங்கு ஆரம்பத்தில் ஜாஹிலி;யாக் கால அறபு வரலாற்றை ஒத்ததாகவே இக்கலை வளர்ந்தது. ஜாஹிலி;யாக் காலத்தில்'அய்யாமுல் அறப்' எனப்பட்ட போர்க் காலத் தினங்கள், தத்தம் பரம்பரைச் சிறப்பு என்பன பேசப்பட்டது போல் கூபா, பஸரா நகர்களில் குடியேறிய இவர்களும் போர்க்களங்களில் தாம் இஸ்லாத்துக்காகச் செய்த வீர தீரச் செயல்கள், தியாகங்கள் என்பனவற்றுடன் தம் பரம்பரை பற்றியும் பேசினர். ஹி;ஜ்ரி 02ஆம் நூற்றாண்டளவில் இப்புதிய நகர்களில் பகுத்திறிவுச் சிந்தனை செல்வாக்குப் பெறலாயிற்று. எனவே, ஏனைய துறைகளில் ஏற்பட்டது போலவேவரலாற்றுத் துறையிலும் பகுத்திறிவுச் சிந்தனை செல்வாக்குச் செலுத்தியது.

வரலாற்று நூல்கள் எழுத்து வடிவு பெறுவதற்கு முன் வரலாற்றுத் தகவல்கள் வாய்மொழி மூலமாகவே வழங்கப்பட்டன. 'அவனா பின் அல் ஹகம்'வாய்மொழி மூலம் வரலாற்றுத் தகவல்களை வழங்கியவர்களில் முக்கியமானவர் ஆவார். எழுத்து வடிவில் வரலாற்று நூல்களைத் தந்தவர்களுள் அலி பின் முஹம்மது பின் அப்துல்லாஹ் மதாயினி குறிப்பிடத்தக்கவர். மதாயினியின் வரலாற்று ஆக்கங்கள் பி;ற்கால எழுத்தாளர்கள் பலரில் செல்வாக்கைப் பதித்துள்ளன. ஸ்பானிய எழுத்தாளரான இப்னு அப்து ரப்பாஹி, கூபா வாசியான ஹிஷாம் பின் முஹம்மத் கல்பி என்பவர்களின் அக்கங்களில் மதாயினியின் தாக்கம் காணப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட வரலாற்று நூல்களுள் இப்னு இஸ்ஹாக் என்பவர் எழுதிய 'ஸீரதுன் நபி' என்றழைக்கப்ட்ட நபி (ஸல்) அவர்களின் வரலாற்று நூல் வாசகர்களுக்குக் கிடைப்பதில்லை. நபியவர்கள் பற்றி எழுதப்பட்ட நூல்களுள் இன்று வாசகர்களுக்குக் கிடைக்கக் கூடிய மிகப்பழைய நூல் 'இப்னு ஹிஷாம்' என்பவரால் எழதப்பட்ட 'ஸீரதுன் நபி'என்ற நூலாகும். நபியவர்கள் பங்கு கொண்ட போர்கள் பற்றிய நூல் ஒன்றை வாகிதி என்பவர் 'கிதாபுல் மகாஸி' என்ற பெயரில் எழுதினார். மகாஸி நூல்களை விட ஸீரா நூல்களிலேயே அதிகமான தகவல்கள் அமைந்திருந்தன.

ஹி;ஜ்ரி 02ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்களில் இப்னு ஹிஷாம், மதாயினி, ஹிஷாம் பின் முஹம்மத் கல்பி, முஹம்மத் பின் உமர் அல் வாகிதி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

ஹிஷாம் பின் முஹம்மத் கல்பி 150க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அந்நதீம் என்பவர் தனது பிஹ்ரிஸ்த் என்ற நூல் அட்டவணையில் கல்பியின் நூல்கள் 129இன் பெயர்களைக் குறித்துள்ளார் அவற்றுள் 03 நூல்கள் இன்றுவாசகர்களுக்குக் கிடைக்கின்றன. ஹி;ஜ்ரி 03ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஹ்மத் பின் யஹ்யா அல் பலாதூரி 'புதூஹுல் புல்தான்' உனும் வரலாற்று நூலை எழுதினார். முஸ்லிம்களின் படைப்புக்கள் பற்றி இந்நூலில் விபரித்துள்ளார்.