இலங்கை சட்டக்கல்லூரியின் 2013ஆம் கல்வியாண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறும்.
கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இந்தப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவணைகளும் குறித்த விண்ணப்பத்தாரிகளுக்கு தற்சமயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றது.